`வரலாற்றில் பெயரில்லாதவர்கள் பெரும்பாலும் பெண்களே’ என்கிறார் வெர்ஜினியா வுல்ஃப். வரலாறுகள் பெரும்பாலும் ஆண்களால் எழுதப்படுபவை.

அதனாலேயே வரலாற்றின் பக்கங்களிலிருந்து பெண்கள் காலங்காலமாக வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். பல நேரங்களில் வரலாற்றில் இடம்பெறுவதற்கே சில ‘தகுதிகள்’ தேவைப்படுகின்றன. ரோஸா பார்க்ஸ் எனும் கறுப்பினப் பெண் தனது பேருந்து இருக்கையை ஆங்கிலேயருக்கு விட்டுத் தர மறுத்தார். அந்த சிறு செய்கையின் மூலம் வரலாற்றில் எதிர்ப்புணர்வின் பெரும் சின்னமாக இடம் பெற்றிருக்கிறார்.

ரோஸா பார்க்ஸ் அந்த எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு அதே எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திக் கைதானார் கிளாடட் கால்வின். கைதாகும்போது தனது சட்டரீதியான உரிமைகள் பறிக்கப்படுவதாக கோஷமும் எழுப்பினார். அப்போது அவருக்கு வயது 15. கால்வின் அப்போது திருமணமாகாமலேயே கர்ப்பமுற்றிருந்தார். அதன் காரணமாகவே அவர் எதிர்ப்புணர்வின் ஒரு சின்னமாக பார்க்கப்படவில்லை. `வெள்ளை இதழியலாளர்களுக்கு மட்டும் கால்வின் பற்றி தெரியவந்திருந்தால் அவரது ஒழுக்கம் பற்றிப் பேசிக்கொண்டாடியிருப்பார்கள். நோக்கம் அடிபட்டுப் போயிருக்கும்' என்று பின்னாளில் கால்வின் பற்றி சொல்கிறார் ரோஸா பார்க்ஸ்.

இப்படித்தான் வரலாறு பெண்களுக்கு - அதுவும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கென்று வேறுவிதமான மதிப்பீடுகளை வைத்திருக்கிறது. அந்த மதிப்பீட்டின் வரையறைகளுக்குள் சிக்காத பெண்களை வரலாறு அதன் பக்கங்களிலிருந்து குரூரமாக வெளியேற்றிவிடுகிறது, அவர்கள் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்தாலும்.

தமிழ்நாட்டிலேயே உதாரணங்கள் உண்டு. நீதிக்கட்சிக்கு முன்னோடியான தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் கூட்டத்தில் (1916-ம் ஆண்டு) கலந்துகொண்ட 30 தலைவர்களில் ஒரேயொருவர் பெண். அதில் பல தலைவர்களைத் தெருக்களின், பகுதிகளின், பூங்காக்களின் பெயர்களாகவாவது அறிந்திருப்போம். ஆனால், அலமேலுமங்கை தாயாரம்மாளின் பெயர் வரலாற்றின் எந்த சந்துபொந்திலும் இல்லை. அவர் எந்தத் `தகுதி’யின் காரணமாக வரலாற்று நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆக, உலக வரலாறு தொடங்கி உள்ளூர் வரலாறுகள் வரை இதுதான் நிதர்சனம்.

இந்த நிதர்சனத்தைச் சற்றே அசைத்துப் பார்க்கும் முயற்சிதான் `முதல் பெண்கள்'. அவள் விகடன் இதழில் நிவேதிதா லூயிஸ் எழுதி தொடர்பகுதியாக வெளியான இந்தக் கட்டுரைகள், இப்போது தமிழின் குறிப்பிடத் தகுந்த பெண்ணிய பதிப்பகமான `மைத்ரி'யின் மூலம் நூல் வடிவம் கண்டுள்ளது. `முதல் பெண்கள்' புத்தகம் வரலாற்றின் இருள் பக்கங்களிலிருந்து 45 பெயர்களை மீட்டெடுத்து அவற்றின் மீது சிறுவெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. இவர்களில் பலரை வெறும் பெயர்களாகக் கேள்விப்பட்டிருப்போம். சிலரை அப்படிக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்தியாவின் முதல் பெண்கள் பத்திரிகையைத் தொடங்கி நடத்திய கமலா சத்தியநாதன், இந்தியாவின் முதல் பெண் விமானியான உஷா சுந்தரம், தென்னிந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்களான சீதா தேவதாஸ் ஆனந்தா பாய், சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை என்று நீள்கிறது நிவேதிதாவின் வரலாற்றுப் பட்டியல்.

இந்தப் பட்டியலில் நமக்குச் சற்றே பரிச்சய மான சத்தியவாணி முத்து, ராஜம் கிருஷ்ணன், எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றோரும் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களை புதிய வெளிச்சத்தில் காட்டுகிறார் நிவேதிதா. உதாரணத்துக்கு சுப்புலட்சுமி போன்ற ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மீது சதாசிவம் செலுத்திய நுணுக்கமான ஆதிக்கத்தை லேசாக - ஆனால் அழுத்தமாகச் செய்கிறார். அதே போல, ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றியும், அவரது இலக்கியப் பணியில் அதன் முக்கியத்துவம் பற்றியும் மிக விரிவாகப் பேசுகிறார்.

வரலாற்றுப் பதிவுகள் இல்லாத இடங்களில், வேர் மறைந்திருக்கும் நிலத்தில் அதற்கான தேடலை நிகழ்த்தும் பணி அசாதாரண மானது. கடும் தேடுதலுக்குப் பிறகு விடை கிடைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதி யானது. அந்தப் பயணத்தின் சவால்களை கமலா சத்தியநாதனை முன்னிறுத்தி நிவேதிதா விவரிக்கும்போது ஏற்படும் உணர்வு கலவையான ஒன்று. தேடுதலின் வெற்றி உவகையைத் தந்தாலும் இன்னும் பெண் வரலாற்றின் நிரப்பப்படாத பக்கங்களில் ஒளிந்திருக்கும் எண்ணற்ற பெயர்கள் பற்றிய எண்ணம் சட்டென ஓர் அயற்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், பெண் வரலாற்றின் போதாமைகள் பற்றிய அயற்சியைச் சற்றே ஆற்றுப்படுத்தும் வல்லமையை `முதல் பெண்கள்' புத்தகம் கொண்டிருக்கிறது. வரலாற்றின் அகன்ற வெளியில் ஒரு சிறு பள்ளத்தை இட்டு நிரப்பும் மகத்தான பணியைச் செய்திருக்கிறார் நிவேதிதா.

ஆங்கிலத்தில் Goodnight Stories for Rebel Girls (கிளர்ச்சி செய்யும் சிறுமிகளுக்கான இரவுக் கதைகள்) என்கிற புத்தகம் இரண்டு தொகுதிகளாக வெளிவந்தது. கிட்டத்தட்ட அந்த பாணியை நினைவுபடுத்தும் முதல் பெண்கள், பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய ஒரு நூல். பெண்களின் மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பொறுத்தவரையில் அதுவே சிறு பிராயச்சித்தமாக இருக்கும்.

வெளியீடு: மைத்ரி புக்ஸ்,

49பி, ஓமேகா பிளாட்ஸ், 4-வது லிங்க் சாலை, சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை-91. தொடர்புக்கு: 94455 75740

விலை: ₹ 200