Published:Updated:

``எனக்குப் பிறகு என் குழந்தைகளுக்கும் கணவருக்கும் யார் சோறு போடுவாங்க?'' - கலங்கும் மஞ்சுளா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மஞ்சுளா குடும்பம்
மஞ்சுளா குடும்பம் ( எம்.விஜயகுமார் )

"ஒவ்வொரு நாளும் என் ஆயுளை எண்ணிட்டு இருக்கிறேன். என் குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கு." - வறுமையும் நோய் கொடுமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மஞ்சுளாவின் குடும்பம்...

"ஒவ்வொரு நாளும் என் ஆயுளை எண்ணிட்டு இருக்கிறேன். என் குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கு. எனக்குப் பின்பு இந்தக் குழந்தைகளுக்கும் என் கணவருக்கும் யார் சோறு போடுவாங்களோன்னு நினைக்கும் போது நடுக்கமும் அழுகையும் வருது'' என்கிறார் புற்று நோயால் பாதிக்கப்பட்ட மஞ்சுளா...

கோபாலகண்ணன் மஞ்சுளா குடும்பம்
கோபாலகண்ணன் மஞ்சுளா குடும்பம்
எம். விஜயகுமார்

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி டு காக்காபாளையம் ரோட்டில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஸ்டாலின் நகர். இங்குள்ள சிதிலமடைந்து கிடக்கும் காலனி வீட்டில் ஒட்டடை மட்டும் ஒட்டியிருக்கவில்லை; துன்பம், துயரம், கண்ணீர் மற்றும் வறுமையும்தான். கோபாலகண்ணன் - மஞ்சுளா தம்பதியினரின் வறண்ட தலைமுடியும், சோர்ந்த கண்களும், வாடிய வயிற்றுடன் ஏக்கத்தோடும் காணப்படுகின்றனர். தாய், தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கும் இவர்களின் குழந்தைகளைப் பார்க்கும் போது சோகம் நம்மையும் விட்டு வைக்கவில்லை.

கோபாலகண்ணன், மஞ்சுளாவைக் காதல் மணம் முடித்து, யாருடைய உதவியும் இல்லாமல் சென்டரிங் வேலைக்குச் சென்று இந்த காலனி வீட்டின் மகாராணியாக தன் மனைவியை வைத்திருந்தார். இவர்களுக்கு சாதனா என்ற 9 வயது மகளும் ரோகித் என்ற 7 வயது மகனும் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் கோபாலகண்ணன் சென்டரிங் வேலை செய்து கொண்டிருக்கும் போது பிளேவுட் அவர் தலையில் விழுந்து அடிப்பட்டுள்ளது. அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

கோபாலகண்ணன்
கோபாலகண்ணன்
எம்.விஜயகுமார்
`பணம் வாங்கத்தான் சென்றார்; கொன்றுவிட்டனர்!' -திருமணம் நின்றதால் கலங்கும் சமூக சேவகர் குடும்பம்

5 வருடங்கள் கழித்து நரம்பு மண்டலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். பிறகு மஞ்சுளா துப்புரவு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுளாவிற்கும் தொண்டையில் புற்றுநோய் வரவே தற்போது குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. காதல் மணமுடித்ததால் ஆதரிக்க உறவுகள் இல்லை. கணவனுக்கோ, தனக்கோ மருத்துவம் பார்க்க வழியும் இல்லை. கருணையில்லாத இயற்கை, மஞ்சுளாவின் குழந்தை சாதனாவையும் விட்டு வைக்கவில்லை. அவ்வப்போது அவள் வலிப்பு வந்து கீழே விழுகிறாள். அவளைத் தூக்கி விடவோ, மருத்துவமனைக்குக் கூட்டிப் போகவோ யாரும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மஞ்சுளாவால் உணவருந்த முடியாத நிலையில் டியூப் வழியாகக் கூழ் காய்ச்சி கொஞ்சம் கொஞ்சமாகத் தொண்டைக்குள் இறக்கி விட்டு தன்னுடைய ஆசை குழந்தைகளையும் கணவனையும் காப்பாற்றுவதற்காக அருகில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று வகுப்பறைகளைக் கூட்டிப் பெருக்கி, கழிவறையைச் சுத்தம் செய்து அதில் கிடைக்கும் சொற்ப பணத்தை வைத்து ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறார்.

கோபாலகண்ணன் மஞ்சுளா
கோபாலகண்ணன் மஞ்சுளா
எம்.விஜயகுமார்

இத்தருணத்தில் மஞ்சுளாவை அவரது வீட்டில் சந்தித்தோம். திக்கித் திக்கி நம்மிடம் பேசினார், "என்னோட சொந்த ஊர் சென்னை போரூர். இவர் சென்னையில் ஒரு துணிக்கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது நானும் அந்தக் கடையில் வேலை பார்த்தேன். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுக் காதலிக்கத் தொடங்கினோம். அதை என் பெற்றோரிடம் சொன்னேன். அவர்கள் எங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள இவருடைய வீட்டிற்கு வந்து விட்டோம்.

இவர் சென்டரிங் வேலைக்குச் செல்வார். நல்ல வருமானம் கிடைத்தது. இவருடைய குடும்பத்தினரும் ஆதரித்தார்கள். மகிழ்ச்சியாக இருந்தோம். எங்களுக்குச் சாதனா என்ற மகளும் ரோகித் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர் ஒரு கட்டடத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மேல் தளத்திலிருந்து பிளேவுட் தலையில் விழுந்து அடிப்பட்டது. அதைக் கவனிக்காமல் விட்டு விட்டார்.

மஞ்சுளா
மஞ்சுளா
எம்.விஜயகுமார்

ஐந்து ஆண்டுகள் கழித்து ரோகித் வயிற்றில் இருக்கும் போது டூ வீலரில் மருத்துவமனைக்குச் சென்றோம். கார் மோதி கீழே விழுந்து விட்டோம். அப்போது மருத்துவமனைக்குச் சென்று பார்த்ததில் இவருக்கு நரம்பு மண்டலங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நடுக்கம் வந்து படுத்த படுக்கையாகிவிட்டார். அதையடுத்து நான் துப்புரவு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன்.

தண்ணீர் குடிக்க முடியாமல், சாப்பிட முடியாமல் தொண்டை ரொம்ப வலித்தது. அரசு மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் தொண்டையில் புற்று நோய் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து படிப்படியாகத் தொடர்ந்து பாதிக்கப்பட்டு தற்போது என்னால் சாப்பிட முடியவில்லை, சரியாகப் பேச முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. எங்களை ஆதரிக்க யாரும் இல்லை. திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன. பெற்றோர்களிடம் போனில் பேசினால் கூட பேசுவதில்லை. இவர்களுடைய உறவினர்களும் எங்களைக் கைகழுவி விட்டார்கள்.

என் குழந்தைகளையும் கணவரையும் கவனிக்க என்னைத் தவிர யாரும் இல்லாததால் உடல் நிலை முடியாத நிலையிலும் காட்டுப்பாளையம் கவர்மென்ட் பள்ளிக்குச் சென்று வகுப்பறை, வாசலைக் கூட்டிப் பெருக்கி, பாத்ரூம் சுத்தம் செய்து வருவேன். அவுங்க கொடுக்கிற பணத்தை வைத்து குழந்தைகளுக்கும் கணவருக்கும் சாப்பாடு செஞ்சி போடுகிறேன். இந்தச் சூழ்நிலையில் என் மகள் சாதனாவுக்கு அடிக்கடி வலிப்பு வந்து கீழே விழுகிறார். அவளைத் தூக்கி விடவோ, மருத்துவமனைக்குக் கூட்டிப் போகவோ கூட ஆள் இல்லை.

கோபாலகண்ணன் குடும்பம்
கோபாலகண்ணன் குடும்பம்
எம். விஜயகுமார்
கல்லறைகள் மத்தியில் குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்தும் குடும்பம்..! #VikatanPhotoStory

ஒவ்வொரு நாளும் என் ஆயுளை எண்ணிட்டு இருக்கிறேன். என் குழந்தைகளின் நிலையை நினைக்கும் போது ரொம்ப வேதனையாக இருக்கு. எனக்குப் பின்பு இந்தக் குழந்தைகளுக்கும் என் கணவருக்கும் யார் சோறு போடுவாங்களோன்னு நினைக்கும் போது நடுக்கமும் அழுகையும் வருது. நான் ஒவ்வொரு முறையும் சேலம் ஜி.ஹெச்-க்குப் பரிசோதனைக்குப் போகும் போது என் நிலையை உணர்ந்த டாக்டர் வெங்கடேஷன் சார் மருத்துவம் பார்த்து வழிச் செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்புவார். இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதை நினைத்து மனதைத் திடப்படுத்திக்கொள்கிறேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு