வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (21/03/2018)

கடைசி தொடர்பு:13:50 (21/03/2018)

புடவைக்கு அனுஷ்கா... ஹேர்ஸ்டைலுக்கு நயன்தாரா... ஃபேஷன் ஐகான்ஸ் #VikatanSurveyResults

நதியா கம்மலில் ஆரம்பித்து குஷ்பு ஜாக்கெட் வரை  கிட்டத்தட்ட எல்லா பெண்களுக்கும் சினிமா நடிகைகள்தான் ஃபேஷன் ஐகான். ``ஜோதிகா `36 வயதினிலேயே' படத்தில் கட்டியிருந்தாங்கள்ள அந்த புடவைதான்'', '' 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாரா போட்டிருந்த அந்த ஸ்கர்ட்தான்' என நம் ஊர்ப் பெண்கள் எல்லாவற்றிலும் நடிகைகளின் ரெஃபரென்ஸ்களைத்தான் பிடிப்பார்கள். அப்படி எந்தெந்த உடையில் எந்த நடிகையை ஃபேஷன் ஐகானாகத் தேர்ந்தெடுக்கலாம் என்று கடந்த வாரம் ஒரு சர்வே நடத்தியிருந்தோம். அதன் ரிசல்ட் இதோ!  

 

 

அனுஷ்கா

புடவையில் மக்களின் மனதைக் கவர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா என எல்லோரையும் பின்னுக்குத்தள்ளி 52.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார் அனுஷ்கா.   `அருந்ததி' முதல் `பாகுபலி' வரை பெரும்பாலான படங்களில் புடவைதான் அனுஷ்காவின் காஸ்ட்யூம். புடவை அழகில் 28.2 சதவிகிதம் வாக்குகள் பெற்று `லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 10.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று கீர்த்தி சுரேஷ் மூன்றாம் இடத்திலும், 7.8 சதவிகிதம்  வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும் உள்ளனர்.

நயன்தாரா


புடவைக்கு அடுத்து, மேற்கத்திய ஆடையில் மக்களின் சாய்ஸ் நயன்தாரா. சமந்தா, நயன்தாரா, ஹன்சிகா, தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரில் அதிகப்படியான வித்தியாசங்கள் ஏதுமின்றி 27.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நயன்தாரா முதல் இடத்திலும், 26.4 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா இரண்டாம் இடத்திலும் உள்ளனர். `ஹோம்லி' கதாபாத்திரத்தில் இவர்கள் அசத்தினாலும், மாடர்ன் உடைகளுக்கு இவர்கள் என்றுமே ஐகான்தான். 19.8 சதவிகிதம் வாக்குகள் பெற்று காஜல் அகர்வால் மூன்றாம் இடத்திலும், 16.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா நான்காம் இடத்திலும், 8.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று ஹன்சிகா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

நயன்தாரா


விதவிதமான தோற்றத்துக்கு, உடைகளில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சிகை அலங்காரத்தில் சிறு திருத்தம் செய்தாலே வித்தியாசமான தோற்றம் எளிதில் சாத்தியம். இந்த ட்ரெண்டை செட் செய்தவர் நயன்தாரா. நித்யா மேனன், சமந்தா, நயன்தாரா, தமன்னா மற்றும் ஹன்சிகா ஆகியோரில் 49.3 சதவிகிதம் வாக்குகள் பெற்று சிகை அலங்கார ராணியாக மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார் நயன்தாரா. அவரைத் தொடர்ந்து 25 சதவிகிதம் வாக்குகள் பெற்று சமந்தா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். சுருள்முடி கொண்டவர்களுக்கு நித்யா மேனன்தான் ஐகான். 9.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று நித்யா மேனன் மூன்றாம் இடத்தில் உள்ளார். 9.2 சதவிகிதம் வாக்குகள் பெற்றும் ஹன்சிகா நான்காம் இடத்திலும், 6.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று தமன்னா ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

அனுஷ்கா

ராணி என்றால் வேறு ஆப்ஷனே இல்லாமல் எல்லோரின் நினைவுக்கும் வருபவர் அனுஷ்காதான். 92.9 சதவிகிதம் வாக்குகள் பெற்று, தமன்னா, நயன்தாரா மற்றும் காஜல் அகர்வாலை வீழ்த்தி கெத்து ராணியாக முதலிடத்தில் இருக்கிறார் அனுஷ்கா. அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி என அனுஷ்காவின் துணிச்சலான ராணி கெட்அப்பின் லிஸ்ட் நீளம். இவரைத் தொடர்ந்து அனைவராலும் வரவேற்கப்பட்டவர் நயன்தாரா. `காஷ்மோரா' படத்தில் மிரட்டும் ராணியாய் வந்து அனைவரையும் ஈர்த்தவர் 5.6 சதவிகிதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்