Published:Updated:

மாக்கல்சட்டி பழைய சோறும் மண்சட்டி மீன் குழம்பும்... லாவண்யா முகில்

லாவண்யா முகில்
பிரீமியம் ஸ்டோரி
News
லாவண்யா முகில்

பாரம்பர்யம்

ஏ.எஸ்

‘`ஆரோக்கியம் என்ற பெயரில் பாரம்பர்ய உணவுகளுக்கும் சிறுதானியங்களுக்கும் மாறினால் மட்டும் போதாது. மூதாதையர் சமைக்கப் பயன்படுத்திய மாக்கல், வார்ப்பட இரும்பிலான தோசைக்கல், வாணலி, மண் பாத்திரங்களும் சமையலறைக்குள் வந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி சாத்தியமாகும்’’ - அறிவுரையோடு ஆரம்பிக்கிறார், பாரம்பர்ய சமையல் சாதனங்களைப் பழக்கி, விற்பனை செய்து வரும் சென்னையைச் சேர்ந்த லாவண்யா முகில்.

‘`நான் சின்னவளாக இருந்தபோது மாக்கல் பாத்திரங்கள், மண்சட்டி போன்றவற்றைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள். எனக்குத் திருமணமான பிறகு, பாரம்பர்ய சமையலறை சாமான்களின் மீதிருந்த ஈர்ப்பால், அவற்றைத் தேட ஆரம்பித்தேன். சேலம், கோயம்புத்தூரிலிருந்து அவற்றை வாங்கி, அம்மா சொல்லிக்கொடுத்தபடி பழக்கி சமைக்க ஆரம்பித்தேன். அந்தச் சமையலை ருசித்த என் நண்பர்கள், தங்களுக்கும் அந்தப் பாத்திரங்கள் வேண்டுமென்று கேட்டார்கள். கூடவே அவற்றைப் பழக்கிக் கொடுக்கவும் கேட்டார்கள். `இதையே ஏன் பிசினஸாக ஆரம்பிக்கக் கூடாது’ என்று கேள்வி எழ, வீட்டிலேயே பாத்திரங்களைப் பழக்கி மொட்டை மாடியில் காயவைக்க ஆரம்பித்தேன். சிலர் வெளிநாடுகளுக்குக்கூட வாங்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். வாடிக்கை யாளர்கள் அதிகமானதும், தி.நகரில் ஓர் உணவகத்தில் கடையை ஆரம்பித்தேன். தற்போது ஆன்லைன் வரை விற்பனை சூடுபிடித்துவிட்டது...” - ஆரம்பம் சொல்லும் லாவண்யா, எந்தப் பாத்திரத்தை எப்படிப் பழக்குவது என்று டிப்ஸ் தந்தார்.

 மாக்கல் பாத்திரங்களின் மேல் விளக்கெண் ணெயில் குழைத்த கொம்பு மஞ்சள்தூளைத் தடவி இரண்டு நாள்கள் வெயிலில் வைக்க வேண்டும். பிறகு, தேங்காய் நாரால் தேய்த்து, வெந்நீரில் கழுவினால், பாத்திரம் தயார்.

லாவண்யா முகில்
லாவண்யா முகில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 பழக்காமல் நேரடியாக அடுப்பில் வைத்தால் பாத்திரத்தில் விரிசல் ஏற்பட்டும். இப்படிப் பழக்கிய பாத்திரத்தில் சாம்பார், கிரேவி, குழம்பு வகைகள், ரசம் ஆகியவற்றைச் சமைக்கலாம். மாக்கல் பாத்திரங்கள் சீக்கிரம் சூடேறக்கூடியவை. அதனால், தீய்ந்துவிடாமல் கவனமாகச் சமைக்க வேண்டும். சமைத்த உணவுகளை ஒரு நாள் முழுக்க வெளியில் வைத்திருந்தாலும் கெடாமல் பாதுகாக்கும் தன்மை கொண்டவை இந்தப் பாத்திரங்கள்.

 மாக்கல் பாத்திரங்கள் அந்தக் காலத்து ஃபிரிட்ஜ் போன்றவை. மாக்கல் சட்டியில் இரவு மீந்த சாதத்துடன் தண்ணீர் ஊற்றி வைத்தால், காலையில் பழைய சாதம் அத்தனை மணமாக இருக்குமாம். மாக்கல் தவாவில் சுடுகிற தோசைக்குப் பெயர்தான் கல் தோசை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

 வார்ப்பட இரும்பால் செய்யப்பட்ட தோசைக்கல் மற்றும் வாணலியைச் சாதம் வடித்தக் கஞ்சியில் ஒரு வாரம் ஊறவைத்து, பிறகு உப்பால் தேய்த்துக் கழுவி, ஈரம் போகத் துடைத்து, சமையல் எண்ணெய் தடவினால் ரெடியாகிவிடும். இந்தக் கல்லில் வார்த்தால் குறைவான எண்ணெயில் முறுகலான தோசை வரும். வார்ப்பட இரும்பில் எடை குறைவான சப்பாத்திக்கல்லும் இப்போது வருகிறது. புளி சேர்க்காத பொரியல், வறுவல், கிரேவி போன்றவற்றை இதில் சமைக்கலாம்.

 மண்பாண்டங்களுக்குள் வழிய வழியத் தண்ணீர் ஊற்றி, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெயிலில் காயவைத்தால் மண்பாண்டங்கள் இறுகிவிடும். இதில் எண்ணெய்விட்டு கைப்பிடி வெங்காயத்தை வதக்கியெடுத்துவிட்டு, சமைக்கலாம். சாதம், சாம்பார், ரசம், மீன்குழம்பு, சிக்கன் மற்றும் மட்டன் குழம்பு, புலாவ், பிரியாணி என்று எல்லாவற்றையும் மண்பாண்டங்களில் சமைக்கலாம். ருசியோடு தாது உப்புகளும் சேரும். பாரம்பர்ய பாத்திரங்களைத் தற்கால கெமிக்கல் சோப்புகளால் கழுவாமல், சோப்புக்காய் நுரை, தேங்காய் நார், மீந்த இட்லி மாவு போன்ற வற்றை வைத்துக் கழுவுவதே முறையானது.