Published:Updated:

‘`காமம் குறித்துப் பெண்கள் பேச வேண்டும்!”

கழிவறை இருக்கை புத்தகம்
பிரீமியம் ஸ்டோரி
கழிவறை இருக்கை புத்தகம்

ஆண்கூட பேசத் தயங்கும் விஷயங் களை ஒரு பெண்ணாகப் புத்தகமாக்கி யது பற்றி கூறும்போது, ‘`என்னுடையது காதல் திருமணம்.

‘`காமம் குறித்துப் பெண்கள் பேச வேண்டும்!”

ஆண்கூட பேசத் தயங்கும் விஷயங் களை ஒரு பெண்ணாகப் புத்தகமாக்கி யது பற்றி கூறும்போது, ‘`என்னுடையது காதல் திருமணம்.

Published:Updated:
கழிவறை இருக்கை புத்தகம்
பிரீமியம் ஸ்டோரி
கழிவறை இருக்கை புத்தகம்

எவ்வளவு முன்னேறினாலும், நாகரிகம் வளர்ந்தாலும், பாலின சமத்துவம் என எவ்வளவு பேசினாலும் பெண்களுக்கான சுதந்திரம் என்பது யாராவது கொடுக்கக் கூடியதாகவோ அல்லது யாராவது அவர்களிடம் இருந்து பறித்ததாகவோதான் இன்று வரை உள்ளது. முக்கியமாக, காமத்தில் பெண்களின் உரிமை, தேவை, எதிர்பார்ப்பில் எல்லாம் ஆணாதிக்கமும், குடும்ப ஆதிக்கமும் தான் கோலோச்சுகிறது. காமத்தைப் பற்றி ஆண் பேசினால் நகைச்சுவையாகவும், விழிப்புணர்வாகவும் பார்க்கும் சமூகம், பெண் பேசினால் அவள் மீதான பார்வையைக் கேவலமாக மாற்றிக்கொள்வதுடன், அவளையும் இழிவுபடுத்தத் தவறுவதில்லை.

இப்படியான நம் சமூக சூழலில்தான், ஏதோ இயற்கை உபாதையைக் கழிப்பதுபோல, ஆணின் காம உணர்வுகளைக் கழிக்கும் இடமாக இருக்கிறார் பெண் என்பதையும், இந்தப் பாலியல் போக்கை மாற்றுவதற்கான விழிப்புணர்வையும் தனது ‘கழிவறை இருக்கை’ நூலில் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த லதா. மேலும், பாலுறவில் தங்களுடைய விருப்பம் என்ன, தேர்வு என்ன என எதையுமே பெண்களைக் கூறக்கூட விடாமல் குரல் வளையை நசுக்கும் நம் சமுதாயத்தைக் கேள்வி கேட்டு தனது சமூக வலைதளத்திலும் தொடர்ந்து ஆழமாக எழுதிவருகிறார்.

‘`நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை முடித்துள்ளேன். சிறுவயதில் இருந்தே, இங்கு இயல்பெனக் கடக்கப்படும் பெண்களுக்கு எதிரான உரிமை மறுப்பு எல்லாம் என்னைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. குறிப்பாக, காதல், காமம் குறித்து எல்லாம் பொது தளத்திலோ, குறைந்தபட்சம் தன் துணை யுடனோகூட பேச பெண்களுக்கு அனுமதி இல்லை இங்கு. பாலியல் தேவைகள் பற்றி பேசும் பெண்கள், தவறான பெண்கள் என்று சித்திரிக்கப்பட்டுள்ளதே காரணம்.

காதலர், கணவர் யாராக இருந்தாலும், ஓர் ஆண் தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் போகப் பொருளாகத் தான் பெண்களைப் பார்க்கிறார். பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். என் வாழ்க்கையிலும் இது நடந்தது. திருமணத்துக்குப் பின், கலவி என்ற அந்த அழகான விஷயம் எனக்கு எந்த சந்தோஷத்தையும் தரவில்லை. கொடுப்பவளாக மட்டுமே பெண் இருக்க வேண்டும் என்ற இந்த படுக்கையறை சூழலை யும், பாலியல் குறித்த விழிப்புணர்வை யும் பேசும் ‘தி டாய்லெட் சீட் (The Toilet Seat)’ புத்தகத்தை 2017-ம் ஆண்டு எழுதினேன். அதைத் தமிழில் ‘கழிவறை இருக்கை’யாக 2020 நவம்பரில் எழுதினேன்’’ என்கிறார்.

பல தரப்பு மக்களிடமும், குறிப் பாக இளைஞர்களிடம், ‘மச்சான் கல்யாணத்துக்கு முன்னாடி கண்டிப்பா இத படிச்சிடணும்டா’ என்ற வார்த்தைகளுடன் சென்று சேர்ந்திருக்கிறது ‘கழிவறை இருக்கை’. புத்தகத்தின் ஆரம்பத்தில் மனிதர்கள் குடும்பமாக வசிக்கும் சமூக சூழலை ஏற்றுக்கொண்டு அதனை நல்ல தெனவும் கூறும் லதா, ஒட்டுமொத்த கலாசாரத்தையும் கேலி பேசாமல், கலாசாரத்தின் பெயரில் நடக்கும் வன்முறையை அல்லது மறைக்கப் படும் அவலத்தை பாடுபொருளாகக் கொண்டு பக்கங்களைத் திருப்பு கிறார். காதலில் கரைந்திருக்கும் காமத்தை பேசுவதினால் இது செக்ஸ் புக்கோ, காமத்தில் இடம் பெறாமல் நழுவவிடப்பட்ட காதல் குறித்து பேசுவதனால் இது காதல் களஞ்சியமோ இல்லை. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, பாலின சமத்துவ காமம், பாலியல் கல்வி என்று பல தளங்களையும் தொட்டுச் செல்கிறது புத்தகம்.

‘`காமம் குறித்துப்
பெண்கள் பேச வேண்டும்!”

`காதலில் நிறைந்திருக்கும் உடல்கள் தனித்தனியே இருந்தாலும் மனம் எப்போதும் காமத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கும்!' - இப்படி, உடலியல் செயல்கள் மட்டும் காமம், காமம் மட்டுமே காதல் என்னும் அடிப்படை வாதங்களைத் தவிர்த்து புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் சிறகடித்துப் பறக்கிறது லதாவின் காதலும் காமமும்.

ஆண்கூட பேசத் தயங்கும் விஷயங் களை ஒரு பெண்ணாகப் புத்தகமாக்கி யது பற்றி கூறும்போது, ‘`என்னுடையது காதல் திருமணம். வீட்டில் அடிமை போல நடத்தப்பட்டேன். பிடித்ததை செய்ய முடியாது, அலுவலகத்திலிருந்து சிறிது தாமதமாக வீட்டுக்கு வந்தால் அசிங்கமாக ஏச்சுகள் என்ற சூழலை ஒருகட்டத்துக்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 10 ஆண்டு களில் விவாகரத்து ஆகிவிட்டது. தற்போது என் மகனுக்கு 32 வயது, மகளுக்கு 30 வயது. என் வளர்ப்பும், அவர்களுடைய சமூகப் பார்வையும் நான் இந்தப் புத்தகம் எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்ததே தவிர, எந்த நேரத்திலும் இடைஞ்சலாக இல்லை” என்கிறார் லதா. தொடர்ந்து பெண் உரிமை சார்ந்த புத்தகங்கள் எழுதி வருகிறார்.

‘`இன்று பெண்களின் நிலை மாறி, முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆனாலும், வேலை, வருமானம் என இந்தப் பொறுப்புகளை எடுத்துக் கொள் வதையே சுதந்திரம் என நம்பக் கூடாது. நம் வாழ்க்கையை நமக்குப் பிடித்த மாதிரி வாழ முடிவதே சுதந்திரம்” - அடிக்கோடிட்டு சுட்டிக்காட்டுகிறார் லதா.

பெண்களுக்கும் கிடைக்கட்டும் ஹேப்பி பெட் டைம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism