Published:Updated:

அக்காவின் பிறப்பே அபூர்வமானதுதான்! - சாந்தாவின் நினைவுகள் பகிரும் தங்கை சுசீலா

சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
சுசீலா

சாந்தாவின் நினைவுகள் பகிரும் சுசீலா...

அக்காவின் பிறப்பே அபூர்வமானதுதான்! - சாந்தாவின் நினைவுகள் பகிரும் தங்கை சுசீலா

சாந்தாவின் நினைவுகள் பகிரும் சுசீலா...

Published:Updated:
சுசீலா
பிரீமியம் ஸ்டோரி
சுசீலா

மருத்துவத் தொழிலை அறம் காக்கும் சேவைப் பணியாகச் செய்து, இத்துறையின் மாண்புக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்து மறைந்துள்ளார் மருத்துவர் சாந்தா. இவரது மறைவு மருத்துவத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. சென்னை அடையாற்றிலுள்ள புற்றுநோய் நிறுவனத்தை, புற்றுநோயாளிகளுக்கான சரணாலயமாக மாற்றியதில் சாந்தாவின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அளப்பரியது. இந்தச் சேவை தேவதைக்கு, உற்ற நிழலாக இருந்தவர் மூன்றாவது தங்கை சுசீலா மட்டுமே!

சகோதரியின் மறைவால் மீளா துயரில் தவிப்பவரை, புற்றுநோய் நிறுவனத்திலுள்ள சாந்தாவின் குடியிருப்பில் சந்தித்தோம். அக்காவின் புகைப்படத்தை கவலை தோய்ந்த ஆற்றாமையுடன் பார்த்தபடியே, அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தார்.

“வீட்டு வேலைகள் செய்ய வலியுறுத்தாத பெற்றோர், நன்றாகப் படித்து வெளியுலகத்தில் திறம்படச் செயல்படவே எங்களை ஊக்கப் படுத்தினர். அக்கா எப்போதும் படித்துக் கொண்டே இருப்பார். அளவோடுதான் பேசுவார். சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகச் சேர்ந்து, முதல் மாதச் சம்பளத்தில் எனக்கும் அக்கா விமலாவுக்கும் (சாந்தாவின் முதல் தங்கை) அவர் பாவாடைச் சட்டை வாங்கிக் கொடுத்தது பசுமையான நினைவு.

அக்காவின் பிறப்பே அபூர்வமானதுதான்! - சாந்தாவின் நினைவுகள் பகிரும் தங்கை சுசீலா

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய இந்தப் புற்றுநோய் நிறுவனத்தில் இணைந்த அக்கா, 1954 முதல் இங்கேயே தங்கிவிட்டார். நேரம் கிடைக்கும்போதுதான் எங்களைப் பார்க்க வருவார். ஆனால், தினமும் காலை 6 மணிக்குத் தவறாமல் தொலைபேசியில் எங்களிடம் உரையாடுவார். அதற்காகவே ஆவலோடு காத்திருப்போம். ‘புற்றுநோய் பற்றிய பயத்தைப் போக்கினாலே பாதி நோயைக் குணப்படுத்தி விடலாம். நம் குடும்பத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிப் பதுபோலவே, நம்மை நாடி வரும் ஒவ்வொருவருக்கும் சிகிச்சையளிக்க வேண்டும்’ என்றுதான் ஊழியர்களிடம் வலியுறுத்துவார். தான் சிகிச்சையளித்த நோயாளி களை அடிக்கடி சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்துவார்.

அக்காவுடன் இணைந்து புற்றுநோய் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என் பதே எனக்குப் பெருங்கனவாக இருந்தது. இதற்காக, அப்போது பணியில் இருந்த நிறுவனத் திலிருந்து விலகிவிட்டேன். ஆனால், மற்றொரு நிறுவனத்தில் எனக்கு உயர்பொறுப்பு கிடைக்கவே, ‘அதில்தான் வேலை செய்ய வேண்டும்’ என்று உறுதியாகக் கூறி விட்டார் அக்கா. 1995 முதல் கடைசி வரை, அக்கா ஊதியம் எதுவும் பெறாமல்தான் இங்கு பணியாற்றினார். அதைப் போன்ற சேவைப் பணியையே நானும் விரும்பியதால், எனக்கான வாழ்வாதாரத்துக்கு சேமிப்பு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், 40 ஆண்டுகளாக எனக்கு இந்த நிறுவனத்தில் வேலை கொடுக்காமல் இருந்தார். விடா முயற்சிக்குப் பலனாக, 2000-ம் ஆண்டு, புற்றுநோய் மையத்தில் நிதிக்குழுச் செயலக உறுப்பினராக எனக்குப் பொறுப்பு கிடைத்தது”

- தளர்வான குரலில் பேசும் சுசீலா, சாந்தாவின் மறைவால் புற்று நோய் நிறுவனப் பணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார்.

“அக்காவிடம் கற்ற அனுபவங்கள் தாம், ‘ஔவை இல்ல’த்தின் தலைவராகவும் என்னால் நன்றாகப் பணி செய்ய உதவுகிறது. புற்றுநோய் நிறுவனத்தில் கேன்டீனில் பணி யாளர்களுக்குத் தயாராகும் உணவு தான் அக்காவுக்கும். அதற்கான கட்டணத்தைப் பிடிவாதமாகச் செலுத்திவிடுவார். பழுப்பு நிற காட்டன் புடவையை மட்டுமே உடுத்தும் அக்கா, புடவை வாங்கும் போது அதேபோல எனக்கும் சேர்த்து வாங்குவார். அக்காவுக்குப் பிடித்த ஜவ்வரிசி கூழ் உணவை அவ்வப்போது நானே செய்து கொண்டுவந்து கொடுப்பேன்.

 சுசீலா
சுசீலா

இப்போதுவரையிலும் நானேதான் கார் ஓட்டுகிறேன். ஆனால், நான் கார் ஓட்டுவது குறித்து அக்காவுக்கு ரொம்பவே கவலை. ‘நீ ஓட்ட வேண்டாம். டிரைவர் வைத்துக்கொள். அப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கும்’ என்று கடைசிவரை என்னிடம் கவலையை வெளிப்படுத் திக்கொண்டே இருந்தார். அக்கா போன் செய்யும்போது, நான் வேறு வேலையிலிருந்து, போன் எடுக்காமல் போனால் பதறிப்போய் என்னைப் பார்க்க உடனே நேரில் வந்துவிடுவார்.

கோவிட் சூழலால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி குடியிருப்பில் இருந்தபடியே கடந்த மே மாதம் முதல் நிர்வாகப் பணிகளை மட்டுமே கவனித்தார். அக்கா இறப்பதற்கு முன்தினம், ‘மதிய உணவின்போது நம்மைப் பற்றிய பர்சனல் விஷயங்கள் பேசுவோம்’ என்றார். தனது உடல் நிலையைச் சரியாகக் கணித்தவராக, ‘இரவு நேரத்தில் என் உடல்நிலை பாதிக்கப்பட்டால் உனக்கு எப்படித் தகவல் சொல்வது? அந்நேரம் எப்படித் தனியாக வருவாய்?’ என்று கவலைப்பட்டார். பல விஷயங்கள் குறித்தும் பேசினோம். அன்று இரவே உடல்நிலை சரியில்லை என்று போனில் கூறினார். உடனே மருத்துவமனைக்கு விரைந்தேன். பதறியபடியே காத்திருந்தேன். ஆனால், விடியற்காலையில் அக்கா வின் மரணச் செய்தியைத்தான் மருத்துவர்களால் சொல்ல முடிந்தது. ஆனால், இந்த நிமிடம் வரையிலும் அக்கா மரணித்துவிட்டார் என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது.''

- விழியில் வழியும் நீரைத் துடைத்த படி மேற்கொண்டு பேச முடியாமல் மெளனமாகிறார் சுசீலா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism