Published:Updated:

முதலீடு 100 ரூபாய்... மாத வருமானம் 30,000 ரூபாய்... அசத்தும் பொம்மை பிசினஸ்!

ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள்

துணி பொம்மைகளை பத்திரப்படுத்துறது ஈஸி. இடத்தையும் அடைக்காது.

முதலீடு 100 ரூபாய்... மாத வருமானம் 30,000 ரூபாய்... அசத்தும் பொம்மை பிசினஸ்!

துணி பொம்மைகளை பத்திரப்படுத்துறது ஈஸி. இடத்தையும் அடைக்காது.

Published:Updated:
ஆண்டாள்
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டாள்

“எங்க வீட்டு கொலு ரொம்ப ஸ்பெஷல். அதுல வைக்கிற ஒவ்வொரு பொம்மையும், நானே என் கைப்பட பார்த்துப் பார்த்து செஞ்சது. எங்க வீட்டு கொலுவுக்கு வர்றவங்க பொம்மைகளைப் பாராட்டாமப் போனதில்லை...'' - மலர்ச்சியுடன் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஆண்டாள். துணிகளைப் பயன்படுத்திச் செய்த பொம்மைகள் இவர் வீட்டு கொலுவுக்கு கூடுதல் அழகு சேர்க்கின்றன. கடவுள் பொம்மைகளுக்கு நகை அலங்காரம் செய்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார் ஆண்டாள்.

“ எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. சென்னையில செட்டில் ஆகி ஏழு வருஷங்கள் ஆகுது. திருநெல்வேலி யிலேருந்து சென்னைக்கு வந்தபோது, மண் பொம்மைகள் எல்லாத்தையும் பத்திரமா எடுத்துட்டு வரமுடியல. சென்னை வீட்டுல அதுக்கு இடமும் இல்ல. மண் பொம்மைகளுக்கு மாற்றுவழியை யோசிச்சப்போ கிடைச்ச ஐடியாதான் துணி பொம்மைகள். என் தோழிகிட்ட இருந்தும், யூடியூப் பார்த்தும் பொம்மை தயாரிப்புக்கான அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டேன்.

முதலீடு 100 ரூபாய்... மாத வருமானம் 30,000 ரூபாய்... அசத்தும் பொம்மை பிசினஸ்!

ஆரம்பத்துல கடைகள்ல விற்கும் பார்பி டால் உட்பட வெஸ்டர்ன் பொம்மைகளை வாங்கி, அவற்றின் ஹேர் ஸ்டைல், டிரஸ்னு எல்லாத்தையும் பட்டுத்துணிகளால அலங்காரம் செய்திட்டிருந்தேன். கம்மல், நெத்திச்சுட்டி, வளையல் எல்லாம் அணிவிச்சு, தமிழ் கலாசாரத்துக்கு ஏற்றபடி மாத்தி, அந்தப் பொம்மைகளை போட்டோ எடுத்து, என்னுடைய சமூக வலைதள பக்கங்கள்ல பகிர்ந்திட்டிருந்தேன். நான் செய்த பொம்மைகளை வெச்சு சென்னையில முதல் வருஷ கொலு வெச்சேன்.

அப்புறமா துணி பொம்மைகள் செய்ய ஆரம்பிச்சேன். பிளவுஸ் துணிகளை வாங்கி, அதுல பொம்மைக்குத் தேவையான கைகள், கால்கள், உடல் அளவுகளை வெட்டியெடுத்து, கட்டுக்கம்பி வெச்சுத் தைக்கணும். பொம்மைக்குத் தேவையான முகம், கேன்வாஸ் துணிகள்ல செய்யப்பட்டு கடைகள்ல கிடைக்குது. அதை வாங்கி, பொம்மைக்காக நாம் தைச்சு வெச்சிருக்கிற கை கால், உடம்போடு இணைக்கணும். அப்புறம் ஆடை அலங்காரம் செய்து, ஸ்டோன் செயின்களைப் பயன்படுத்தி நகைகளும், கறுப்பு நூலால பொம்மைகளுக்கு ஜடை அலங்காரமும் செய்துட்டா அற்புத மான இறை உருவம் தயார். இந்தப் பொம்மை களை 12 இன்ச், 18 இன்ச், 24 இன்ச், 36 இன்ச் சுன்னு நம்ம விருப்பத்துக்கேற்ப எந்த உயரத் துக்கும் செய்ய முடியும்.

முதலீடு 100 ரூபாய்... மாத வருமானம் 30,000 ரூபாய்... அசத்தும் பொம்மை பிசினஸ்!

துணி பொம்மைகளை பத்திரப்படுத்துறது ஈஸி. இடத்தையும் அடைக்காது. அடுத்த வருஷ கொலுவுக்கு அந்தப் பொம்மைகளுக்கு, மேல அணிவிச்ச துணிகளை மட்டும் மாத்தி னாலே புதுசு போலாயிடும்'' என்ற ஆண்டாள், கொலு பொம்மை பிசினஸ் பற்றியும் பேசினார்.

“என் வீட்டு கொலு பொம்மைகளைப் பார்த்துட்டு அதே மாதிரி பொம்மைகள் வேணும்னு கேட்குறவங்களுக்கு தயார் செய்து கொடுக்கிறேன். ஆன்லைன் மூலமாகவும் பொம்மைகள் விற்பனை செய்யுறேன். திருமண பொம்மைகள், ரிட்டன் கிஃப்ட்டு களுக்கான ஆர்டர்களும் வரும். என்னுடைய முதலீடு வெறும் 100 ரூபாய்தான். ஆனா, இந்த பிசினஸ்ல மாசம் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன்” - அசரவைக்கிறார் ஆண்டாள்.