Published:Updated:

`பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ்; பக்கவாதம் ஏற்படலாம்’ - டாக்டர் எச்சரிக்கையால் அதிர்ச்சி!

கூந்தல் பராமரிப்பு ( சித்தரிப்பு படம் )

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண், பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ் செய்து கொண்டார். பார்லர் ஊழியர்கள் அவருக்கு ஹேர்வாஷ் செய்தபோது, அவர் கழுத்தை பின் பக்கமாக அதிகம் வளைத்து, திருப்பினார். அந்நேரம், மூளைக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது.

`பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ்; பக்கவாதம் ஏற்படலாம்’ - டாக்டர் எச்சரிக்கையால் அதிர்ச்சி!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண், பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ் செய்து கொண்டார். பார்லர் ஊழியர்கள் அவருக்கு ஹேர்வாஷ் செய்தபோது, அவர் கழுத்தை பின் பக்கமாக அதிகம் வளைத்து, திருப்பினார். அந்நேரம், மூளைக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது.

Published:Updated:
கூந்தல் பராமரிப்பு ( சித்தரிப்பு படம் )

பெண்கள் பலர் மாதம் ஒரு முறை, இருமுறை என தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பியூட்டி பார்லர் சென்று வருவது வழக்கம். பார்லரில் பெண்கள் ஃபேஷியல் முதல் ஹேர்கட் வரை பல சர்வீஸ்களைச் செய்துகொள்கிறார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர், அங்குள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றார். அங்கு அவரின் கேசத்தை டிரிம் மற்றும் ஹேர்வாஷ் செய்துகொண்டார். பார்லர் ஊழியர்கள் அப்படி ஹேர்வாஷ் செய்தபோது, அவர் கழுத்தை பின்பக்கமாக அதிகம் வளைத்து, திருப்பினார். அந்நேரம், மூளைக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிருந்திருக்கும் போஸ்ட், சோஷியல் மீடியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

`சம்பந்தப்பட்ட பெண்மணிக்கு ஷாம்பூ வாஷ் செய்தபோது, அவருக்கு தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. அவர் வயிறு சிறப்பு மருத்துவரிடம் முதலில் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனாலும் பிரச்னை சரியாகவில்லை. அடுத்தநாள், நடக்கும்போது அவருக்கு பேலன்ஸ் தவற ஆரம்பித்தது. பின்னர் மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தார்.

ஸ்ட்ரோக்
ஸ்ட்ரோக்

அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், உடலின் பொசிஷன்களின் சமநிலையை பாதிக்கும் வலது செரிபெல்லார் அறிகுறிகள் (right-cerebellar signs) தெரிந்தன.

பியூட்டி பார்லரில் ஹேர்வாஷ் செய்தபோது, பேஸினில் தலையை அளவுக்கு அதிகமாக வளைத்தபோது மற்றும் திருப்பியபோது அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.

இதன் மூலம் குறித்துக்கொள்ள வேண்டிய பாடம்: பெருந்தமனி விரிவடையும் ஆபத்து, மற்றும் கண்டறியப்படாத முதுகெழும்பு ஹைப்போபிளாசியா (vertebral hypoplasia) பிரச்னைகள் உள்ள பெண்களுக்கு, பியூட்டி பார்லரில் ஷாம்பூ வாஷ் செய்யும்போது பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை உடனடியாகக் கண்டு கொண்டு சிகிச்சையளிப்பதன் மூலம் பக்கவாதத்தால் ஏற்படும் செயலிழப்பைத் தடுக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டரின் இந்த எச்சரிக்கை, பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.