புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்து, புகழ்பெற்ற குடும்பத்தில் திருமணம் செய்திருந்தாலும், அந்த வெளிச்சங்களைத் தாண்டி, தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள் சில பெண்கள். அப்படி ஒருவர், உபாசனா கொனிடெலா.

அப்போலோ மருத்துவமனை பிரதாப் ரெட்டியின் செல்லப் பேத்தி, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அன்பு மருமகள், டோலிவுட் நடிகர் ராம் சரணின் காதல் மனைவி. பிசினஸ் உமன், பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான உபாசனா, இந்த ஆண்டுக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ (Philanthropist of the year) விருது பெற்றிருக்கிறார். ‘அப்போலோ லைஃப்' இயக்குநரான இவர், அதன் ப்ரோஹெல்த் புரொகிராமின் தொடக்க விழாவுக்காக சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரை நாம் சந்தித்த பவர்பேக்டு நிமிடங்களில் இருந்து...

மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் திரைக் குடும்பத்தில் இணைந்தது பற்றி..?

திருமணமான புதிதில் சினிமா தொடர் பான வேலைகளைப் புரிஞ்சுக்கிறது கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது. புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் மாமய்யா (சிரஞ்சீவி)வையும் சரணையும் பார்த்து நான் வியக்காத நாளே இல்லை. இவங்களுக்கும் ரசிகர்களுக்குமிடையே இருக்கிற உறவு ரொம்ப ஸ்பெஷல். இப்போ ஹெல்த், சினிமா ரெண்டும் எனக்கு நல்ல பரிச்சயம்!

பிசினஸில் லேட்டஸ்ட் சாதனை..?

நம்ம வீடுகள்ல, குழந்தைகள் மேல பாசத்தை ஸ்வீட்ஸ் ஊட்டித்தான் வெளிப்படுத்துறாங்க. எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு. விளைவு, சின்ன வயசுலயே பருமன் பிரச்னையால அவதிப்பட்டேன். பிறகு டீன்ஏஜ்ல முறையான ஃபிட்னெஸ் சிகிச்சை மூலமா மீண்டு வந்தேன். அப்போதிருந்தே உடற்பயிற்சி, சரிவிகித உணவு ரெண்டையும் ஃபாலோ பண்ணிக்கிட்டு வர்றேன். அந்தப் புள்ளியில் இருந்து யோசிச்சுதான் ‘அப்போலோ லைஃப்’ உதயமானது. அதன் இயக்குநரா அதில் வெற்றிகரமா பயணிச்சிட்டிருக்கேன்.

‘பி பாசிட்டிவ்’ ஹெல்த் மேகஸின் பற்றி..?

நான் எப்பவும் பாசிட்டிவ்வாக இருக்க விரும்புற கேரக்டர். அது என்னுடைய தாரக மந்திரம்னு வெச்சுக்கோங்களேன். நீங்க பாசிட்டிவ்வா வாழ்றதுக்கான அத்தனை விஷயங்களும் என் மேகஸின்ல இருக்கும்!

உங்களுக்குப் பிடித்த விஷயங்கள்..?

பெட் அனிமல்ஸ் பிடிக்கும்; டிராவல் ரொம்பப் பிடிக்கும். இந்த ரெண்டு விஷயங்கள் சரணுக்கும் பிடிக்கும்!

ராம் சரணின் டயட் மற்றும் ஃபிட்னெஸில் உங்கள் பங்களிப்பு என்ன..?

திட்டமிடப்படாத ஷூட்கள், பயணங்கள்னு நடிகர்களுக்கு ஏகப்பட்ட லைஃப்ஸ்டைல் சவால்கள் இருக்கும். அதையெல்லாம் மீறி டயட், ஃபிட்னெஸ் ரெண்டுலேயும் சரண் ரொம்ப கவனமா இருப்பார். எப்போவாவது ஏதாவது மிஸ் ஆனா மட்டும் நான் எடுத்துச்சொல்வேன்.

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஐந்து ஆண்கள்...

அப்பா அனில் : என் எனர்ஜி பூஸ்டர். முதல் ஹீரோ!

கணவர் ராம் சரண்: கணவர் மட்டுமல்ல, சிறந்த நண்பர். டிராவல் பார்ட்னர்!

மாமனார் சிரஞ்சீவி: வேலையில் இவருடைய டெடிகேஷன் லெவலுக்கு ஈடே கிடையாது!

தாத்தா பிரதாப் ரெட்டி: என்மீது நம்பிக்கைக்கொண்டவர். என்னை உத்வேகப்படுத்துபவர். என்னுடைய இன்ஸ்பிரேஷன்!

தாத்தா உமா: 90 வயதிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் மந்திரவாதி. ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எனக்கு ஞாபகப்படுத்திட்டே இருக்கிற சூப்பர் மேன்!

உங்களது யூடியூப் சேனலில் பெரும்பாலும் இயற்கை மருத்துவத்தையே பரிந்துரைக்கிறீர்களே...

வீட்டுச் சாப்பாட்டைவிட சிறந்த மருந்து இருக்க முடியாது. இந்தியர்களின் உடல்நல பாதிப்புகளுக்கு தென் அமெரிக்காவில்தான் மருந்து இருக்குன்னு சொல்றது அபத்தம். நம்மிடம் இயற்கை மருந்துகள் கொட்டிக்கிடக்கு. பாரம்பர்ய உணவு முறைகளை, நம்ம பாட்டி சமைச்ச ரெசிப்பிகளைப் பின்பற்றினாலே, நோயை வரும்முன் விரட்டிடலாம் என்பதை நான் உறுதியா நம்புறேன். டிஜிட்டல் உலகில், மருந்துகளும் சிகிச்சைகளும் எளிமையாகிடுச்சு. அதே நேரத்தில் பாதிப்புகள் அதிகரிச்சுட்டு வருது. இந்தச் சூழலில் நம்மை தற்காத்துக் கொள்ள இயற்கை மருத்துவம் நிச்சயம் உதவும். டயட், உடற்பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள்னு மாறினா, ஹெல்த்தி லாங் லைஃப் சாத்தியம்!

ஏழு ஆண்டுகள் திருமண வாழ்க்கை... எப்படிப் போகுது..?

முதல் திருமண நாளைக் கொண்டாடுற தம்பதியின் சம்திங் ஸ்பெஷல் அன்பு இன்னும் எங்களுக்குள்ள குறையலை. ‘ஏழு வருஷங்கள் ஆச்சு, ஏதாச்சும் விசேஷமா?’ன்னு வீட்டுக்கு வெளிய நிறைய பேர் எங்களைக் கேட்டிருக்காங்க. ஆனா, வீட்டுக்குள்ள மாமய்யாவோ அத்தம்மாவோ எங்களை இதுவரைக்கும் இந்தக் கேள்வியைக் கேட்டதே இல்ல. அது எங்க விருப்பம்னு சொல்லிட்டாங்க. என் மனசுக்குள்ள ஓர் ஆசையிருக்கு. மாமய்யா, இப்போ புது வீடு கட்டிக்கிட்டு இருக்கார். அந்த வீட்ல குடியேறினதும்தான் நான் குழந்தை பெத்துப்பேன். என் குழந்தை அவங்க நானய்யா, நானம்மா மடியிலதான் வளரணும். அவங்ககூடத்தான் வாழணும். இதுல நான் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கேன்!

பெண்களுக்கு வலியுறுத்த நினைக்கிற விஷயம்..?

கோடிக்கணக்கில் பிசினஸ் செய்றதை விட, வீட்டைப் பார்த்துக்கிறது கடினமான வேலை. வீட்டில் ஓடியாடி வேலை செய்ற பெண்கள், வீடு, அலுவலகம்/தொழில்னு விரைகிற பெண்கள் எல்லாருமே, தங்கள் ஆரோக்கியத்துக்கு கவனம் கொடுக்கிற சுயநலத்தைக் கத்துக்கணும். ப்ளீஸ்!”