Published:Updated:

மரம் ஏற ஊக்குவித்த மாமியார்... தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மருமகள்!

 மாமியார், கணவர், குழந்தைகளுடன் லதா...
பிரீமியம் ஸ்டோரி
News
மாமியார், கணவர், குழந்தைகளுடன் லதா...

புதிதாக நடப்பட்ட மின்கம்பத்தில் வெற்றுக் கால்களுடன் சரசரவென ஏறி வேலை செய்கிறார் ஒரு பெண். இந்த வீடியோதான் சென்ற வார வைரல். யார் இந்தப் பெண்?

உயரே... உயரே...

மிழக மின்வாரியத்தில் ஐந்தாயிரம் `கேங்மென்' பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த அந்தப் பணிக்கு சேலம் உடையாப்பட்டி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பத்துக்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

லதா
லதா

30 மீட்டர் உயரமான மின்கம்பத்தில் 8 நிமிடங்களில் ஏற வேண்டும். அந்தப் பெண்ணோ, 6 நிமிடங்களில் ஏறி அசத்துகிறார். அதேபோல 31.5 கிலோ மின்சாதனங்களைத் தூக்கிக்கொண்டு ஒரு நிமிடத்தில் 100 மீட்டர் கடக்கவேண்டிய தூரத்தை 46 நொடிகளிலேயே கடக்கிறார். 2 நிமிடங்களில் இணைக்கவேண்டிய உயர் மின் அழுத்தக் கம்பிகளை 1.46 நிமிடங்களில் இணைத்து அனைவரது பாராட்டுகளையும் பெறுகிறார். அவர்தான் லதா. தமிழகத்தில் முதன்முதலில் மின்கம்பம் ஏறிய பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகிலுள்ள அமரம்திட்டு சேவிவளவில் எழுத்துத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த லதாவிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாமியார், கணவர், குழந்தைகளுடன் லதா...
மாமியார், கணவர், குழந்தைகளுடன் லதா...

``எங்கப்பா தம்புசாமியும் எங்கம்மா சுமதியும் விவசாய வேலை செய்றவங்க. அக்கா, நான், தங்கை தம்பி... அன்னன்னிக்கு வேலைக்குப் போனாதான் சாப்பிட முடியும்கிற அளவுக்கு வறுமை. எங்கம்மா ஆண்களுக்கு நிகரா வேலை செய்வாங்க. நாங்க சின்ன பிள்ளைகளாக இருக்கும்போது உயரமான தென்னை மரத்தில் ஏறி அம்மா தேங்காய் பறிச்சுப் போட, நாங்க அதை எடுத்துவைப்போம். அம்மா மாதிரி நானும் மரம் ஏற ஆசைப்பட்டு சின்ன மரங்கள்ல ஏற ஆரம்பிச்சேன்.

மரம் ஏற ஊக்குவித்த மாமியார்...  தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மருமகள்!

கவனமா ஏற, அம்மா டிப்ஸ் கொடுப்பாங்க. ஒருகட்டத்துல நானும் உயரமான மரங்கள்ல சர்வசாதாரணமா ஏற ஆரம்பிச்சேன். ப்ளஸ் டூ முடிச்சதும் அமரம்திட்டு பகுதியைச் சேர்ந்த சந்திர சேகருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாங்க. அவர் லாரி டிரைவரா இருக்கார். எங்களுக்கு அனுஸ்ரீ, விகான்னு ரெண்டு குழந்தைங்க.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஒருநாள் என் வீட்டுக் காரர்கிட்ட தேங்காய் வாங்கிட்டுவரச் சொன்னேன். வாங்கித்தராம ஏதோ காரணம் சொல்லிட்டிருந்தார். உடனே பக்கத்துல இருந்த தென்னை மரத்துல ஏறி தேங்காய் பறிச்சேன். அதைப் பார்த்த எல்லோருக்கும் ஆச்சர்யம். என் மாமியார் மலர்கொடிக்கு சந்தோஷம் தாங்க முடியலை. மரம் ஏற ஊக்குவிக்கிற மாமியார் கிடைச்சது நான் செய்த புண்ணியம்'' என்று சிலிர்க்கிறார் லதா.

மரம் ஏற ஊக்குவித்த மாமியார்...  தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மருமகள்!

``அரசுப் பள்ளியில படிச்சப்ப, `ஆண்களுக்கு இணையா நீங்களும் வேலைக்குப் போனாதான் மதிப்பா பார்க்கப்படுவீங்க'ன்னு என் ஆசிரியர் சொன்னது மனசுல பதிஞ்சுபோச்சு. கல்யாணத்துக்குப் பிறகு நிறைய தேர்வுகள்ல கலந்து கிட்டேன். ஆனா, உயரம் ஒரு குறையா இருந்தது. அப்போதான் மின்வாரியத் துறையில் கேங்மென் பணிக்கு அஞ்சாயிரம் பேர் தேவைங்கற அறிவிப்பு வந்தது. ஏப்ரல் மாதம் விண்ணப்பிச்சேன். முதலில் பெண்கள் அரைக் கம்பம் ஏறினால் போதும் சொல்லியிருந்தாங்க. எனக்கு மின்கம்பம் ஏறி பழக்கமில்லை. என் கணவர்தான் மின்கம்பம் ஏற சொல்லித்தந்தார். அதனாலதான் உடற்தகுதி தேர்வுல வெற்றிபெற முடிஞ்சது.

நான் ஏறினப்ப எடுத்த வீடியோ சமூக வலைதளங்கள் பரவுச்சு. அதுக்கப்பறம் எல்லா செய்தித் தாள்களிலும் என்னைப் பத்தி செய்தி போட என் வீட்டைச் சேர்ந்தவங்க சந்தோஷமா கிட்டாங்க. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இன்னும் எழுத்துத் தேர்வு மட்டும்தான் பாக்கி. அதுல நிச்சயம் ஜெயிச்சு என்னை மாதிரி கிராமப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமா ஆவேன்'' என்று தம்ஸ்அப் காட்டுகிறார் லதா.

வாழ்த்துகள்!