Published:Updated:

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

பவானி தேவி
பிரீமியம் ஸ்டோரி
பவானி தேவி

‘வாள்வீச்சு’ பவானி தேவியின் பர்சனல்! #Motivation

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

‘வாள்வீச்சு’ பவானி தேவியின் பர்சனல்! #Motivation

Published:Updated:
பவானி தேவி
பிரீமியம் ஸ்டோரி
பவானி தேவி

விளையாட்டுத் துறையில் இந்தியா வின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான பவானி தேவி, வாள்வீச்சு பிரிவில் தேசத்தின் ஒற்றை அடை யாளம். ஒலிம்பிக் வரலாற்றில் வாள்வீச்சு போட்டியில் முதன்முறையாக இந்தியா பங்கேற்க காரணமாக இருந்ததால், சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் பவானி தேவியின் தோல்வியும், அவரது வளர்ச்சியில் மற்றுமொரு படியாகவே அமைந்தது.

சென்னையைச் சேர்ந்த பவானி தேவி, பயிற்சிக்காகக் கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியில் தங்கியுள்ளார். அங்கிருந்து அண்மையில் சென்னை வந்திருந்தவருடன் பர்சனல் பக்கங்கள் குறித்த ஓர் அரட்டை...

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

உணவு: வாரத் துல ஆறு நாள்கள் பயிற்சி இருக்கும். சமைக்கப் பிடிக் கும்னாலும் நேரம் இருக்காது. பெரும்பாலும் ஹோட்டல் உணவுதான் சாப்பிடுவேன். தினமும் மதியத்துல கொஞ்சம் சாதத்துடன் காய்கறிகள் கலந்த டயட் ஃபுட்டை சாப்பிடுவேன். மற்ற இரு வேளையும் நார்மல் உணவுதான்.

நேரம் கிடைக்கும்போது பாஸ்தா, டீ தயார் செய்வேன். அம்மா கைமணத்துல சாம்பார், ரசம், தென்னிந்திய அசைவ உணவுகள் பிடிக்கும். பாகற்காய் மட்டும் பிடிக்காது.

தனிமை: சில வருஷங்களாவே இத்தாலியில தனியாதான் தங்கியிருக்கேன். தனிமையான சூழல்ல சரியா யோசிக்கவும் திட்டமிடவும் முடிவதோடு, என்னுடைய ப்ளஸ், மைனஸ் பலவற்றையும் கண்டறிய முடியுது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்கள்ல குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாத போதுதான் தனிமையை உணர்வேன். உடல்நிலை சரியில்லாத நேரங்கள்ல நம்ம கூட யாராச்சும் இருந்தா உதவியா இருக்கு மேன்னு தோணும். உலக அரங்குல வாள்வீச்சு பிரிவில் இந்தியாவை முன்னிலைப்படுத்தணும். என்னுடைய இந்தக் கனவுக்கு ரொம்பவே உழைக்கணும். நிறைய கஷ்டங்களையும் தியாகங்களையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்.

அம்மாவுடன்
அம்மாவுடன்

ஷாப்பிங்: ஷாப்பிங்ல எனக்குப் பெரிசா ஆர்வம் கிடையாது. அவசியத் தேவைக்கான பொருள்களையும் ஆன்லைன்லயே ஆர்டர் பண்ணிடுவேன். பயிற்சி இல்லாத நாள்கள்ல சில மணி நேரம் கூடுதலா தூங்கவே விரும்பு வேன்.

ஃபிட்னஸ்: ஜிம் வொர்க்அவுட், வாக்கிங்னு தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். யோகா, தியானம், மியூசிக் கேட் குறதுக்கும் தினமும் நேரம் செலவிடுவேன். இதெல்லாம விளையாட்டுல கவனம் செலுத்த உதவுறதோடு, என் உடல்நலனையும் மன நலனையும் ஆரோக்கியமாகவும் வெச்சுருக்கு.

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

மனச்சோர்வு: சரியா பயிற்சி செய்ய முடியாட்டியும், போட்டிகள்ல எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாட்டியும் நிச்சயமா வருத்தப்படுவேன். நிறைய படிப்பினைகளால பக்குவப்பட்டிருப்பதால இதுபோன்ற தருணங்கள்ல என்னை நானே உற்சாகப்படுத்திப்பேன். மனசு ரொம்பவே சோர்வா இருந்தா, வடிவேலு சார் காமெடி பார்ப்பேன். தினமும் அம்மாகிட்ட தவறாம பேசுவேன். என் குரல்ல சின்ன தடு மாற்றம் இருந்தாலும் அதைச் சரியா கண்டுபிடிச்சு நம்பிக்கையான வார்த் தைகளால அவங்க தீர்வு கொடுத்திடு வாங்க.

சினிமா: தமிழ் சினிமாதான் என் ஆல்டைம் ஃபேவரைட். தவிர, இந்தி மற்றும் தென்னிந்திய மொழி சினிமாக்களையும் பார்ப்பேன். ரஜினி சார், சூர்யா சார், நயன்தாரா மேம், தீபிகா படுகோன் மேம், பிரியங்கா சோப்ரா மேம் ஆகியோர் எனக்குப் பிடிச்ச சினிமா பிரபலங்கள்.

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

கடினமான தருணங்கள்: 2019-ல் அப்பா இறந்துட்டார். அவரோட இழப்புதான் வாழ்க்கையில நான் ரொம்பவே கலங்கிய தருணம். டோக்கியோ ஒலிம்பிக்ல தோல்வி யடைஞ்சதால, என்மேல பலரும் வெச்சிருந்த நம்பிக்கையை நிறைவேத்த முடியாம போச்சு. அதை நினைச்சு, அந்த மேடையி லிருந்து இறங்கியதுமே கதறி அழுதேன்.

ஸ்பெஷல் நன்றி: இயக்குநரும் நடிகருமான சசிகுமார் சார் என்மேல அன்பும் அக்கறையும் கொண்டவர். என் வெற்றி, தோல்வினு முக்கியமான தருணங்கள்ல அவர் ரொம்பவே நம்பிக்கை கொடுப்பார். கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் சாரின் அறக் கட்டளை மூலமா பல வருஷங்களா எனக்குக் கிடைச்சுக்கிட்டிருக்கும் ஸ்காலர்ஷிப் முக்கியமானது. இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில ஸ்பெஷலான நபர்கள்.

அப்பாவின் இழப்பு, ஒலிம்பிக் தோல்வி, அடுத்த திட்டங்கள்...

ஆசை: குடும்பத்தினர் எல் லோருடனும் சேர்ந்து சுற்றுலா போய் ரொம்ப காலமாச்சு. குடும்பத்தோடு ஏதாச்சும் ஒரு தீவுக்கு அல்லது மலைப்பிரதேசத்துக்குப் போகணும்னு ஆசை. ஐஸ்லாந்துல நார்தெர்ன் லைட்ஸ் பகுதிக்குத் தனியா டிராவல் பண்ண ஆசை. சூப்பர் ஸ்டார் ரஜினி சார், ‘தல’ அஜித், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, டென்னின்ஸ் பிளேயர் செரினா வில்லியம்ஸ் போன்ற பிரபலங்களைச் சந்திக்கவும் ஆசை.

குடும்பம்: குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருக்குறது கஷ்டமாதான் இருக்கு. ஆனா, வாள்வீச்சு போட்டி யில நான் பெரிய அளவுக்கு உயரணும்ங்கிறது என் குடும்பத் தினரின் கனவும்கூட. ஒலிம்பிக்ல பதக்கம் வெல்றதுதான் அவங்களுக்கு நான் செய்யும் கைம்மாறு. அதுக் காக அடுத்த சில வருஷங்களுக்கு அதிகபட்ச உழைப்பைக் கொடுக் கணும். அதுக்குப் பிறகு தான் தனிப் பட்ட வாழ்க்கையில கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism