Published:Updated:

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

- விஜி ராஜா

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

- விஜி ராஜா

Published:Updated:
அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

‘உலகத்துல எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கே சில தமிழர்கள் கோலோச்சிட்டு இருப்பாங்க’ என்று சொல்லப்படுவதுண்டு. `எல்லா நாடுகளிலும் தமிழச்சிகள் கலக்கிட்டு இருக்குற காலம் இது’ என்றும் சொல்லும்விதமாக, இப்போது எல்லா கண்டங்களிலும், பல் துறைகளிலும் நம் தமிழ்ப்பெண்களின் மதிப்புமிக்க பங்களிப்பைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில், அமெரிக்காவில் அசத்திக்கொண்டிருக்கும் ஆளுமைப் பெண்கள் சிலர் இங்கே!

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

கவிதா இராமசாமி, நீதித்துறை

அமெரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பலருக்கும், குறிப்பாகத் தமிழர்கள் பலருக்கும் மிகவும் பரிச்சயமானவர் கவிதா இராமசாமி. நியூஜெர்சி மாகாணத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்ந்துவருபவர், அமெரிக்கக் குடியுரிமைச் சட்ட வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார். மாறிவரும் குடியுரிமைச் சட்ட விதிமுறைகளைக் கருத்தில்கொண்டு பலருக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குவதுடன், குடியுரிமைக்கான சட்ட உதவிகளும் வழங்கி வருகிறார். இவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. கவிமாமணி இலந்தை சு.இராமசாமியின் மகளான இவர், நியூஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர், இந்நாள் நிர்வாகக் குழு உறுப்பினர்.

``புலம்பெயர்ந்து வந்து, குடும்ப வன்முறைக்கு ஆளாகித் தத்தளிக்கும் பெண்களுக்கு நேரடி உதவிகள் செய்து வாழ்வுக்கு வழிகாட்டும் ’மித்ர’ தொண்டு நிறுவனத்தை நானும் என் கணவர் பாலாஜியும் நடத்தி வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பல பெண்களுக்கு எங்கள் இல்லம் தாய்வீடு. மேலும், தமிழ்நாடு குன்னக்குடியில் `கனவகம்’ என்ற பெயரில் பெண் குழந்தைகள் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறேன்’’ என்கிறார்.

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

பிரோஸ் பானு, செவிலியர், ஈவென்ட் பிளானர்

ஓர் இஸ்லாமியராகப் பிறந்து, கன்னியாஸ்திரியர்களால் வளர்க்கப்பட்டு, ஓர் இந்துவை மணந்தவர் பிரோஸ் பானு. தூத்துக்குடியில் போராட்ட வாழ்க்கையில் கல்வி பெற்றவர், இப்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக `பிளாஸம் டெகார்ஸ்' (Blossom Decors) என்ற ஈவன்ட் நிறுவனத்தை நடத்திவரும் தொழில்முனைவோர். தன் தாயைப் புற்றுநோய்க்கு இழந்தவர், சேர்ந்தது செவிலியர் பணியில்.

’’குடும்பத்துக்காகவும், பணச்சிக்கலில் இருந்து மீளவும் மலேசியாவில் செவிலியர் வேலையில் சேர்ந்தேன். பின்னர் அமெரிக்காவுக்கு வந்து, முதன்மை புற்றுநோய் மருத்துவமனையான எம்.டி ஆண்டர்சனில் செவிலியராகப் பணியாற்றி னேன். வேலையை சேவையாகச் செய்ததற்காக விருதுகள் பெற்றேன். மேற்படிப்பு முடித்து, என் துறையில் உயர் பொறுப்பில் இருக்கிறேன். நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் கோலங்கள் இடுவது, அலங்காரம் செய்வது, மருதாணி போடுவது என்றிருந்த என் ஆர்வம், ஈவன்ட் ஆர்கனைஸராக ஒருகட்டத்தில் என்னை வெளிப் படுத்தியது. இன்று திருமணம், அரங்கேற்றம் என புக்கிங்குகள் குவிகின்றன’’ என்பவரின் புன்னகையே இவரது அடையாளம், செவிலியர் பணியிலும் ஈவன்ட் தொழிலிலும்.

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

டாக்டர் விஜி திருவேங்கடம், புற்றுநோய் ஆராய்ச்சியாளர்

டாக்டர் விஜி திருவேங்கடம் மற்றும் இவருடைய கணவர் டாக்டர் திருவேங்கடம் ஹூஸ்டனில் குடியேறிய தமிழர்கள். உலகின் நம்பர் ஒன் புற்றுநோய் மையமான எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் பணிபுரிகின்றனர். டாக்டர் விஜி திருவேங்கடம் மிகக் கொடிய கணையப் புற்றுநோயை பற்றி ஆராய்ச்சி செய்து, அதை உண்டாக்கும் முக்கிய இலக்கை அடையாளம் கண்டு, அதற்கெதிராக குறிப்பிட்ட மருந்துகளை (ஆன்டிபாடிகள்) உருவாக்கி அதன் செயல்திறனை பல வழிகளில் சோதித்து, தற்போது மருத்துவப் பரிசோதனைகளில் நோயாளிகளுக்குக் கொடுக்கத் தயாராகி வருகிறார். தன் கணவருடன் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது தோல் புற்றுநோய் (Melanoma) திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

``புரொஃபஷனல் பாய்ச்சல் ஒருபக்கம் என்றால், வீட்டில் குழந்தைகளை இந்திய பாரம்பர்யத்துடன் வளர்ப்பது, நவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுவது, ஹூஸ்டனில் வாழும் தமிழர்களை தமிழ்ச் சங்கம் மூலம் ஒன்றிணைப்பது, பாரதி கலை மன்றச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளது, அடுத்த தலைமுறை கூடலுக்காக இளைஞர் சங்கத்தை (Youth Club) உருவாக்கி யுள்ளது என, இவையெல்லாம் என்னை மகிழ்ச்சியாக வைக்கும் விஷயங்கள். வேலை, வாழ்க்கை மற்றும் சமூக சேவையை (Work - Life - Service balancing) நேர்த்தியாக சமன் செய்வதற்கு எனக்கு நானே சொல்லிக்கொள்வேன் ‘குட்'... ’’ என்று சிரிக்கிறார்.

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

லாவண்யா அழகேசன், மென்பொறியாளர், சமூக சேவகர்

ஆஸ்திரேலியா, போலந்து, துபாய், சீனா, குவைத், கனடா, அமெரிக்கா என்று பல நாடுகளில் வாழும் தன்னார்வலர்களை ஓர் அமைப்பாக ஒருங்கிணைத்து, புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக சேவையாற்றி வருபவர், லாவண்யா அழகேசன்.

``புலம்பெயர்ந்த இந்தியக் குடும்பங்களில் ஏதேனும் ஓர் அவசர உதவி தேவைப்பட்டால் உதவி செய்ய ஆரம்பிக்கப்பட்டது, `ரியாக்‌ஷன் குழு' (REACTION - Response Emergency Access And Care To Indian Overseas Network). அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தை, லாப நோக்கமற்ற, ஒத்த எண்ணம் கொண்ட பலர் ஒருங்கிணைந்து நடத்தி, மனிதாபிமான உதவி களைச் செய்துவருகிறோம். அயல்நாட்டில் இறந்த இந்தியரின் உடலை இந்தியா வுக்குக் கொண்டு செல்ல உதவுவது, என்.ஆர்.ஐ திருமணங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவது, எதிர்பாராத விபத்துகளில் அந்நாட்டு சட்டத்துக்கேற்ப அவர்கள் குடும்பத்துக்கு உதவுவது, கோவிட் காலத்தில் சர்வதேச பயணத்துக்கு உதவியது, `கோவிட்'டால் பாதிக்கப்பட்ட சர்வதேச இந்திய மாணவர்களுக்கு உதவியது என்று உறுதுணையாக நின்றுவருகிறோம். இந்தக் குழுவுக்கு அடித்தளம் அமைத்து, அமைப்பாக மாற்றி வழிநடத்தி வருவதில் மகிழ்ச்சி’’ என்று சொல்லும் லாவண்யா மென்பொறியாளராகப் பணிபுரிகிறார்.

சட்டம் முதல் தொழில் வரை... அமெரிக்காவில் கலக்கும் தமிழச்சிகள்!

வசந்தி ராமன், கல்வியாளர்

மதுரை, பாத்திமா கல்லூரியில் ஆங்கில உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அமெரிக்காவுக்கு 1982-ம் ஆண்டு புலம்பெயர்ந்த பின், தனது துறையை மாற்றி, மருத்துவக் கதிர்வீச்சு (Medical Radiography) படிப்பை மேற்கொண்டு ஹூஸ்டன் கம்யூனிட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். மேலும் அமெரிக்க குழந்தைகளுக்கு 15 வருடங்களாக தமிழ் ஆசிரியராக, தன்னார்வலர் பணியும் செய்து வருகிறார்.

``புலம்பெயர்ந்த தமிழ் பெற்றோர்களிடம் இருக்கும் ஓர் அச்சம், நம் இனிய தமிழ்மொழி அடுத்த தலைமுறையினருக்குச் சென்று சேர வேண்டுமே என்பதுதான். பாரதியார் சொன்னதுபோல, `தமிழ் மொழி உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற இலக்கில், அமெரிக்காவில் தமிழ் மாணவர்களை உருவாக்கி வருகிறேன். தமிழ்ப் பாட நூல்கள் எழுதியுள்ளேன். புத்தகப் படிப்புடன், செயற்குழு திட்டங்கள் மூலம் தமிழைக் கற்பிக்கும் முறைகளை தமிழ்ப் பள்ளியில் அறிமுகம் செய்துள்ளேன். தமிழ் ஆசிரியர்களுக்குப் பயிற்றுநராகவும் இருந்து வருகிறேன். டாக்டர் விஜி திருவேங்கடம், என் சகோதரிதான். அமெரிக்காவில் தமிழ்ப் பெண் களின் செயலும் குரலும் இனிவரும் காலங்களில் இன்னும் ஓங்க வேண்டும்’’ என்கிறார் வரவேற்று.

செந்தமிழ்நாட்டு தமிழச்சிகள்!