Published:Updated:

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

இணையத்தில் பெண்கள் சுதந்திரமாகவும், சமமாகவும் இயங்குவதற்கான பாதுகாப்பான இணையதள வசதிகளை உருவாக்கி வருகிறார்.

உலகளவில் கவனம் ஈர்த்த, சக பெண்களுக்கு உத்வேகம் அளிக்கிற 100 பெண்களுக்கான, பிபிசி நிறுவனத்தின் இந்த வருடத் தேர்வில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தினர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று வெளியாகியிருக்கும் தகவல், ஆச்சர்யமூட்டுகிறது. ஆனால், பாதுகாப்பு கருதி அந்த ஆப்கன் பெண்கள் பற்றிய அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் பொதுவெளியில் பகிரப்படவில்லை. அந்த 100 பெண்களில் மீதமுள்ள 50 சதவிகிதத்தினரில் சிலரைப் பற்றி...

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

ஏபியா அக்ரம், பாகிஸ்தான்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் மேம்பாடுகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர். ‘காமன்வெல்த் இளம் ஊனமுற்றோர் மன்ற’த்தின் ஒருங்கிணைப்பாளராகப் பரிந்துரைக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த முதல் பெண் இவர்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

மார்சிலினா பாடிஸ்டா, மெக்சிகோ

வீட்டு வேலை பார்ப்பவர்களுக்கு நியாயமான ஊதியம், மருத்துவ விடுப்பு உள்ளிட்ட உரிமைகளுக்காக 21 வருடங்களாகப் போராடி வருபவர். தொழிற்சங்கத் தலைவரான இவரும் ஒரு காலத்தில் வீட்டுப்பணியாளராக இருந்தவரே.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

அஸ்மினா த்ரோடியா, லண்டன்

இணையத்தில் பெண்கள் சுதந்திரமாகவும், சமமாகவும் இயங்குவதற்கான பாதுகாப்பான இணையதள வசதிகளை உருவாக்கி வருகிறார்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

ஜமீலா கார்டன், சோமாலியா

சோமாலியாவின் கிராமமொன்றில் பிறந்தவர். இன்று செயற்கை நுண்ணறிவு உலகின் சிந்தனை முன்னோடியாகக் கொண்டாடப்படுகிறார். சர்வதேச மகளிர் தொழில்முனைவோர் போட்டியில் மைக்ரோசாஃப்ட்டின் உலகளாவிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

முக்தா கல்ரா, (மும்பை) இந்தியா

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகள் ஆர்வலர். ஆட்டிசம் பற்றிய புரிந்துணர்வைப் பெரியவர்களுக்கு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளை நண்பர்களாக்கிக் கொள்வதற்கும் ஏற்றபடி படக்கதைகளைத் தயாரித்து வருபவர்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

லைலா ஹைதாரி, பாகிஸ்தான்

காபூலில் போதைப்பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘மதர் கேம்ப்’ என்ற மறுவாழ்வு மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தை அமைக்க தன்னுடைய சொந்த சேமிப்பையே பயன்படுத்தியவர்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

சோமா சாரா, பிரிட்டன்

பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘Everyone’s Invited’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிறுவியவர். பெண் வெறுப்புக் கலாசாரத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

மஞ்சுளா பிரதீப், (குஜராத்) இந்தியா

வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர், பெண்கள் மற்றும் தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் சமூகச் செயற்பாட்டாளர். இனவெறிக்கு எதிரான ஐ.நா உலக மாநாட்டில் தலித் உரிமைகளை எடுத்துரைத்தவரும்கூட.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

ஃபியாமே நயோமி மடாஃபா, சமோவா

சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர். 27-வது வயதில் அரசியலில் நுழைந்தவர். மதாய் எனப்படும் உயரிய தலைமை கௌரவமும் பெற்றவர். அரசியல் பதவிகளுக்கு வரவிரும்பும் சமோவா பெண்களுக்கு உத்வேகம் அளிப்பவர்.

உதாரணம், உத்வேகம், ஊக்கம்... உலக அளவில் கவனம் ஈர்த்த பெண்கள்!

ஹைடி ஜே.லேர்சன், அமெரிக்கா

தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள் குறித்து ‘How Vaccine Rumors Start – and Why They Don’t Go Away’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ள இவருக்கு, அதற்காக 2021-ம் ஆண்டுக்கான எடின்பர் பதக்கம் வழங்கப்பட்டது. கர்ப்ப காலத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது குறித்த உலகின் முதல் ஆய்வாளரும் இவர்தான்.