Published:Updated:

விழுப்புரம்: ``கல்லூரியில சேர முடியல; வீட்டுல துணி தைக்கிறேன்!'' - கிராமத்து மாணவியின் குரல்

மாணவி ஐஸ்வர்யா

நான் 12-ம் வகுப்புல 407/600 மார்க் எடுத்தேன். எனக்கு பி.எஸ்ஸி ''நர்ஸிங் படிக்க ஆசை. பக்கத்துல உள்ள சில தனியார் கல்லூரியில, டொனேஷன் கேட்டாங்க. அதனால என்னால அங்க சேர முடியல.

விழுப்புரம்: ``கல்லூரியில சேர முடியல; வீட்டுல துணி தைக்கிறேன்!'' - கிராமத்து மாணவியின் குரல்

நான் 12-ம் வகுப்புல 407/600 மார்க் எடுத்தேன். எனக்கு பி.எஸ்ஸி ''நர்ஸிங் படிக்க ஆசை. பக்கத்துல உள்ள சில தனியார் கல்லூரியில, டொனேஷன் கேட்டாங்க. அதனால என்னால அங்க சேர முடியல.

Published:Updated:
மாணவி ஐஸ்வர்யா

விழுப்புரம் மாவட்டத்தில் 12.02.2021 அன்று, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ எனும் தி.மு.க-வின் 3-ம் கட்ட பிரசார கூட்டம் நடைபெற்றது. அதில் பலதரப்பட்ட மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது பேசிய திருக்கோவிலூர் தொகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா எனும் மாணவி, "எங்க பகுதியில பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்ல. ஆஸ்திரேலியாவுல தமிழை இரண்டாவது மொழியா பதிவு செஞ்சிருக்காங்க. ஆனா, தமிழகத்துல இந்தியைத் திணிக்க நினைக்கிறாங்க. நான் 407/600 மார்க் எடுத்தும் கல்லூரியில சீட் கிடைக்கல. கிராமப்புற மாணவர்களை அடிமட்டம் வரை அழுத்துறாங்க” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

கூட்ட அரங்கில் மக்கள்
கூட்ட அரங்கில் மக்கள்

நிகழ்ச்சி முடிந்த பின்னர், ஐஸ்வர்யாவிடம் பேசினோம். ``என் பேரு ஐஸ்வர்யா. 2019 - 2020-ல தான் ப்ளஸ் டூ முடிச்சேன். என் ஊரு வீரபாண்டி. என் அப்பா ஆறுமுகம், அம்மா மகேஸ்வரி. அப்பா கொத்தனார் வேலைக்குப் போவாரு. ஒரு நாள் முழுக்க வேலை செஞ்சா 500 ரூபாய் கூலி கிடைக்கும். வேலையில்லைன்னா, பக்கத்துல இருக்குற கோவில்ல பூசாரியா இருப்பாரு. எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி இருக்காங்க. ஏழ்மையான குடும்பம்.

நான் 12-ம் வகுப்புல 407/600 மார்க் எடுத்தேன். எனக்கு பி.எஸ்ஸி நர்ஸிங் படிக்க ஆசை. பக்கத்துல உள்ள சில தனியார் கல்லூரியில, டொனேஷன் கேட்டாங்க. அதனால என்னால அங்க சேர முடியல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த ஒரு வருஷமா வீட்லதான் இருக்கேன். 2011-ம் வருஷம் ஊர் மக்கள் சார்பா 1,00,000 ரூபாய் டெபாசிட் கட்டி அரகண்டநல்லூர்ல பெண்கள் மேல்நிலைப்பள்ளி வேணும்னு கேட்டோம். இதுவரை கட்டித்தரல. அங்க பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தா நிறைய பெண் பிள்ளைகள் போய் படிப்பாங்க. ஏன்னா, அது எங்களுக்கு பக்கத்துல இருக்கு. எங்க சுத்துவட்டாரத்துல கோ எஜுகேஷன் அரசுப் பள்ளிகள்தான் இருக்கு. அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்ல. நானும்கூட கோ எஜுகேஷன் பள்ளியிலதான் படிச்சேன். எங்க பகுதியில ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருந்தா, இன்னும் நிறைய பெண்கள் வந்து படிப்பாங்க.

மாணவி ஐஸ்வர்யா
மாணவி ஐஸ்வர்யா

விழுப்புரம் (60 கி.மீ), திருவண்ணாமலை (40 கி.மீ), திருவெண்ணைநல்லூர் (30 கி.மீ) இங்கயெல்லாம்தான் அரசு கல்லூரிகள் இருக்கு. இது எல்லாமே எங்க ஊருல இருந்து ரொம்ப தூரம். அதிக தூரமா இருக்குறதால பொம்பளப் புள்ளைகள படிக்க வெளியூருக்கு அனுப்ப வீட்டுல பயப்படுறாங்க. எங்க ஊருல நிறைய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் இருக்காங்க. நல்லா படிப்பாங்க. பொம்பளப் புள்ளைகள வெளியில படிக்க அனுப்ப பயந்துகிட்டு பல பெற்றோர்கள் 12வது முடிச்சவுடன் ஒண்ணு, ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணி வெச்சிடுறாங்க.

எங்க ஊருக்குப் பக்கத்துலேயே ஸ்கூல், காலேஜ் இருந்தா எங்களாலயும் படிக்க முடியும். எனக்கு தமிழ் ரொம்பப் பிடிக்கும். 12-ம் வகுப்புல 97/100 மதிப்பெண் எடுத்தேன். ஆனா, இப்போ இந்தியைத் திணிக்கிறாங்க. இந்தியாவின் ஆணிவேர் தமிழ்நாடு. அனைத்து வரலாறுகளும் இங்கதான் குவிஞ்சு கிடக்கு. நம்மால எல்லாமே முடியும். இந்தியைப் படிக்கச் சொன்னா படிச்சுடலாம். ஆனா, திணிக்கக் கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்ன வயசுல, என்ன படிக்கணும், என்னவாகணும்னு பல கனவுகள் இருந்தது. இப்போ என் ஆசை, நர்ஸிங் படிப்புதான். அதுக்குக் கொரோனா வைரஸ்தான் காரணம். அந்தப் பேரிடர் காலத்துல நடந்த விஷயங்களை எல்லாம் பார்த்தப்போதான் தோணுச்சு. நாம படிக்கிற படிப்பு நமக்கு மட்டும் பயன்படும்படியா இருக்கக் கூடாது, பலருக்கும் பயன்படணும்னு.

கூட்ட அரங்கில் மக்கள்
கூட்ட அரங்கில் மக்கள்

எங்கள மாதிரி கிராமத்துப் பிள்ளைகளுக்கு எல்லாம் வாய்ப்புகள் ரொம்ப குறைவாதான் சார் கிடைக்கும். எங்களால முடியாததுனு எதுவும் இல்ல. ஆனா, எங்களுக்கு என்ன வரும்னு பார்த்து கைதூக்கிவிடத்தான் யாரும் இல்ல. 'நீங்க இதைப் பண்ணுங்க, இப்படிப் பண்ணுங்க'னு ஊக்கப்படுத்துங்க போதும்.நாங்க சாதிச்சிடுவோம்.

இவ்ளோ பேசுறேன். கல்லூரியில சேர முடியாம போனதால, டெய்லரிங் கத்துக்கிட்டு இப்போ நான் வீட்டுல துணி தைச்சுக்கிட்டு இருக்கேன். கிராமத்துப் பிள்ளைகளுக்கு விட்ட வழி அவ்ளோதான்'' - ஆதங்கத்துடன் முடிக்கிறார் ஐஸ்வர்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism