Published:Updated:

பூஜை முதல் வேள்விவரை... பெண்களால் பெருமைகொள்ளும் கோயில்!

 தமிழ்ச் சைவப் பேரவையினர்...
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ச் சைவப் பேரவையினர்...

அருள்மிகு தமிழ்ச் சைவப் பெருமான் திருக்கோயில்

பூஜை முதல் வேள்விவரை... பெண்களால் பெருமைகொள்ளும் கோயில்!

அருள்மிகு தமிழ்ச் சைவப் பெருமான் திருக்கோயில்

Published:Updated:
 தமிழ்ச் சைவப் பேரவையினர்...
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்ச் சைவப் பேரவையினர்...

சாதிய பாகுபாடுகளைத் தாண்டி நம் இறைவழிபாட்டில் பாலின பாகுபாடுகளும் அதிகம். ஒரு பெண்ணால் விண்வெளிக்குக்கூட சென்றுவிட முடியும். ஆனால், கோயில் கருவறைக்குள் நுழைய அவளுக்கு அனுமதி கிடையாது. காலங் காலமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இந்த முரண்பாட்டை தகர்த்திருக்கிறது தமிழ்ச் சைவப் பேரவையின் ஆவடி கிளை.

சென்னை ஆவடியை அடுத்த கண்ணப் பாளையத்தில் அமைந்துள்ளது அருள்மிகு தமிழ்ச் சைவப் பெருமான் திருக்கோயில்.

தமிழ்ச் சைவப் பேரவையின் ஆவடி கிளைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் பூஜை செய்வது முதல் கோயில் தொடர்பான அனைத்துப் பணிகளிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியறிந்து அந்தக் கோயிலுக்குச் சென்றோம்... அங்கே சிவனை அலங்கரிப்பது முதல் அத்தனை வேலைகளையும் பெண்களே செய்கின்றனர்.

 தமிழ்ச் சைவப் பேரவையினர்...
தமிழ்ச் சைவப் பேரவையினர்...

அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த வுடன் தமிழ்ச் சைவப் பேரவையின் ஆவடி கிளை தலைவரான கலையரசி நடராஜன் தமிழ் மந்திரங்கள் ஓத... சக பெண்களும் பாட்டுப் பாடியபடி பக்தியில் உருக ஆரம்பிக் கின்றனர்.

“இங்கே ஆண்களும் பூஜை செய்யலாம். ஆனால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோட்பாடு பின்பற்றப் படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கோயிலில் ஆண் பெண் இருவரும் சமம். சில இடங்களில் அம்மன் கோயில்களில் பெண்கள் பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டிருக் கின்றனர். ஆனால், சிவன் கோயில்களில் சிவபெருமானுக்குப் பெண்கள் வழிபாடு நடத்துவதை இந்தக் கோயிலைத் தவிர வேறெங்கும் காண முடியாது” என்கின்றனர் அங்குள்ள பெண்கள்.

கலையரசி நடராஜனிடம் இதுகுறித்துப் பேசினோம், “1986-ல் தமிழ்ச் சைவப் பேரவை’யைத் தோற்றுவித்த என் குரு ஆறுமுக அடிகளார் பல இடங்களில் அதன் கிளைகளையும் ஆரம்பித்தார்.

அந்த வகையில், சென்னை ஆவடியில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சைவப் பேரவை கிளைக்கு நான் தலைவராக நியமிக் கப்பட்டேன். 2008-ல் என் குரு மறைந்த பிறகு, தமிழ்ச் சைவப் பேரவையின் மற்ற கிளைகள் எப்படி இயங்கு கின்றன என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

 தமிழ்ச் சைவப் பேரவையினர்...
தமிழ்ச் சைவப் பேரவையினர்...

தனக்குப் பிறகு, இந்த அமைப்பை யார் ஏற்று நடத்தப்போகின்றனர் என்று தன் கடைசி காலத்தில் என் குருவுக்கு வருத்தம் இருந்தது. ‘என் உயிருள்ள வரை நான் தமிழ்ச் சைவப் பேரவையை விடமாட்டேன்’ என்று அப்போது அவருக்கு நான் வாக்கு கொடுத்திருந்தேன். இந்த அமைப்புக்கென ஓர் அலுவலகம் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இடத்தை வாங்கினோம். இதைப் புனரமைக்கும்போது, இங்கே இந்த ‘அய்யன்’ கண்டெடுக்கப்பட்டார் (கோயிலில் உள்ள சிவ பெருமானின் சிலையைக் காட்டியபடிசொல்கிறார்).

‘அந்த சிவபெருமானே காட்சி தந்துவிட்டார். முதலில் சிறிய அளவில் கோயில் கட்டுவோம். அதன் பிறகு, அலுவலகம் அமைத்துக் கொள்ளலாம்’ என்று தற்காலிகமாக ஒரு கோயிலை அமைத்தோம். சிறு வயதிலிருந்தே கோயில் கருவறைக்குள் எட்டிப் பார்க்கக்கூட பெண்கள் அனுமதிக் கப்படாத சூழலை நினைத்துப் பார்த்தேன். அந்த நிமிடமே, ‘கண்டிப்பாக இந்தக் கோயிலில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்துக் காரியங்களிலும் பெண்களை அனுமதிக்க வேண்டும்’ என முடிவெடுத்து விட்டேன்” - தல வரலாறுடன் பெண்களுக்கு முன்னுரிமை அளித்ததற்கான காரணமும் சொல்கிறார் கலையரசி நடராஜன்...

‘‘திருப்பனந்தாள் என்ற இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண் அபிஷேகம் செய்த வரலாறு நம்முடையது. தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுத்து கோயில் களில் மறுக்கப்படும் பெண்களுக்கான உரிமையை நாங்கள் வழங்குகிறோம்” என்றார் உணர்ச்சிப் பெருக்குடன்.

“கண்ணப்பாளையம் பஞ்சாயத் துக்குள் நிறைய கோயில்கள் இருக் கின்றன. இந்தக் கோயிலைத் தவிர, வேறு எந்தக் கோயிலிலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள். எந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் கருவறைக்கு வெளியே நின்றுதான் கும்பிட வேண்டும்.

 தமிழ்ச் சைவப் பேரவையினர்...
தமிழ்ச் சைவப் பேரவையினர்...

பெண்களைப் புனிதப்படுத்தும் இந்தச் சமூகம்தான் கருவறைக்குள் பெண்கள் நுழைந்தால் சாமி குற்றம் எனச் சொல்கிறது. காலங்காலமாக மறுக்கப்பட்ட உரிமை எங்களுக்கு இந்தக் கோயிலில் கிடைத்திருக்கிறது” என்று சொல்லும்போது கண்ணப் பாளையத்தைச் சேர்ந்த ரேவதி வெங்கடேசனின் கண்களில் அத்தனை பரவசம்.

அடுத்து பேசினார் முருகேஸ்வரி செல்வகுமார். “என் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக் குண்டு. இந்தக் கோயிலைத் தவிர இதுவரை நான் சென்ற எந்தக் கோயி லிலும் பெண்களை கருவறைக்குள் அனுமதித்ததே கிடையாது.

 கலையரசி நடராஜன் -  ரேவதி வெங்கடேசன் -  முருகேஸ்வரி செல்வகுமார்
கலையரசி நடராஜன் - ரேவதி வெங்கடேசன் - முருகேஸ்வரி செல்வகுமார்

இந்தக் கோயிலில் எல்லா பூஜை களையும் பெண்களே செய்கிறோம். நாயன்மார்களுக்கு வேள்வி நடத்தும் போது பெண்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். தமிழ் விழாக்கள் அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பூஜைகளை மேற் கொள்வது இங்குதான் நடக்கிறது. இது கடவுளால் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாக்கியம்” என் கிறார் பெருமையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism