Published:Updated:

ஒரு பயணம், இரு பெண்கள், ஓராயிரம் அனுபவங்கள்...

தனலட்சுமி, மாதுரி
பிரீமியம் ஸ்டோரி
தனலட்சுமி, மாதுரி

#Motivation

ஒரு பயணம், இரு பெண்கள், ஓராயிரம் அனுபவங்கள்...

#Motivation

Published:Updated:
தனலட்சுமி, மாதுரி
பிரீமியம் ஸ்டோரி
தனலட்சுமி, மாதுரி

`பயணம்... உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் பரிசு’ என்றொரு பொன்மொழி உண்டு. பயண ஆர்வலர்களுக்கு அதன் அருமை புரியும். அந்தப் பயணத்தில் கொஞ்சம் சாகசமும் சேரும்போது சுவாரஸ்யம் இன்னும் கூடுவதையும் அவர்கள் உணர்வார்கள். ‘`அந்த சுவாரஸ்யத்தை நாங்க மட்டுமே அனுபவிச்சா போதுமா... பயணத்துல ஆர்வமுள்ள ஒவ்வொரு பெண்ணும் ஃபீல் பண்ணணும். அதுதான் எங்க ட்ரிப் சொல்லும் மெசேஜ்’’ என்கிறார்கள் தனலட்சுமியும் மாதுரியும். அனுபவம் பகிர்கிறார்கள் தோழிகள்... பிஜிஎம் மில் ‘பறக்கும் ராசாளியே...’ ஒலிப்பது போலிருக்கிறது நமக்கு.

டி.எஃப்.டியில் எடிட்டிங் முடித்திருக்கும் தனலட்சுமி, பிரபல கேமராமேன் அல்போன்ஸ் ராயின் தத்துப்பெண். ‘96’ பட இயக்குநர் பிரேம்குமாரின் காதல் மனைவி. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படக் கதையின் நிஜ ஹீரோ, ஹீரோயின் இவர்கள். யெஸ்... இவர்களின் வாழ்க்கைச் சம்பவம்தான் அந்தப் படத்தின் கதை. தனலட்சுமியுடன் பைக் டிராவல் செய்த மாதுரி, ‘மாஸ்டர்’, ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட படங்களிலும், விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான ‘வல்லமை தாராயோ’ வெப் சீரிஸிலும் நடித்திருப்பவர்.

கணவர், மகளுடன் தனலட்சுமி
கணவர், மகளுடன் தனலட்சுமி

‘`பிரபல சேனல்கள்ல எடிட்டரா வேலை பார்த்திட்டிருந்தேன். கன்சீவ் ஆனதும் வேலையை விட்டேன். கணவருக்கு ஸ்கிரிப்ட் டுல சஜஷன்ஸ் சொல்றது, சினிமாவை பத்தி பேசறதுனு பத்து வருஷங்கள் ஓடிடுச்சு. மகள் சாலை வேதாவுக்கு 12 வயசாகுது. சினிமா பண்ணணும்ங்கிற ஆர்வம் மட்டும் எனக்கு குறையவே இல்லை. அந்த ஆசையை என் கணவர்கிட்ட சொல்லிட்டே இருப்பேன். ‘பத்து வருஷம் இடைவெளி விழுந்திடுச்சு. அதனால உன்னை நிரூபிக்கிற மாதிரி ஏதாவது பண்ணு’ன்னு சொன்னார். வீட்டுக்குள்ளேயே இருக்குற பெண்கள் எப்படியெல்லாம் தியாகம் பண்றாங்க, அவங்க எப்படி வெளியில வரணும்னு ‘சாக்‌ஷி’ என்ற பெயர்ல ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணினேன். அதைப் பார்த்துப் பாராட்டினதோடு, நீ தைரியமா மறுபடி சினிமாவுக்குள்ளே வான்னு என்கரேஜ் பண்ணினார்.

எனக்கு டிராவல் ரொம்ப பிடிக்கும். என்னை மாதிரியே டிராவல்ல ஆர்வமுள்ள மாதுரி அறிமுகமானாள். எங்கேயாவது லாங் டிரைவ் போலாமானு ஒரு கேஷுவல் உரையாடல்லதான் ஆரம்பிச்சது. அப்புறம் எங்கே போறது, எப்படிப் போறதுனு அந்த உரையாடல் வளர்ந்து கடைசியா பைக் டிராவல், சென்னை டு தென்காசிங்கிறவரை வந்து நின்னது’’

- ஆரம்பம் சொல்கிற தனலட்சுமிக்கு 40 வயது. மாதுரிக்கு 22 வயது. ஆர்வத்துக்கும் நட்புக்கும் வயது தடையில்லை என்பதையும் நிரூபித்திருக்கிறது இவர்களது சாகசப் பயணம்.

``நானும் மாதுரியும் பைக் ஓட்டக் கத்துக் கலாம்னு முடிவெடுத்தோம். டிரெய்னர் வெச்சு ஸ்டார்சிட்டி பைக் ஓட்டக் கத்துக் கிட்டோம். ஒரே வாரத்துல சூப்பரா பழகிட் டோம். 40 வயசுல யாராவது பைக் ஓட்டு வாங்களா... லேடீஸுக்கு இதெல்லாம் தேவை யாங்கிற மாதிரியான எந்தக் கேள்வியும் எங்க வீட்டுல வரலை. ரைடு போகப் போறோம்னு சொன்னதும் எல்லாரும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டாங்க. என் கணவர் ஜாவா கிளப்ல உறுப்பினர். அந்த வகையில ஜாவா கிளப்பை சேர்ந்த னிவாசன், எங்க ரெண்டு பேருக்கும் பைக் தர ஓகே சொன்னார். ‘இதுதான் நீங்க ஓட்டப் போற பைக்’னு அவர் காட்டினது பிரமாண்டமான சிங்கிள் சீட்டர் பெராக்கும் 42-வும். ஆளுக்கொரு பைக்கை செலக்ட் பண்ணினோம். அதை வீட்டுக்கு கொண்டு வந்ததுலேருந்து எங்களுக்கு பயங்கர எக்ஸைட் மென்ட். முதல் நாள் என்னால பைக்கை தள்ளக்கூட முடியலை. என் கணவர்தான் நகர்த்திக் கொடுத்து சின்னச் சின்ன நுணுக்கங் களையும் சொல்லிக் கொடுத்தார். தினமும் காலையில 4 மணிக்கு எழுந்து ஓட்டிப் பழகி னோம். எங்களுடைய இந்த முயற்சியையும் பயணத்தையும் டாகுமென்டரியா எடுக் கணும்னு அப்பவே முடிவு பண்ணிட்டோம்’’ - தனலட்சுமி நிறுத்த, மாதுரி தொடர்கிறார்...

‘`ப்ளான் பண்ணபடியே ஜூலை 21-ம் தேதி ட்ரிப் கிளம்பிட்டோம். நாங்க பைக்ல கிளம்ப, `96’ பட கேமரா மேன் மஹி அண்ணாவும், டிரோன் ஆபரேட்டரும், இன்னும் சிலரும் எங்க கூடவே கார்ல வந்தாங்க. ட்ரிப் கிளம்பற துக்கு முன்னாடி ட்ரையல் பார்க்கலாம்னு முதல்ல மகாபலிபுரம் வரைக்கும் போனோம். அதுலயே செம டயர்டாயிட்டோம். ஜாக்கெட், கிளவுஸ், ஹெல்மெட்டெல்லாம் போட்டுட்டு பைக் ஓட்ட ரொம்பவே சிரமமா இருந்தது. ஆனாலும் அதையும் மீறி தென்காசி கிளம்பி னோம். போற வழியெல்லாம் எங்கே வெயில் அடிக்கும், எங்கே மழை பெய்யும்னு கணிக்க முடியாத வானிலை... ஆளையே தள்ளிவிடற மாதிரி பலமான காற்று... எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணி, அவ்வளவு பெரிய பைக்கை ஓட்டிட்டுப் போனது செம எக்ஸ் பீரியன்ஸ்’’

- சிலிர்க்கிறது மாதுரிக்கு... நமக்கும்தான்.

தனலட்சுமி, மாதுரி
தனலட்சுமி, மாதுரி

சென்னையிலிருந்து புதுக்கோட்டை, சித்தன்னவாசல், கடையம், குத்துக்கல் வலசை... இறுதியாக தென்காசி என பத்து நாள் பயணம் இது. ஒவ்வொரு நாள் பயணத்திலும் இயற்கையை ரசித்தபடி, அந்தந்த ஊர் மக்களின் அன்பை சம்பாதித்தபடி, கோயில்கள், மலைகள், அணைகள், ஆறுகள் என அனைத் தையும் அனுபவித்து திரும்பியிருக்கிறார்கள்.

‘`நிறைய பெண்களுக்கு டிராவல் பண்ணணும்னு ஆசை இருக்கும். ஆனா தயங்குவாங்க அல்லது அவங்க வீட்டுல அனுமதிக்க மாட்டாங்க. அந்தத் தயக்கத்தை உடைக்கணும், பெண்கள் வெளியில வரணும்னு நினைச்சுதான் எங்களுடைய இந்த ட்ரிப்பை டாகுமென்டரியா பண்ணத் திட்ட மிட்டோம். டிராவல்ல ஆர்வமுள்ள பெண்கள் எங்களை அணுகினா அவங்களுக்கு பைக் ஓட்டக் கத்துக்கொடுத்து, ட்ரிப் கூட்டிட்டுப் போய் பத்திரமா திரும்ப கூட்டிட்டு வந்து விட ப்ளான் பண்ணிருக்கோம்’’ என்கிற தனாவும் மாதுரியும் அடுத்து ராஜஸ்தான் அல்லது கூர்க் பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருக் கிறார்கள்.

இன்னொரு பக்கம் இரண்டு ஸ்கிரிப்ட்டு களுடன் தனாவும், தன் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பேச்சிலர்’ உள்ளிட்ட சில படங் களின் ரிலீஸுக்காக மாதுரியும் வெயிட்டிங்.

சிறகுகள் விரியட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism