Published:Updated:

“காஞ்சிபுரத்தில் காமாட்சிகளின் ஆட்சி!” - மாற்றத்தால் மகிழும் பெண்கள்

காஞ்சிபுரம்
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சிபுரம்

மகளிர் அணி

“காஞ்சிபுரத்தில் காமாட்சிகளின் ஆட்சி!” - மாற்றத்தால் மகிழும் பெண்கள்

மகளிர் அணி

Published:Updated:
காஞ்சிபுரம்
பிரீமியம் ஸ்டோரி
காஞ்சிபுரம்

யர் பதவிகளில் பெண்களை அமரவைத்துப் புதிய விதியை எழுதியிருக்கிறது காஞ்சிபுரம்” - பெருமிதத்துடன் சொல்கின் றனர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெண்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், டி.ஐ.ஜி, எஸ்.பி, நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளை அலங்கரிப்பவர்கள் பெண்கள்.

காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி-யாக சாமுண்டீஸ்வரி, மாவட்ட எஸ்.பி-யாக சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியராக திவ்யஸ்ரீ, ஆதி திராவிடர் நல அதிகாரியாக தனலட்சுமி, காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனராக மகேஸ்வரி, சுகாதாரத்துறை இணை இயக்குநராக ஜீவா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரியாக சற்குணா, சமூகநலத்துறை அதிகாரியாக சங்கீதா, காஞ்சிபுரம் டி.எஸ்.பி-யாக மணிமேகலை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக அனுராதா, காஞ்சிபுரம் தாசில்தாராக பவானி, வாலாஜாபாத் தாசில்தாராக மித்ரா தேவி, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தாராக நிர்மலா எனப் பல்வேறு துறைகளிலும் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் உள்ளிட்ட ஒரு சில உயர் பதவிகளை மட்டுமே ஆண்கள் வகித்து வந்தனர்.

 ஆதிரை,  மகேஷ்
ஆதிரை, மகேஷ்

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா திருவள்ளூருக்கும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரான மகேஸ்வரி, காஞ்சிபுரத்துக்கும் சில தினங்களுக்கு முன்பு மாற்றப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி பொறுப்பேற்றார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய உயர் பதவிகள் அனைத்தும் பெண்கள் வசமாகியுள்ளன. இது ஒட்டுமொத்த பெண் சமுதாயத்துக்கும் உத்வேகம் தரும் செய்தி. இதுதொடர்பாக இந்திய மருத்துவக் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட கிளையின் துணைத் தலைவரும் பா.ஜ.க-வின் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவருமான மருத்துவர் ஆதிரையிடம் பேசினோம்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலெக்டர் மகேஸ்வரி,  சாமுண்டீஸ்வரி,  சண்முகபிரியா, கமிஷனர் மகேஸ்வரி
கலெக்டர் மகேஸ்வரி, சாமுண்டீஸ்வரி, சண்முகபிரியா, கமிஷனர் மகேஸ்வரி

“எங்கள் மாவட்டத்தின் உயர் பொறுப்புகளில் எல்லாம் பெண் அதிகாரிகள் இருப்பதை நினைத்து ஒரு பெண்ணாக அகம் மகிழ்கிறேன். தங்களுக்கு இருக்கும் பல்வேறு தடைகளை உடைத்து பெண்கள் பலதுறைகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். சமுதாயம் இவ்வளவு வளர்ந்துவிட்ட சூழலிலும் சில இடங்களில் படித்த பெண்களே ஆண் ஆதிக்கத்தில் சிக்கிக்கொள்ளும் சூழல் நிலவுகிறது. அப்படியான செய்திகளைப் படிக்கும்போது, அரசின் உயர் பதவிகளில் பெண்கள் அதிகளவில் இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்று தோன்றும். அது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இப்போது நிறைவேறியிருக்கிறது.

“காஞ்சிபுரத்தில் காமாட்சிகளின் ஆட்சி!” - மாற்றத்தால் மகிழும் பெண்கள்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாவட்ட ஆட்சியராகப் பொறுப் பேற்றுள்ள மகேஸ்வரி இதற்கு முன்பு திருவள்ளூரில் பணியாற்றியவர். அங்கு, ‘ரொம்ப ஸ்ட்ரிக்ட்’ என பெயரெடுத்தவர். அவர் எங்கள் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்கெனவே இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பெண் அதிகாரிகள் எல்லோரையும் அனுசரித்து நடப்பார்கள். ஆண் அதிகாரிகளிடம் பொதுவாக ஒரு மிரட்டல் தொனி இருக்கும். ஆனால், பெண் அதிகாரிகள் கனிவான போக்கை கடைப்பிடிப்பார்கள். சக பெண்களால் அவர்களை எளிதில் அணுக முடியும்.

 மணிமேகலை, சற்குணா, பவானி
மணிமேகலை, சற்குணா, பவானி

நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மேடம் எந்தப் பிரச்னை குறித்துச் சொன்னாலும் உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறார். தாசில்தார் பவானி மேடம் மக்கள் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோல, டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி, எஸ்.பி சண்முகபிரியா என இங்குள்ள ஒவ்வொரு பெண் அதிகாரியும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் கலெக்டர் மகேஸ்வரி மேடமும் கரம் கோத்திருக்கிறார். இத்தனை பெண் அதிகாரிகள் இருப்பது இந்த மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். நாமும் படித்து இவர்கள் போல் ஆக வேண்டும், ஆக முடியும் என்பதற்கான நம்பிக்கை.

 திவ்யஸ்ரீ, ஜீவா,  அனுராதா
திவ்யஸ்ரீ, ஜீவா, அனுராதா

காஞ்சி என்றாலே காமாட்சி அம்மன்தான் எல்லோருக்கும் ஞாபகம் வருவாள். மனிதர்களின் விருப்பங்களை ஆள்பவள், நிறைவேற்றுபவள் என்பதால்தான் அம்பிகைக்கு காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி இங்குள்ள பெண் அதிகாரிகள் காமாட்சியாக இருந்து காஞ்சிபுரம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார் பூரிப்புடன்.

அடுத்ததாகக் காஞ்சி மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளரான மகேஷிடம் பேசினோம், “பெண்கள் உயர் பொறுப்புகளுக்கு வந்திருப்பதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் கிடையாது. இங்குள்ள பெண் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதில்லை. நாங்கள் வேண்டிக்கொள்வது என்னவென்றால், பெண் அதிகாரிகளை இந்த ஆணாதிக்க சமூகம் சுதந்திரமாக வேலை செய்ய விட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்” என்றார்.

இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் பேசினோம், “மகிழ்ச்சியாக உணர்கிறேன். பல சமூகத் தடைகளைக் கடந்து தான் ஒவ்வொருவரும் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாகச் செயலாற்றுவோம்” என்கிறார் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில்.