Published:Updated:

பேருந்தில் பெண்களை சீண்டினால் இனி போலீஸில் ஒப்படைக்கலாம்: சட்டத்தில் அரசு கொண்டு வந்த திருத்தம்

பாலியல் சீண்டல் ( சித்திரிப்புப் படம் )

பேருந்துப் பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்துள்ள திருத்தம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

பேருந்தில் பெண்களை சீண்டினால் இனி போலீஸில் ஒப்படைக்கலாம்: சட்டத்தில் அரசு கொண்டு வந்த திருத்தம்

பேருந்துப் பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் செய்துள்ள திருத்தம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

Published:Updated:
பாலியல் சீண்டல் ( சித்திரிப்புப் படம் )

பேருந்துப் பயணத்தின்போது, பெண் பயணிகளை உற்றுப் பார்ப்பது, விசில் அடிப்பது, ஆபாச பாடல்களை பாடுவது, ஆபாசமான வகையில் வன்முறை செய்யும் நோக்கத்தோடு செய்கைகள் செய்வது, ஆபாச வார்த்தை பிரயோகிப்பது, மறைமுகமாக பெண்களை செல்போன்களில் போட்டோ, வீடியோ எடுப்பது போன்ற பெண்கள் பாதுகாப்புக்கு அச்சமூட்டும் வகையில் நடந்துகொள்ளும் ஆண்களை அந்தந்த பேருந்தின் நடத்துநர்கள், காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்களின் பாதுகாப்புக்கு அச்சமூட்டும் வகையில், ஆபாசமாக நடந்து கொள்ளும் ஆண்களை நடத்துநர்கள் முறையான எச்சரிக்கைக்குப் பிறகு பாதி வழியில் இறக்கிவிடலாம், அல்லது அருகிலுள்ள காவல்நிலையங்களில் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது தொடர்பாக, உள்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடத்துநர்களின் பணி குறைபாடுகள் குறித்த புகார்கள் குறித்து பயணிகள் தங்களது கருத்துகளைப் பதிவு செய்ய வரிசை எண்கள் கொண்ட புகார் புத்தகம் வழங்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு பராமரிக்கப்படும் புகார் புத்தகங்களை காவல்துறை அல்லது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பரிசீலனைக்கு உட்படுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இந்த சட்ட திருத்தம் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குமா அல்லது ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதா என சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

சித்தரிப்பு படம்
சித்தரிப்பு படம்

இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பு, சென்னை மாநகரப் பேருந்தில் தாம்பரத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது,14 வயது சிறுமியிடம், மது போதையில் இருந்த காவலர் சதீஷ் என்பவர், பாலியல் ரீதியிலான அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில், சக பயணிகள் அவரை காவல் துறையினர் வசம் ஒப்படைக்க, அவரை கைது செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.