Published:Updated:

பெண்கள் உலகம்: 14 நாள்கள்

பெண்கள் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்கள் உலகம்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

திருவனந்தபுரம் துணை ஆட்சியராகும் பார்வைத்திறனற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை கலெக்டராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார் பார்வைத்திறனற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீல். இதன் மூலம் நாட்டின் முதல் பார்வைத்திறனற்ற துணை ஆட்சியர், முதல் பார்வைத்திறனற்ற பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிய பெருமைகளைப் பெறுகிறார் பிரஞ்சல். மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ் நகரைச் சேர்ந்த பிரஞ்சல் ஆறு வயதில் பார்வையை இழந்தார். 2016-ம் ஆண்டு, இந்திய குடிமைப் பணி தேர்வுகளை முதல் முறை எழுதியவர், அதில் 733-வது இடத்தைப் பிடித்தார். தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயற்சி செய்து தேர்வெழுதி 2017-ம் ஆண்டு, 124-வது இடத்தைப் பிடித்தார்.

பிரஞ்சல் பாட்டீல்.
பிரஞ்சல் பாட்டீல்.

“தோல்வி என்பதே நமக்குக் கிடையாது. அப்படியே தோல்வியடைந்தாலும், மனத்தைத் தளரவிடக்கூடாது. தொடர்முயற்சியால் என்றாவது ஒருநாள் நாம் வெற்றியடைவோம். இங்கே பணியைத் தொடங்குவது குறித்து பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. விரைவில் மாவட்டத்தில் எத்தனை கோட்டங்கள் உள்ளன, அவற்றுக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பிரஞ்சல்.

வெளிச்சப்பூவாக ஒளிவீச வாழ்த்துகள், பிரஞ்சல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

எஸ்தர் டஃப்லோ... அமெரிக்காவில் வசிக்கும் பிரெஞ்சுப் பெண்ணான இவர், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபலைப் பகிர்ந்துகொள்பவர்கள் எஸ்தர், அவர் கணவர் அபிஜித் பானர்ஜி மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மைக்கில் க்ரெமெர். பொருளாதார நோபல் வெல்லும் மிகவும் இளவயதுப் பெண் 42 வயதான எஸ்தர். இந்தப் பரிசை வெல்லும் இரண்டாவது பெண்ணும்கூட.

 எஸ்தர் டஃப்லோ
எஸ்தர் டஃப்லோ

உலகப்புகழ் பெற்ற மசாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவரும் எஸ்தர், `அப்துல் லதீஃப் ஜமீல் ஏழ்மை நடவடிக்கை ஆய்வகத்'தைத் தன் கணவருடன் தோற்றுவித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். “இதுபோன்ற பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்வளிக்கிறது” என்று சொல்கிறார் எஸ்தர். 1978-ம் ஆண்டு, பாரீஸ் நகரில் பிறந்து வளர்ந்த எஸ்தர், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், சுற்றுச்சூழல், மேலாண்மை எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளார். உலகெங்கும் உள்ள நலிவுற்றோரின் பொருளாதார நிலையை ஆய்வுசெய்து உணர்ந்து சமூகநலத் திட்டங்களை வடிவமைக்க உதவுகிறார்.

2011-ம் ஆண்டு, கணவருடன் இணைந்து `புவர் எகனாமிக்ஸ்' என்ற நூலை எழுதியுள்ளார் எஸ்தர். இந்த நூல், 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பெண்களுக்கான மிக முக்கியமான, சரியான நேரம் இது” என்று தனக்கு விருது கிடைத்திருக்கும் சூழல் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார் எஸ்தர் டஃப்லோ.

நோபல் நிபுணருக்கு நம் வாழ்த்துகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புக்கர் பரிசு வென்ற மார்கரெட் அட்வுட் மற்றும் பெர்னர்டின் எவரிஸ்டோ

உலகப் புகழ்பெற்ற புனைவுக்கான புக்கர் பரிசு முதன்முறையாக இரு பெண்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. பிரபல கனடா எழுத்தாளரான மார்கரெட் அட்வுட்டுக்கு அவர் எழுதிய `தி டெஸ்டமென்ட்ஸ்’ என்ற நூலுக்கும், ஆங்கிலோ-நைஜீரிய எழுத்தாளரான பெர்னர்டின் எவரிஸ்டோவுக்கு அவர் எழுதிய `கேர்ள் வுமன் அதர்' என்ற நூலுக்கும் இம்முறை புக்கர் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பரிசை இரண்டாம் முறையாகப் பெறுகிறார் அட்வுட். 50000 பவுண்டுகள் பரிசுத்தொகையை இரு பெண்களும் லண்டன் கில்டு ஹாலில் நடைபெற்ற ஐம்பதாவது ஆண்டு சிறப்பு விருது நிகழ்ச்சியில் பெற்றுக்கொண்டனர். இதற்குமுன் 1974 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் இருவருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது.

மார்கரெட் அட்வுட் ,  பெர்னர்டின் எவரிஸ்டோ
மார்கரெட் அட்வுட் , பெர்னர்டின் எவரிஸ்டோ

`எக்ஸ்டிங்க்‌ஷன் ரிபெல்லியன்' என்ற காலநிலை ஆர்வலர் நிறுவனத்தின் சின்னம் ஒன்றை அணிந்து, பெர்னர்டினுடன் கைகோத்து அரங்கினுள் நுழைந்தார் 79 வயதான அட்வுட். 1985-ம் ஆண்டு எழுதிய `தி ஹாண்ட்மெயிட்ஸ் டேல்' என்ற நூலின் தொடர்ச்சியாக `தி டெஸ்டமென்ட்'ஸை எழுதியுள்ள அட்வுட், “விருது பெறும் வயதை நான் தாண்டிவிட்டேன் என்றே நினைத்தேன்” என்று கூறி மகிழ்ந்தார்.

வாழ்த்துகள், புக்கர் பெண்மணிகளே!

விண்வெளியில் அனைத்துப் பெண்கள் நடை!

அமெரிக்க நாசா நிறுவனத்தின் விண்வெளி வீராங்கனை களான கிறிஸ்டின் கோச் மற்றும் ஜெஸிகா மேர் ஆகிய இரு பெண்களும் சமீபத்தில் விண்வெளி நடை ஒன்றை மேற்கொண்டனர். அனைத்து மகளிர் குழுவின் துணையுடன் மேற்கொண்ட இந்த விண்வெளி நடை, உலக மக்களின் கவனம் ஈர்த்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறமுள்ள பேட்டரி ஒன்றை மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். பூமியில் இருந்து நாசாவின் மூத்த வீராங்கனை ஸ்டெஃபனி வில்சன் வழிகாட்டலில், பெண்கள் இருவரும் இந்த சாதனை நடையை மேற்கொண்டனர். கோச் நான்காவது முறையும் மேர் முதன்முறையும் விண்வெளி நடையில் பங்கேற்றனர். விண்வெளி நிலையத்தைவிட்டு வெளியேறிய இருவருடனும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

கிறிஸ்டின் கோச் , ஜெஸிகா மேர்
கிறிஸ்டின் கோச் , ஜெஸிகா மேர்

“பெண்களாகிய உங்களால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நீங்கள் இருவரும் துணிவான, அறிவாற்றலுள்ள இந்த நாட்டைப் பிரதிபலிக்கும் பெண்கள். முதலில் நிலவு, அடுத்து செவ்வாய் என்று தடம் பதிப்போம்” என்று அவர்களை வாழ்த்திப்பேசினார் ட்ரம்ப்.

“பெண்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தரப்பினருக்கும் நாங்கள் இருவரும் தூண்டுகோலாக இருப்போம் என எண்ணுகிறோம். கனவு கண்டு அதை அடையத் துடிக்கும் அனைவருக்கும் எங்கள் செயல் உந்துதல் தரும்” என்று கூறினர் இந்தப் பெண்கள்.

விண்ணிலும் வெற்றி நடை போடுவோம்!

மோட்டார் ஸ்போர்ட்ஸில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தந்த ஐஸ்வர்யா

எஃப்.ஐ.எம். பஜஸ் உலகக்கோப்பை மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று பெண்கள் பிரிவில் முதல் பரிசும் இளையோருக்கான போட்டிகளில் இரண்டாம் பரிசும் வென்று திரும்பியிருக்கிறார் 24 வயதான இளம் புயல் ஐஸ்வர்யா பிஸ்ஸே. 18 வயதில் ரேஸிங்கில் தனக்கு ஆர்வமிருப்பதைக்கண்டுகொண்ட ஐஸ்வர்யா, மூன்றே ஆண்டுகளில், 2017-ம் ஆண்டின் தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றார். அதன்பின் மூன்று ராலிகளில் வெற்றி, ஆறு தேசிய பட்டங்கள் என்று கலக்கி வருகிறார்.

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

“பெண்கள் 9-5 மணி வரை வேலை செய்தால் போதும் என்ற எண்ணம் கொண்ட குடும்பப் பின்புலம் என்னுடையது. தளராமல் அவர்களிடம் பேசி சரி செய்தேன். டிவிஎஸ் ரேஸிங் எனக்கு வழிகாட்ட, ஒருவழியாக பெற்றோரை சமாதானம் செய்தேன்” என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. தன் அடுத்த குறி மிகவும் கடினமான `தகர் ராலி' என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. 14 நாள்கள் - ஒரு நாளைக்கு 700 கி.மீ ஓட்ட வேண்டும் என்ற கடினமான கட்டுப்பாடுகள் கொண்ட இந்த ரேஸில் ஜெயிப்பதுதான் என் லட்சியம்” என்று சொல்லும் ஐஸ்வர்யா, 2020-ம் ஆண்டு தகர் ராலியில் பங்குபெறவிருக்கிறார்.

கலக்குங்க, ஐஸ்வர்யா!

அவள் செய்திகள்

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

டம் ஹேரி என்ற திருநம்பி தனியார் விமான ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தார். மேற்கொண்டு படிப்பைத்தொடர குடும்பத்தினர் உதவாத நிலையில், கமர்ஷியல் பைலட் உரிமம் பெறும் படிப்பை ஆடம் தொடர, கேரள அரசு 23 லட்ச ரூபாய் நிதி வழங்கி உதவியுள்ளது.

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

சிய விளையாட்டுத்துறை எழுத்தாளர் சங்கம் மலேசியாவில் நடந்த விழா ஒன்றில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமுக்கு `ஆசியாவின் சிறந்த வீராங்கனை' என்ற விருது வழங்கி கௌரவித்திருக்கிறது. உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரிக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு சிறப்பு இது!

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

ன்னியாகுமரி முதல் லடாக்கிலுள்ள லே வரையான தொலைவை 129 மணி நேரத்தில் பைக்கில் கடந்து புதிய லிம்கா சாதனை படைத்துள்ளனர் அம்ருதா காஷிநாத் மற்றும் ஷுப்ரா ஆச்சார்யா. ஐந்து நாள்களில் ஐந்து மணி நேரம் மட்டுமே தூங்கி இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர் இந்தப் பெண்கள்.

கோவையைச் சேர்ந்த கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.ராமசாமி, தன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களுக்கு அலுவலக வளாகத்திலேயே வேலை நேரம் போக மீதி நேரத்தில் இலவசக் கல்வி அளிக்கும் வசதிகளைச் செய்து தந்துள்ளார். இந்த ஆண்டு, அங்கு பயின்று தேர்வான 350 பெண்களுக்கு நிகழ்ச்சி ஒன்றில் பட்டமளித்து பாராட்டப்பட்டது. இதுவரை 24,536 பெண்களுக்குக் கல்வி வாய்ப்பை வழங்கியிருக்கிறது கே.பி.ஆர்.

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

மெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் பட்லர் நூலக முகப்பில் உலகின் தலைசிறந்த தத்துவஞானிகளான அரிஸ்டாடில், பிளேட்டோ, டெமோஸ்தனீஸ் போன்றோர் பெயர்கள் வரிசையில் பொறிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.ரேவதி என்ற எழுத்தாளரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. `உணர்வும் உருவமும்' என்ற பெயரில் தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதியுள்ள திருநங்கை ரேவதி, தன் சுயசரிதைக்கென விருதுகளும் வென்றிருக்கிறார்.

னியார் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண்களை மாநில அரசின் `மகப்பேறு நன்மை சட்டம், 2019'-ன் கீழ் கொண்டுவந்துள்ளது கேரள அரசு. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் போலவே அனைத்து மகப்பேறு சலுகைகளும் இனி வழங்கப்படும். இந்தியாவில் இதை முதன்முறை அமலுக்குக் கொண்டுவரும் மாநிலம் கேரளம்!

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

ந்தோனேசியாவைச் சேர்ந்த `சிலந்திப் பெண்' என்றழைக்கப்படும் ஏரிஸ் சுஷாந்தி ரஹாயு, சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பை ஸ்பீடு கிளைம்பிங் போட்டியில் 49 அடி உயரமுள்ள சுவரில் வெறும் 6.995 விநாடிகளில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

அவள் செய்திகள்
அவள் செய்திகள்

மெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமானப் போக்குவரத்து தினத்தன்று 120 பெண்களைச் சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியிலிருந்து ஹூஸ்டன் நகரிலுள்ள நாசா அலுவலகம் வரை அழைத்துச்சென்றிருக்கிறது. ஆண்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தத் துறையில், பெண்களின் பங்களிப்பை விரிவாக்கவே இந்த முயற்சி என்று அறிவித்துள்ளது டெல்டா.