Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

Published:Updated:
பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
பெண்கள் உலகம்

மனைவியின் மெழுகு பொம்மை... மனமுருகும் கணவர்

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 57 வயது தொழிலதிபர் ஸ்ரீனிவாசமூர்த்தி. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கோலார் தங்கவயல் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் மனைவி மாதவியைப் பறிகொடுத்தார். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்கிற தன் மனைவியின் கனவை சமீபத்தில் முன்னெடுத்த மூர்த்தி, பெங்களூரு நகரின் பிரபல கட்டட வல்லுநர்கள் பலரையும் சந்தித்தார். இறுதியாக மகேஷ் ரங்கண்ணதவரு என்கிற வடிவமைப்பாளரின் யோசனை பிடித்துப்போக, அதன்படியே பங்களா கட்டி வரவேற்பறையில் மனைவி மாதவியின் முழு உருவ மெழுகுச் சிலையை நிறுவியிருக்கிறார். பெங்களூருவில் பொம்மைகள் செய்வதில் தேர்ந்தவரான கொம்பெ மானெ என்பவரின் கைவண்ணத்தில்... பட்டுச்சேலை, நகைகள், முகச்சுருக்கங்கள் என்று மெழுகில் அச்சு அசலாக உயிர்பெற்றிருக்கிறார் மாதவி. புதுமனை புகும் விழாவுக்கு வந்த உறவினர்களும் நண்பர்களும் ஆச்சர்யத்தில் அசந்துபோக, `என் மனைவி மாதவி, என்னைவிட்டு எங்கும் போகவில்லை' எனச் சிலிர்த்திருக்கிறார் மூர்த்தி.

உண்மைக் காதல் இறப்பதில்லை!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பெண்கள் உலகம்: 14 நாள்கள்

முக்கிய போக்குவரத்து சிக்னல்களிலும், பாதசாரி சமிக்ஞை பலகைகளிலும் குறியீட்டுக்காக ஆண் உருவங்கள் பயன்படுத்தப்படுவதுதான் வழக்கம். மும்பை மாநகராட்சி தற்போது பெண் உருவங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. பாலின சமத்துவத்துக்கான நல்ல முன்னெடுப்பு இது என்று மும்பை மாநகராட்சியைப் பாராட்டியிருக்கிறது ஐ.நா பெண்கள் பிரிவான ஐ.நா உமன்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

மெரிக்காவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையும் கிராண்ட் ஸ்லாம் சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ், 4.25 மில்லியன் முகக்கவசங்களை வசதியற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு வழங்கியிருக்கிறார். 1,15,000 பள்ளிகள் மூலம் இந்தக் கவசங்கள் அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகளுக்குக் கிடைத்திருக்கின்றன.

54 மில்லியன் பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லும் அறிவிப்புகளையும் செரீனா சொந்த செலவில் அச்சிட்டு அளித்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ராஜஸ்தான் மாநிலம், நகௌர் மாவட்டத்தின் பல பகுதிகளில் தெருக்களும் சாலைகளும் பலராலும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்த தெருக்களுக்குச் செல்வதற்கு சுற்றிச் சுற்றி் சென்றுகொண்டிருந்தனர். இந்த மாவட்டத்தின் ஆட்சியராக கடந்த ஜூலை மாதம் பணி மாறுதலடைந்து வந்து சேர்ந்த ஜிதேந்திர குமார் சோனி, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் களத்தில் இறங்கினார். அதிகாரிகள் துணையோடு பொதுமக்களிடம் பேசி ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதையடுத்து, சாதனைப் பெண்களின் பெயரைக் குறிப்பிட்ட சாலைகளுக்குச் சூட்டி, அந்தப் பெண்களின் கையாலேயே அவற்றைத் திறக்கவும் செய்திருக்கிறார்.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

ரியானா மாநில தலைமைச் செயலகத்தில் கர்ப்பிணி ஊழியர்கள் தினமும் அலுவலகத்துக்கு வருவதிலிருந்து விலக்களித்திருக்கிறது அம்மாநில அரசு. தங்கள் பணிகளை வீடுகளிலிருந்தே வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் செய்வதற்கு அனுமதியளித்துள்ள அரசு, கோவிட் 19 சூழலில் தம்முடைய ஊழியர்களைப் பாதுகாக்கும் முயற்சியாக முதலில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்களில் பலர் லாக்டௌன் காரணமாக சானிட்டரி நாப்கின்கள் வாங்கும் வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதை உணர்ந்து `பிளிஸ்டே' என்ற மட்கக்கூடிய நாப்கின்கள் தயாரிக்கும் நிறுவனம், தன்னார்வலர்கள் சிலருடன் சேர்ந்து ‘வரம்’ என்ற தன்னார்வ அமைப்பை நிறுவியுள்ளது. இந்த அமைப்பு மூலம் ‘கெனாஃப்’ செடியின் இழைகளால் செய்யப்படும் நாப்கின்கள் விநியோகிக்கப்படுகின்றன.