Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ராத்திரி நடத்தம்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி நடத்தம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
ராத்திரி நடத்தம்
பிரீமியம் ஸ்டோரி
ராத்திரி நடத்தம்
பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ஆதரவற்ற 19 வயது இளைஞருக்குச் சிறுநீரக தானம் செய்த பெண்

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கே.ஜெயகிருஷ்ணன். மூன்று வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்தவர். பாலக்காட்டின் பள்ளத்துருத்தி பகுதியில் தன் பாட்டியுடன் உறவினர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்த போது இவரின் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. திடீரென கை கால்கள், முகம் என உறுப்புகள் வீங்க, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுநீரகம் செயலிழந்து போனதை அவருக்குத் தெரிவித்த மருத்துவர்கள், டயாலிசிஸ் சிகிச்சையை ஆரம்பித்தனர். மாற்று சிறுநீரகம் பொருத்தினால்தான் குணமடைய முடியும் என்ற நிலை வந்தது. சிகிச்சை காரணமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் படிப்பை நிறுத்த நேர்ந்தது. உறவினர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.

சீதா
சீதா

ஜெயகிருஷ்ணனின் நிலையைக் கண்ட அவரின் நண்பர் பைஜு, தயா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடினார். குடியிருக்க வீடும் பணமும் அந்நிறுவனம் தருவதாகத் தெரிவித்த பின்னும் உறவினர்கள் உதவ வராமல் போகவே, ஃபேஸ்புக்கில் ஜெயகிருஷ்ணனின் நிலையைப் பதிவு செய்திருந்தது தயா தொண்டு நிறுவனம்.

அதைக்கண்ட கோட்டயத்தைச் சேர்ந்த 47 வயது மனிதவள மேம்பாட்டு அதிகாரி சீதா தம்பி, தன் சிறுநீரகத்தை ஜெயகிருஷ்ணனுக்கு தானம் செய்ய முன்வந்தார். கிட்டத்தட்ட ஆறு மாத கால காத்திருத்தலுக்குப் பின், தன்

23-வது திருமண நாளன்று கணவர் திலீப்புடன் சென்று கொச்சி மெடிக்கல் டிரஸ்ட் மருத்துவமனையில் சிறுநீரக தானம் செய்தார். ஜெயகிருஷ்ணன் மருத்துவமனையிலிருந்து திரும்பும் அன்று அவரை சந்தித்தார் சீதா.

இப்போது உடல்நிலை காரண மாக வேலையை ராஜினாமா செய்துள்ள சீதா, “பெற்றோரை இழந்தவர் ஜெயகிருஷ்ணன்... அவர் தனிமையை உணரக் கூடாது என்பதால்தான் அவர் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியபோது உடன் இருந்தேன்” என்று கூறியிருக் கிறார்.

இதுதாங்க தாய்மை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

8,000 பெண்கள் பங்கேற்ற `ராத்திரி நடத்தம்'

பெண்களுக்கான `ராத்திரி நடத்தம்' என்ற நிகழ்ச்சியை கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி நிர்பயா நினைவு தினமான டிசம்பர் 29 அன்று இரவு 11 மணிக்கு கேரள மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 8,000 பெண்கள் இந்த இரவு நடையில் கலந்துகொண்டனர். `பொதுவெளி பெண்ணுக்குமானது' என்ற கருத்தை வலியுறுத்தி நடந் தனர் இந்தப் பெண்கள்.

ராத்திரி நடத்தம்
ராத்திரி நடத்தம்

``பெண்கள் சிறு குழுக்களாக சாலைகளில் இரவு 11 மணி முதல் 1 மணி வரை நடந்தது பலருக்கு வியப்பைத் தந்தது” என்று சொல்கிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான கொச்சி மாநகராட்சி ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை துறையில் பணியாற்றும் கதீஜாம்மா. பெண்கள் தன்னார்வ அமைப்பான குடும்பஸ்ரீயின் உறுப்பினர்கள் இந்த நடையில் பெருவாரியாகக் கலந்துகொண்டனர். இன்னும் நகரங்களின் பல பகுதிகள் போதிய விளக்குகள் இன்றி இருளில் இருப்பதை பல பெண்கள் பதிவு செய்தனர். வரும் மார்ச் 8 உலக மகளிர் தினம் வரை இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா.

சபாஷ் ஸ்ரீகள்!

உலகின் மிக நீண்ட விண்வெளிப் பயணம் மேற்கொண்டிருக்கும் பெண்

மெரிக்க நாசா விண்வெளி மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற பெண்மணி, உலகில் மிக அதிக காலம் விண்வெளியில் பயணிக்கும் பெண் என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். 2016-2017-ம் ஆண்டு பெக்கி விட்சன் என்ற அமெரிக்கப் பெண்மணி 288 நாள்கள் விண்வெளியில் தொடர்ச்சியாக தங்கி சாதனை நிகழ்த்தினார். அவரது சாதனையை முறியடித்திருக்கிறார் கிறிஸ்டினா. வரும் பிப்ரவரி மாதம் அவரது `எக்ஸ்படிஷன் 61' முடிவுக்கு வருவதையொட்டி கிறிஸ்டினா பூமிக்குத் திரும்ப உள்ளார். அப்போது எக்ஸ்படிஷன் 61 விண்ணில் 300 நாள்கள் செலவிட்டிருக்கும்.

கிறிஸ்டினா கோச்
கிறிஸ்டினா கோச்

2019 அக்டோபர் மாதம் விண்ணில் பெண்கள் மட்டுமே நடத்திய முதல் ‘ஸ்பேஸ் வாக்' விண்வெளி நடையிலும் பங்கேற்று சாதனை படைத்தார் கிறிஸ்டினா. “பெக்கி என் கதாநாயகி. அவர்தான் எனக்கு வழிகாட்டியவர். பூமி திரும்பியதும் இன்னும் பலருக்கு நான் வழிகாட்டியாக விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் கிறிஸ்டினா.

பறக்கும் பாவை!

உலக ஆசிய அழகி!

ண்டனில் சமீபத்தில் நடைபெற்ற உலக அழகிப்போட்டி யில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் இந்திய அழகி சுமன் ராவ். உலக அழகியாக ஜமைக்கா நாட்டின் டோனி-ஆன் சிங் முடிசூட்டப்பட்டார். மும்பை நகரில் வசிக்கும் சுமன் ராவ், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை அடுத்த ஆய்டானா என்ற சிற்றூரைச் சேர்ந்தவர். எளிய பின்புலம்கொண்ட சுமன் ராவின் தந்தை பொற்கொல்லர்; தாய் குடும்ப நிர்வாகி. மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்குப்பதிவியல் கற்ற சுமன், கடந்த ஆண்டு மிஸ் நவி மும்பை அழகிப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம்பிடித்தார். அதன்பின் மிஸ் ராஜஸ்தான் போட்டியில் கலந்துகொள்ள, அதிலும் வெற்றி. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலும் முதல் பரிசைத் தட்டிச்சென்ற சுமன், உலக அழகிப் போட்டியில் பங்கேற்க தயாரிப்புகள் செய்து வந்தார்.

சுமன் ராவ்
சுமன் ராவ்

உலக ஆசிய அழகியாக மகள் அறிவிக்கப்பட்டதை தொலைக்காட்சியில்கூட பார்க்க முடியவில்லை என்று சொல்கிறார் அவருடைய தாயார். சுமனின் தந்தை ரத்தன் சிங் ராவ், “பெண்களை சுமையாக நினைக்கும் சமூகத்தில் இப்படி என் மகள் ஒரு ரோல்மாடலாக இருப்பதில் மகிழ்ச்சி. நகரங்களின் இளம்பெண்கள் மட்டுமல்லாமல், சிறு கிராமத்துப் பெண்களும் கனவுகள் காணலாம்; நனவாக்கலாம் என்பதை இவளைப் பார்த்து மற்ற பெண்கள் கற்றுக்கொள்வார்கள்” என்கிறார்.

“ஆணும் பெண்ணும் சமம் என்ற பாலின சமத் துவத்தை வலியுறுத்துவேன்” என்று அழுத்திச் சொல்கிறார் ஆசிய அழகி.

உள்ளும் புறமும் அழகி!

உலகைக் காக்க முயற்சி எடுங்கள்... இந்தியாவின் பருவநிலை ஆர்வலர்

`ஹவ் டேர் யூ?' என்று கேள்வி எழுப்பி உலகையே திரும்பிப்பார்க்கவைத்த ஐரோப்பிய பருவநிலை ஆர்வலரான கிரேட்டா துன்பெர்க்கைப் போல இந்தியாவிலிருந்து பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் குரல், ரிதிமா பாண்டேயின் குரல். சமீபத்தில் 500 மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய 12 வயது இளம்புயல் ரிதிமா, “நல்ல சுற்றுச்சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை, பாதுகாப்பான எதிர்காலம் போன்றவை நம் உரிமைகள். அவை நமக்குக் கிடைக்கின்றனவா?” என்று கேட்டு தன் உரையைத் தொடங்கினார்.

ரிதிமா பாண்டே
ரிதிமா பாண்டே

“உலக வெப்பமயமாதலுக்கு முழுமையான காரணம் மனிதர்களே. இயற்கையை நம் ஆசை, பேராசைக்காக நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். உலகை நாம் குப்பையாக்கவில்லை; பின் ஏன் குழந்தைகளான நாம் அவதியுற வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார் ரிதிமா. பின்னர் செய்தியாளர் களிடம் பேசியவர், “இது கண்டிப்பாக இனிய புத்தாண்டு அல்ல. பெரியவர்கள் பொறுப்பற்று செய்யும் தவறுகளுக்கு குழந்தைகளான நாங்கள் பள்ளிகளில் விடுமுறை எடுத்து, போராட வேண்டியிருக்கிறது” என்று கூறினார்.

``இந்திய அரசின் தேசிய பசுமை ஆணையம் சுற்றுச் சூழல் மாசைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை... இனியேனும் எடுக்க வேண்டும்'' என்று வலியுறுத்தி அதற்கு எதிராக 2017-ம் ஆண்டே வழக்கு தொடுத்தவர் இந்தச் சுட்டிப்பெண்!

ஓங்கி ஒலிக்கட்டும் ரிதிமாக்களின் குரல்கள்!