Published:Updated:

`கமல் கொள்கையை குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்ப்பேன்!' - வசந்தியின் `பைக்' பிரசாரம்

பைக் பிரசாரத்தில் வசந்தி
பைக் பிரசாரத்தில் வசந்தி ( நா.ராஜமுருகன் )

''நாமக்கல் ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்குப் போய், ஸ்பான்ஸர் கேட்டேன். 'வரும் தேர்தல்வரை மாவட்டத்தை வலம்வர பைக் கொடுத்து உதவ முடியுமா?' என்று கேட்டேன்.''

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு, 'கமலின் கொள்கையை குக்கிராமங்களுக்கும் கொண்டு சேர்ப்பேன்' என்று, அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் புது ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் கிராமம் கிராமமாகப் பயணத்தைத் தொடங்கியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துவருகிறது.

பைக் பிரசாரத்தில் வசந்தி
பைக் பிரசாரத்தில் வசந்தி
நா.ராஜமுருகன்

நவம்பர் 7-ம் தேதி, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளை, அவரது கட்சியின் தொண்டர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடினர். வரும் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் செயல்பாடுகளைத் திட்டமிட்டனர். அந்த வகையில், நாமக்கல் மத்திய மாவட்ட மகளிரணி மற்றும் குழந்தைகள் நல அணியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் வசந்தி, தனி ஆளாகப் புத்தம் புது பைக்கில் கிராமம் கிராமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார். பைக்கில் மக்கள் நீதி மய்யத்தின் கொடி, கழுத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம், கமல் போட்டோ உள்ள துண்டு என்றவாறு அவர் பயணித்து வருகிறார்.

கரூர்: ``எங்க ஊர் வறட்சியைப் போக்கணும்!'' - காடு வளர்க்கும் ஊராட்சிமன்றத் தலைவி

வசந்தியிடம் பேசினோம்.

"நான் சிறுவயது முதல் கமலின் தீவிர ரசிகை. நற்பணி இயக்கமா இருந்தபோதே, கமல் எங்களை மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்பவர்களா மாற்றி வைத்திருந்தார். நானும் பல நலத்திட்டங்களை மக்களுக்குத் தொடர்ந்து செய்துவந்தேன். கமல் கட்சி ஆரம்பித்ததும், எனக்கு இப்போ மத்திய மாவட்ட மகளிரணி மற்றும் குழந்தைகள் நல அணியின் மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க. தொடர்ந்து, நாமக்கல் மத்திய மாவட்டத்தில், கமலின் கொள்கைகளை மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்த்துக்கிட்டு இருக்கோம்.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், கமலை ஆட்சி அரியணையில் ஏற்றிக்காட்ட வேண்டும் என்ற முடிவோடு, கடுமையா வேலைசெய்துட்டு இருக்கோம். இந்த நிலையிலதான், கமலின் 66-வது பிறந்தநாள் கடந்த 7-ம் தேதி வந்தது. அதை வித்தியாசமான முறையில் கொண்டாட நினைத்தேன். அப்போதான், மாவட்டம் முழுக்க வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்வதுனு முடிவு செய்தேன்.

பைக் பிரசாரத்தில் வசந்தி
பைக் பிரசாரத்தில் வசந்தி
நா.ராஜமுருகன்

ஆனா, என்கிட்ட டூவீலர் இல்ல. 10 நாளுக்கு முன், நாமக்கல் ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்கு போய், விஷயத்தைச் சொல்லி, ஸ்பான்ஸர் கேட்டேன். 'வரும் தேர்தல்வரை மாவட்டத்தை வலம் வர பைக் கொடுத்து உதவ முடியுமா?'னு கேட்டேன். அவங்களும் உடனடியா எனக்கு ஹிமாலயன் பைக் தர ஒத்துக்கிட்டாங்க. கடந்த 10 நாளைக்கு முன்பிருந்தே, வாகனப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன்.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கிடைக்கிற நேரத்தில் பிரசாரத்துக்குப் போறேன். ஆனா, சனி, ஞாயிற்றுக்கிழமைகள்ல மட்டும் தவறாம பிரசார பயணம் போவேன். மக்கள் நீதி மய்யத்தின் மத்திய மாவட்டச் செயலாளர் ஆதம் பரூக், எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். மத்திய மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களை சந்திக்கிறேன். கமலின் கொள்கை, கமலை ஏன் ஆதரிக்க வேண்டும், மற்ற கட்சியினரை வரும் தேர்தலில் ஏன் ஒதுக்க வேண்டும்னு பல விஷயங்களை அந்த பிரசாரத்தின்போது மக்களிடம் எடுத்துச் சொல்றேன்.

பைக் பிரசாரத்தில் வசந்தி
பைக் பிரசாரத்தில் வசந்தி
நா.ராஜமுருகன்

கடந்த வெள்ளிக்கிழமை பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மகளிர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு நாமக்கல் டு பொள்ளாச்சி வரை இந்த பைக்கிலேயே போய்ட்டு வந்தேன். வழிநெடுக எதிர்கொண்ட மக்களிடம், எங்கள் அமைப்பின் கொள்கையை எடுத்துச் சொன்னேன். மக்களும் கட்சியினரும் என் முயற்சியை வெகுவா பாராட்டுறாங்க. 'கமல் மாதிரி வித்தியாசமா சிந்தித்து செயல்படுற...' என்று மாற்றுக்கட்சியினரும் என் முயற்சியைப் பாராட்டுறாங்க. வர்ற சட்டமன்றத் தேர்தல் வரை, இந்த பிரசாரப் பயணம் விடாமல் தொடரும்" என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு