பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான போக்சோ வழக்குகள் தொடர முன்வரும் பெண்களுக்கு மனநல ஆலோசனை வழங்க `தோழி' என்ற திட்டத்தைத் தமிழகக் காவல்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் தோழி பிரிவில் சுமார் 70 காவல்துறை பெண் அதிகாரிகள் பணியாற்ற உள்ளார்கள். சமீபத்தில் மாநகரக் காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். வடசென்னை சட்டம் ஒழுங்கு காவல்துறைத் துணை ஆணையரான ஆர்.தினகரன் முயற்சியில் இந்தத் திட்டம் உருவாகியிருக்கிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இந்தத் திட்டத்தின்கீழ் தலா இரண்டு பெண் காவலர்கள் பணியாற்றுவார்கள்.

காவல் நிலையத்துக்குட்பட்ட, போக்சோ புகார் தந்த பெண்களை அவ்வப்போது இல்லங்களில் சென்று சந்திப்பது, அவர்களுக்குத் தேவையான மனநல மற்றும் பிற ஆலோசனைகள் தருவது என்று இவர்கள் களப்பணியாற்றுவார்கள். நிர்பயா சின்னம் பொறிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ணச் சீருடைச் சேலைகளை இந்த அலுவலர்கள் அணிந்திருப்பார்கள். ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற திட்டத் தொடக்க விழாவில் மனநல மருத்துவர் ஷாலினி, சென்னை மேற்கு துணை ஆணையர் பி.விஜயகுமாரி, லயோலா கல்லூரியின் முனைவர் ஆன்ட்ரூ சேசுராஜ், துணை காவல்துறை ஆணையர் ஹெச்.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இனி காவல்துறையும் நம் தோழியே!

சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பெருமாளின் மகளான சுப்ரஜா, ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற ஏரோபிக் ஃபிட்னஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

17 வயதான சுப்ரஜா, கோவையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலைப் பொருளாதாரம் படித்துவருகிறார். இவருக்கு ஏரோபிக்ஸ் பயிற்சி அளித்துவரும் இவர் தாய் பார்வதி, ஏரோபிக்ஸ் ஃபிட்னஸ் போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்கள் வென்றவர். மாவட்ட, மாநிலப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சுப்ரஜா, தேசியப் போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளார்.

ரஷ்யாவில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஏரோபிக்ஸ் ஃபிட்னஸ் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவில் இடம்பிடித்தார் சுப்ரஜா. பல நாடுகளிலிருந்து 1,500 பேர் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் தனிநபர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார் சுப்ரஜா. “சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் ஆசையில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டேன். 1.47 நிமிடங்கள் இசைக்கு ஏற்றவாறு உடலை வளைத்து ஆடி வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க ரஷ்யா செல்ல 1.5 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. பலரது உதவியால்தான் இந்தப் போட்டியில் என்னால் பங்கேற்று வெற்றிபெற முடிந்தது. திறமையுள்ள வீரர்களை ஊக்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் தேவையான நிதியுதவி செய்தால், உலக அளவில் நம் வீரர்கள் நிச்சயம் சாதிப்பார்கள்” என்று கூறியுள்ளார் சுப்ரஜா.

வாழ்த்துகள் சுப்ரஜா!

சமீபத்தில் அசாம் மாநிலம், தரங் மாவட்டத்தில் ஆசிரியர் பணிக்கான டெட் (TET) தேர்வுகள் நடைபெற்றன. அப்போது அங்கு குழந்தைகளுடன் தேர்வெழுத வந்த அம்மாக்களின் குழந்தைகளை பெண் காவலர்கள் தாங்களே முன்வந்து கவனித்துக்கொண்டார்கள். காவல்துறை சீருடையில் பெண் அதிகாரிகள் குழந்தை களுடன் தேர்வு அறைக்கு வெளியே நடமாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அசாம் காவல்துறை, `தாய்மை என்பது ஒரு பணி. அது நீங்கள் செய்யும் பணி; வெறும் பெயர் மட்டுமே அல்ல' என்று தலைப்பிட்டிருந்தது.

`தரங் மாவட்டத்தின் அசாம் காவல்துறை அதிகாரிகளின் வசம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு டெட் தேர்வெழுதும் அம்மாக்கள்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ட்விட்டரில் வந்த படத்தைக் கண்டு பல காவல்துறை ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் சீருடையில் குழந்தைகளைப் பராமரிப்பது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்தனர். இந்தப் படத்தைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுப் பாராட்டியுள்ளார் அசாம் - மேகாலய மாநிலங்களின் டி.ஜி.பி குலராம் சைகா.

காக்கிக்குள் தாய்மை!

ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சில நாள்களாக பெரும் தீப் பரவி காடுகளை நாசம் செய்துவருகிறது. கிழக்குப் பகுதியின் 25 லட்சம் ஏக்கர் காடுகளைத் தீ அழித்துவிட்டது. இதில் அதிக உயிர்ச்சேதம் கோலாக்கரடிகளுக்குத்தான். ஆஸ்திரேலியாவின் மூன்றில் இரண்டு பங்கு கோலாக்கரடிகள் இந்தக் காடுகளில் வாழ்ந்துவருகின்றன. இவற்றில் 300 கரடிகள் நெருப்புக்கு இரையாகியிருக்கலாம் என்று சூழலியலாளர்கள் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் மக்வேரி பகுதியின் காட்டுப்பகுதியில் தன் காரில் சென்றுகொண்டிருந்தார் டோனி டொஹெர்டி என்ற பெண்மணி. கோலாக்கரடி ஒன்று உடல் மற்றும் கால்களில் நெருப்புக் காயங்களுடன் சாலையைக் கடந்து ஓடுவதைக் கவனித்தார் டோனி. நெருப்புத் தணலின் மீது ஓடி செய்வதறியாது மரம் ஒன்றில் ஏறியது அந்தக் கோலாக்கரடி. உடனடியாக காரை நிறுத்திவிட்டு ஓடிய டோனி, நெருப்பைப் பொருட்படுத்தாது தன் சட்டையைக் கழற்றி கோலாவை அதில் பொதிந்து தூக்கிக் கொண்டு வந்தார். முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்தார். தன் பேரனின் பெயரான லூயிஸை, கரடிக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார். இனி காடுகளுக்குள் செல்ல முடியாது என்ற நிலையில் தொடர் சிகிச்சை எடுத்து வருகிறது லூயிஸ். டோனியின் துணிவைப் பாராட்டி வருகிறார்கள் ஆஸ்திரேலியர்கள்.

அன்புத் துணிச்சல்காரி!

சமீபத்தில் புதுடெல்லியில் நடைபெற்ற ஃபேஸ்புக் சமூக வலைதளத்தின் தெற்காசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. “பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு புதிய உலகைத் திறந்து காட்டுகிறது இன்டர்நெட். அதே நேரத்தில் இவர்கள் பாதுகாப்பாக இயங்க வழிவகை செய்வது இன்றியமையாததாகி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இன்டர்நெட் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பான களமமைத்து அவர்களுக்கு அதில் இயங்க சம உரிமை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார் அவர்.

“ஃபேஸ்புக்குடன் இணைந்து எப்படிப் பாதுகாப்பாக சமூக வலைதளங்களில் இயங்குவது என்பதை மகளிர் குழந்தைகள் நலத்துறை ஆராய்ந்து, சரியான தீர்வுகளை மக்கள் எடுக்கவும் பாதுகாப்பாக இயங்கவும் வழிவகை செய்யப்படும்” என்றும் ஸ்மிருதி கூறினார். நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 100 நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றன. இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் வரும் 2021-ம் ஆண்டுக்குள் 50 லட்சம் இந்தியர்களுக்குப் பயிற்சி தரப்போவதாகவும் ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

காலத்துக்கேற்ற அவசிய முயற்சி!

அறிவியலில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் குறைவாகவே இருக்கிறது. பெண்கள் பெரும்பாலும் ‘மென்மையான துறை’களையே தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. இந்திய தேசிய அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கை இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளில் 40 சதவிகிதம் பெண்களாக இருந்தாலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களில் இது 15 சதவிகிதமாகக் குறைந்துபோகிறது என்று தெரிவித்துள்ளது.

புனேயைச் சேர்ந்த கீதா காலே என்ற பணிப்பெண் திடீரென வேலையை இழந்தார். அவருக்குத் தற்காலிகமாக வீட்டு வேலை செய்யும் பணியை அளித்த தனஸ்ரீ என்ற மூத்த மேலாளர், காலேயின் திறமைகளைப் பறைசாற்றும் விசிட்டிங் கார்டு ஒன்றை அழகாக வடிவமைத்து அச்சிட்டு காலேயிடம் வழங்கினார். கார்டுகளை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்தார். காலேயின் அலைபேசிக்கு வேலை தருவதாக எக்கச்சக்க அழைப்புகள் வரத்தொடங்கின. கீதா காலேயின் விசிட்டிங் கார்டுதான் நெட்டிசன்களின் ஹாட் டாபிக்!

லண்டன் நகரின் புகழ்பெற்ற பெட்டிகோட் மார்க்கெட்டின் ஒரு பகுதியாக லேடிலேன் மார்க்கெட் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த மார்க்கெட்டில் சோமாலியாவின் மிளகாய் சாஸ் முதல் கைப்பைகள், கைவினைப் பொருள்கள் சரும, கூந்தல் பாதுகாப்புத் தயாரிப்புகள் வரை கிடைக்கும். முழுக்க முழுக்க பெண்களால் எடுத்து நடத்தப் படும் மார்க்கெட் இது என்பது கூடுதல் சிறப்பு.

22 வயதான பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரிதிகா ஜிண்டல் இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளில் இந்திய அளவில் 88-வது இடத்தைப்பிடித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தந்தையுடன் மருத்துவமனையில் இருந்தபோதே தேர்வு முடிவுகள் வெளிவந்தன என்று சொல்லும் ரிதிகா, சிற்றூர் ஒன்றிலிருந்து லுதியானா நகருக்கு மருத்துவ வசதிக்காகத் தந்தையை அழைத்துவரும்போது குடிமைப் பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாகச் சொல்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண் ஒருவர் தங்க நகைகள் அணிவதற்குப் பதில் தக்காளிகளைக்கொண்டு செய்யப்பட்ட மாலை, காதணி போன்றவற்றைத் தன் திருமணத்துக்கு அணிந்து வந்ததை ட்விட்டரில் பகிர்ந்தார் பிரபல பாகிஸ்தானி ஊடகவியலாளர் நாய்லா இனாயத். தக்காளி விலை மிக அதிகம் என்பதால் அதில் செய்யப்பட்ட நகைகளை அணிந்துவந்ததாகக் கூறியுள்ளார் மணப்பெண். கராச்சி சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாய்!

சென்னையின் பென்சன் ஹோட்டல் மேனேஜ் மென்ட் கல்லூரி சமீபத்தில் அம்பத்தூரில் `புரொ-டிரான்ஸ்பிடாலிட்டி-2019' என்ற பயிற்சி வகுப்பை திருநங்கைகளுக்காக நடத்தியது. இந்த ஆறு நாள் பயிற்சிப் பட்டறையில் தமிழ் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்த 20 திருநங்கைகள் தற்சார்புப் பயிற்சி பெற்றதாக அறிவித்தார் இதை நடத்திய டார்கஸ் ஆய்வு மையத்தின் பிராவோ பிரிவு நிறுவனர் ஓல்கா பி ஆரோன்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான பெண்கள் டி-20 போட்டிகளில் விளையாடிய 15 வயதான இந்தியாவின் ஷெஃபாலி வர்மா, சர்வதேசப் போட்டிகளில் 50 ரன்கள் எடுத்த இந்தியாவின் மிக இளம் வயது வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். 16 வயதில் சச்சின் ஏற்படுத்திய சாதனையை இதன் மூலம் முறியடித்திருக்கிறார் ஷெஃபாலி!

துணை இழந்தவர்கள் மற்றும் நடுத்தர வயதுடைய ஆண் / பெண்களுக்கு உதவ திருமணத் தகவல் வலைதளம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது கேரள கத்தோலிக்க ஆயர் கவுன்சில். prolifemarry.com என்ற இந்த வலைதளம் மூலம் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது கவுன்சில். இதன்மூலம் கணவரை இழந்த சுமார் ஒரு லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்று கவுன்சிலின் செயலாளர் தந்தை பால் மடசேரி அறிவித்துள்ளார்.