Published:Updated:

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

தூரிகைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
தூரிகைப் பெண்கள்

கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) காரணமா பள்ளிப் படிப்போட நின்னுட்டேன். யதார்த்த மும், கனவும் கலந்த சர்ரியலிஸ ஓவியங்களை வரைஞ்சிட்டிருக்கேன்.

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) காரணமா பள்ளிப் படிப்போட நின்னுட்டேன். யதார்த்த மும், கனவும் கலந்த சர்ரியலிஸ ஓவியங்களை வரைஞ்சிட்டிருக்கேன்.

Published:Updated:
தூரிகைப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
தூரிகைப் பெண்கள்

நவீன ஓவியத்துறையின் வேறுபட்ட வடிவங்களைக் கையிலெடுக்கும் பெண்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. அப்படிச் சிலரை சந்தித்தோம். ஓவியத்துறையில் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு குறித்தும் அவர்களின் ஓவியங்களின் பேசுபொருள் பற்றியும் பேசுகிறார்கள் இங்கே...

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

சென்னையைச் சேர்ந்த பானு அன்பு - டிஜிட்டல் மேனிபுலேஷன் ஆர்ட் வகை ஓவியங்களை வரைகிறார்

“விஷுவல் டிசைனரா வேலை செய்யறேன். 5 வருஷங்களுக்கு முன் னால இன்ஸ்டாகிராம்ல 30 நாள்கள் ஓவியங்கள் வரைஞ்சு பதிவிடற சேலஞ்ச்ல இறங்கினேன். புகைப் படங்கள்மேல டூடுல் பண்ணி பதிவிட ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. புகைப்படங்கள் மேல வரையுற கோட்டோவியங்களுக்கு அடுத்தகட்டமா `டிஜிட்டல் மேனிபுலேஷன் ஆர்ட்' (Digital Manipulation Art) வரைய ஆரம்பிச்சேன். ஒரு புகைப்படத்துக்குள்ள டிஜிட்டலா நாம என்னவெல்லாம் மாத்தியமைச்சு க்ரியேட்டிவிட்டியைக் காட்டுறோமோ அதுதான் டிஜிட்டல் மேனிபுலேஷன் ஆர்ட். அய்யனார் சிலை புகைப்படத்துல அவர் கையில அருவாளுக்கு பதிலா பிரஷ்ஷை வெச்சு, சுற்றிலும் பறவைகள் பறக்குற மாதிரியான என் சமீபத்திய படைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. புத்தக அட்டைகள் வடிவமைச்சிருக்கேன், திரைப்படங் களுக்கு டைப்போகிராபியில டைட்டில் டிசைன் பண்ணி யிருக்கேன். மக்கள் எளிதில் அவங்க வாழ்க்கையோட தொடர்புபடுத்திக்குற மாதிரிதான் என்னோட ஓவியங்கள் இருக்கும்” என்கிறார் பானு அன்பு.

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

சென்னையைச் சேர்ந்த ரோஹிணி மணி நிற பேதத்துக்கு எதிரான ஓவியங்களை அதிகம் வரைகிறார்

“சென்னை கவின் கலைக்கல்லூரியில ஓவியம் படிச்சேன். உள் அரங்க வடிவமைப்பு, டெக்ஸ்டைல் டிசைன் பண்ணியிருக்கேன். இலக்கிய நூல் களுக்கான அட்டை ஓவியங்கள் வரையறேன். இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வாங்கின எழுத்தாளர் அம்பையின் ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை’ புத்தக அட்டையில இடம்பெற்றிருந்தது என் ஓவியம்தான். புத்தக அட்டைக்கு ஓவியம் வரையும்போது அந்தப் புத்தகத்தோட சாராம்சத்தை ஓவிய வடிவுல சொல்ற மாதிரி இருக்கணும். தன்னைத் தானே வரைஞ்சுக்குற செல்ஃப் போர்ட்ரெய்ட்ல எனக்கு ஈடுபாடு அதிகம். நான் கறுப்பா இருக்கேன். என்னை நானே வரையும்போது எனக்கு நானே அழகா தெரியுறேன். நிற பேதங்களற்ற சமூகப் பார்வையை உருவாக்குறதுக்கான முயற்சியாதான் என் சொந்த ஓவியங்களையே வரையு றேன்” என்கிறார் ரோஹிணி மணி.

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

விழுப்புரத்தைச் சேர்ந்த இயல் திருக்குறளை ஓவியமாக வரைகிறார்

“சௌம்யாதான் என் பெயர். இயல் என்ற பெயர்ல ஓவியங்கள் வரையு றேன். புதுச்சேரி பல்கலைக் கழகத்துல எலெக்ட்ரானிக் மீடியாவும் டிப்ளோமா அனிமேஷனும் படிச்சேன். எல்லோருக் கும் பரிச்சயமான திருக்குறளை எடுத்துகிட்டு அதோட பொருளுக்கு ஏத்தபடி கனவுருப்புனைவு (Surrealism), உருவக யதார்த்தம் (Metaphorical realism) போன்ற பாணிகள்ல ஓவியங்கள் வரையுறேன். நமக்கும் இயற்கைக்குமான உறவைச் சொல்லும் விதத்துல ஒரு ஓவியத்தொடர் வரைய ஆரம்பிச்சிருக்கேன். தண்ணீருக் குள் இருக்கும் உலகம் எப்படியிருக்கும்ங்கிறதை இப்ப வரைஞ்சுகிட்டிருக்கேன்” என்கிறார் இயல்.

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

சென்னையைச் சேர்ந்த யுவதாரணி நிர்வாண ஓவியங்களை வரைவதன் மூலம் உடல் பற்றிய பார்வை மாறும் என்கிறார்

“ஓவியம் வரையுறது இயல்பா வந்ததுதான். நான் வரையற ஓவியங் களை ‘வெள்ளைத்தாள்’ங்குற இன்ஸ்டாகிராம் பக்கத்துல பதிவிட் டேன். அதைப் பார்த்துட்டு ஓவியங்கள் வரையும் ஆர்டரும் அதன் மூலமா வருமானமும் கிடைச்சுது. நிர்வாண ஓவியங்கள் வரையுறதுல எனக்கு ஈடுபாடு அதிகமா இருந்தது. நிர்வாணம் ஆபாசமானதில்லை. அது இயற்கை. உடலோட நிறம், அளவை வெச்சு நிறைய அளவீடுகள் உருவாக்கப்பட்டிருக்கு. அப்படிப்பட்ட அளவீடுகள் எதுவும் தேவையில்லை. ஒவ்வொருத்தங்க உடலும் ஒவ்வொரு மாதிரியிருக்கும். இதுல தாழ்வுணர்ச்சி தேவையில்லை. என்னோட ஓவியங்களுக்கு மகாராணி லேடி கோடிவாவும் இன்ஸ் பிரேஷன். அவங்க கணவர் அந்நாட்டு மக்கள்மேல அதிக வரி விதிச்சதுக்கு எதிரா அவங்க நிர்வாணமா குதிரைமேல ஏறி நாட்டையே வலம் வந்தாங்க. அதிகபட்ச வரியை திரும்பப் பெற்றால்தான் குதிரையைவிட்டு இறங்குவேன்னு போராட்டம் பண்ணாங்க. நிர்வாணம்ங்குறது போராட்ட வடிவமாகவும் இருக்கு” என்கிறார் யுவதாரணி.

நிறபேதம், நிர்வாணம், நிலப்பரப்பு... நவீன ஓவியங்களில் அசத்தும் தூரிகைப் பெண்கள்!

தூத்துக்குடியைச் சேர்ந்த ஊக்ரா கனவும் யதார்த்தமும் கலந்த சர்ரியலிஸ ஓவியங்களை வரைகிறார்

“கற்றல் திறன் குறைபாடு (டிஸ்லெக்சியா) காரணமா பள்ளிப் படிப்போட நின்னுட்டேன். யதார்த்த மும், கனவும் கலந்த சர்ரியலிஸ ஓவியங்களை வரைஞ்சிட்டிருக்கேன். நிலக்காட்சிகளை வரையுறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிலத்தோட இயற்கை அமைப்பு, மனிதர்களை வரையுறது பிடிக்கும். வான்கோ வரைஞ்ச உலகப்புகழ் பெற்ற ஸ்டார் நைட் ஓவியத்துல சூஃபி இருக்குற மாதிரி வரைஞ்சுதரச் சொல்லிக்கேட்டாங்க. இந்த ரெண்டையும் எப்படி இணைக்குறதுன்னு யோசிச்சேன். வானத்தை திரைச்சீலையா மாத்தி சூஃபி அதன் முனையைக் கொண்டு இழுக்குற மாதிரி வரைஞ்சேன். பெரிய கேன் வாஸ் பெயின்டிங், டிஜிட்டல் ஆர்ட் வரையணும்ங்கிற திட்டத்தோட வேலை செஞ்சுட்டிருக்கேன்” என்கிறார் ஊக்ரா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism