Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பிரீமியம் ஸ்டோரி

லட்சக்கணக்கான பெண்களின் ஆற்றுக்கால் பொங்கல் விழா

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கோயிலில் `பொங்காலை' விழா பெண்களால் கொண்டாடப்படுவதுண்டு. `பெண்களின் சபரிமலை' என்று அழைக்கப்படும் இவ்வூர் விழாவில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். கொரோனா வைரஸ் பயத்தையும் மீறி லட்சக் கணக்கான பக்தர்கள் பொங்கலிட ஆற்றுக்காலில் கூடி, முகமூடிகள் அணிந்து பொங்கலிட்டனர். 26 லட்சம் பெண்கள் இந்த ஆண்டு பொங்கலிட்டதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் விழா
பொங்கல் விழா

கடந்த 2009-ம் ஆண்டு, கின்னஸ் சாதனையாக 25 லட்சம் பெண்கள் பொங்காலை விழாவில் கலந்து கொண்டனர். `போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு பொங்கலிட அறிவுறுத்தி இருந்தோம்; அவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தார்கள்' என்று அம்மாநில தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

கொரோனாவுக்கே பொங்கல் வைத்த பெண்கள்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் அனைத்து மகளிர் நீதிபதிகள் அமர்வு

சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து மகளிர் அமர்வு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. `அரசு உதவி பெறும், பெறாத நிறுவனங்களில் மாநில தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் செல்லுபடியாகுமா?' என்ற வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள்கொண்ட சட்ட அமர்வு இது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா ஏற்படுத்திய இந்த அனைத்து மகளிர் நீதிபதிகள் அமர்வில், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நீதிபதி அனிதா சுமந்த், நீதிபதி பி.டி.ஆஷா ஆகிய மூவரும் இடம்பெற்றனர்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போதுள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 55. இவர்களில் ஒன்பது பெண்கள் உள்ளனர். இவர்களில் பெரும் பாலானோர் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் பணிக்காலத்தில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள். இதற்கு முன்பு வேறொரு வழக்கிலும் பெரும்பான்மை பெண்கள் அமர்ந்துள்ளனர். நீதிபதிகள் வி.பவானி சுப்பராயன் மற்றும் ஆஷா ஆகியோருடன் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் கடந்த ஆண்டு அமர்வு ஒன்றில் இணைந்து பணியாற்றியுள்ளார். ஆனால், மூன்று நபர் அமர்வு ஒன்றில் அனைவருமே பெண்களாக இடம் பெற்றிருப்பது இதுவே முதன்முறை.

சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமைப் பொறுப்பில் பெண்கள்...

ர்க்காரிநௌக்ரி மற்றும் மைஹயரிங் கிளப் இணையதளங்கள் சமீபத்தில் இணைந்து நடத்திய கணக்கெடுப்பு ஒன்றில் இந்தியப் பெண்கள் போர்ட் ரூம்களில் (தலைமைப் பொறுப்பில்) இடம் பிடித்திருப்பதில் உலக அளவில் 12-வது இடத்தில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. உலகெங்கும் உள்ள 36 நாடுகளின் 7,824 நிறுவனங்களின் தகவல்கள் இந்தக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்பட்டன.

சர்க்காரிநௌக்ரி மற்றும் மைஹயரிங் கிளப்
சர்க்காரிநௌக்ரி மற்றும் மைஹயரிங் கிளப்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, பெண் இயக்குநர்கள் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆசியாவில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் உள்ளது; இந்தியாவில் இந்த எண்ணிக்கை சரிந்து 39 சதவிகிதம் மட்டுமே உள்ளது. உலகளாவிய கணக்கில் 14.87 சத விகிதம் பெண் இயக்குநர்கள் உள்ளனர். பெண்கள் இயக்குநர்களாக உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரே ஒரு பெண் இயக்குநர் அமைந்த நிறுவனங்கள் 63 சதவிகிதம். இரண்டு பெண் இயக்குநர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் 29 சதவிகிதம் மட்டுமே.

கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் பெண்களே!

பி.வி.சிந்து
பி.வி.சிந்து

ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் தி இயர்!

புகழ்பெற்ற பிபிசி ஊடக நிறுவனம் இந்த ஆண்டு முதல், இந்திய விளையாட்டு வீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் `ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் தி இயர்' விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது. இந்த விருதை முதன்முதலில் வென்று பெருமை பெற்றிருக்கிறார் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது. துத்தி சந்த், மேரி கோம், வினேஷ் ஃபொகாட், மானசிஜோஷி மற்றும் சிந்து ஆகிய ஐவரும் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்த சிந்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. “பெண் வீராங்கனைகளுக்கு நான் சொல்வது இதுதான்... உங்களை முழுவதுமாக நம்புங்கள். வெற்றிக்கு நம் கடும் முயற்சியே இட்டுச்செல்லும்; கூடிய விரைவில் நாட்டுக்காக நிறைய பதக்கங்கள் ஜெயிக்கும் பெண்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார். விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவுக்கு வழங்கப்பட்டது.

சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துகள்!

அறிவியலில் சாதித்த 11 பெண்களின் பெயர்களில் அறிவியல் இருக்கைகள்!

டந்த பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்பட்டது. அன்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள முன்னணி அறிவியல் ஆய்வு நிறுவனங்களில், நாட்டின் தலை சிறந்த பெண் விஞ்ஞானிகள் பெயரில் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 11 பெண் அறிஞர்கள் பெயர்களை நினைவுகூரும் விதமாக இந்த இருக்கைகள் அமைக்கப்படவுள்ளன. `இந்த இருக்கைகள் பெண் ஆய்வாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்; ஆய்வாளருக்கு ஒரு கோடி ரூபாய் ஆய்வுப் பணிகளுக்கென வழங்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியலில் சாதித்த 11 பெண்கள்
அறிவியலில் சாதித்த 11 பெண்கள்

உயிரணு மரபியலறிஞர் அர்ச்சனா ஷர்மா, தாவரவியல் அறிஞர் இ.கே.ஜானகியம்மாள், உயிர்வேதியியல் அறிஞர் தர்ஷன் ரங்கநாதன், வேதியலாளர் ஆசிமா சாட்டர்ஜி, மருத்துவர் காதம்பினி கங்குலி, மானுடவியலாளர் ஐராவதி கார்வே, வானிலையியல் அறிஞர் அன்னா மானி, பொறியியல் வல்லுநர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி, கணிதவியல் அறிஞர் பரிமளா ராமன், இயற்பியலாளர் பிபா சௌத்ரி, நோயியல் வல்லுநர் கமல் ரனதிவே ஆகிய 11 பெண் அறிவியல் வல்லுநர்களின் பெயர்களில் இந்த இருக்கைகள் அமையவுள்ளன. ``இதன்மூலம் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் `ஸ்டெம்' எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், கணக்கு போன்ற துறைகளில் அதிக ஆர்வம்கொள்வர்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஸ்மிருதி

பெண் கையில் அறிவென்னும் ஆயுதம் கூர்தீட்டித் தருவோம்!

அவள் செய்திகள்

கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் போட்டி

வுதி அரேபியாவில் பெண்கள் கலந்துகொண்ட முதல் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. சவுதி அரேபியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சூடான் மற்றும் எகிப்து நாடுகளைச் சேர்ந்த சவுதிவாழ் பெண்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

களிர் டி-20 இறுதிப்போட்டிகளில் இந்தியா கலந்துகொள்வதற்கு முன்னதாக, அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேலை அணிந்து கிரிக்கெட் விளையாடும் காணொலி ஒன்றை தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். `பெண்ணாக இரு என்று எனக்குச் சொன்னார்கள்' என்று தலைப்பிட்டிருந்த அந்தக் காணொலியில் ‘தனித்து அறியப்பட வேண்டும்; உங்கள் வாழ்க் கையை உங்கள் இஷ்டப்படி வாழுங்கள்’ என்றும் கூறியிருந்தார் அவர்.

சாந்தி
சாந்தி

மில வீச்சால் பாதிக்கப்பட்ட சாந்தி என்ற பெண்ணை மகளிர் தினத்தன்று செய்திகள் வாசிக்கவைத்து புதுமை புகுத்தியது நியூஸ்7 தொலைக்காட்சி. தடுமாறாமல் தெளிவாக செய்தி வாசித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் சாந்தி. `தன்னம்பிக்கை இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் செய்தி வாசிக்கலாம் என்பதற்கான முயற்சிதான் இது' என்று தெரிவித்தது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம்.

சுனைனா படேல்
சுனைனா படேல்

ட்டு மாத கர்ப்பிணியாக காடுகளில் வலம் வருகிறார் தாந்தேவாடா பகுதி மாவட்ட ரிசர்வ் படை தாந்தேஸ்வரி வீராங்கனை சுனைனா படேல். நக்சல்களுக்கு எதிரான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் சுனைனா ஏ.கே.47, 10 கிலோ பேக்-பேக்குடன் காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். நக்சல்களுக்கு எதிரான பணியில் பெண்கள் ஈடுபட சுனைனா பெரும் ஊக்கமாக இருக்கிறார் என்று அந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

சல்வா
சல்வா

சிரியாவில் வசித்து வந்த மூன்று வயது சிறுமியான சல்வா அங்கு நடைபெற்று வரும் போரில் குண்டுகள் வெடிக்கும் சப்தம் கேட்டு அச்சமுற்றிருக்கிறார். தந்தை அப்துல்லா முகமது, `வெடி வெடிக்கும்போது எழும் சப்தம் போலத்தான் குண்டு வெடிப்பதும்' என்று மகளுக்கு சமாதானம் சொல்லி, ஒவ்வொரு முறை வானிலிருந்து விழும் குண்டு வெடிக்கும்போதும் மகளுக்குச் சிரிக்கக் கற்றுத் தந்தார். தந்தையும் மகளும் குண்டு வெடிப்புக்கு மத்தியில் சிரித்து வாழும் காணொலிகள் சமீபத்தில் வைரலாகி உலக மக்களின் மனத்தைத் தொட்டது. இதையடுத்து துருக்கி அரசு சல்வாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் அடைக்கலம் தந்துள்ளது. இப்போது துருக்கியில் பாதுகாப்பாக வசிக்கிறார் சல்வா.

இர்ஃபானா சர்கர்
இர்ஃபானா சர்கர்

காஷ்மீர் ஸ்ரீநகரில் வசித்துவரும் இர்ஃபானா சர்கர் என்ற 28 வயதுப் பெண் தன் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் ‘சானிட்டரி கிட்’களாக மாற்றியுள்ளார். ஸ்ரீநகரின் பொதுக் கழிவறைகளில் சானிட்டரி நாப்கின் அடங்கிய இந்த சானிட்டரி கிட்களைப் பெண்களின் பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் இர்ஃபானா, ``கிராமத்திலிருந்து நகருக்கு வரும் பெண்கள், திடீரென மாதவிடாய் வந்து சிரமப்படும் பெண்களின் வசதிக்காகவே இதை பொதுக் கழிவறைகளில் பயன்பாட்டுக்கு வைக்கிறேன். நகர் முழுக்க இருக்கும் அத்தனை பொதுக் கழிவறைகளிலும் இப்படி வைக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்று சொல்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு