லிப் பிரைமர்... லிப் லைனர்... லிப்ஸ் ஸ்க்ரப்பர்... அழகான உதடுகளைப் பெற யார் எதைப் பயன்படுத்தலாம்

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்ட பிறகு, உதடுகளைப் பளபளப்புடன் காண்பிக்க, லிம் பாம் பயன்படுத்தலாம். லிப் பாமிலும் ரோஸ், ஸ்ட்ராபெர்ரி என நிறைய ஃப்ளேவர்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான ஃப்ளேவர்களைத் தேர்வுசெய்து பயன்படுத்தவும்.

பெண்களின் முகத்தை அழகாகக் காட்டுவதில் உதடுகள் முக்கியப் பங்கு வகிக்கிறது லிப்ஸ்டிக் போட்டுக்கொள்வது மட்டுமே உதட்டுக்கான அழகு என்பது நிறைய பெண்களின் கருத்தாக உள்ளது. சில பெண்கள், `லிப்ஸ்டிக், லிப் பிரைமர் போன்றவை மிக ஆடம்பரமான ஒன்று. அது தங்களை யதார்த்தமாகக் காட்டுவதில்லை' எனச் சொல்வதுண்டு. உதடுகள்தான் மற்றவர்களை எளிதில் வசீகரிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. உங்கள் உதடுகளை என்றும் அழகாக வைத்திருக்க டிப்ஸ் வழங்குகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

நிறைய பெண்களின் பிரச்னையாக இருப்பது, உதடுகள் வறட்சி அல்லது கறுப்பாகக் காணப்படுவது. உடம்பில் ஏற்படும் நீர்ச்சத்து வறட்சி அதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், பயன்படுத்தும் மேக்கப் பொருள்களும் ஒரு முக்கிய காரணம். நிறைய பெண்கள், உதடுகளை அலங்கரிக்க என்ன மாதிரியான அழகுசாதனப் பொருள்களை தேர்வுசெய்ய வேண்டும் எனத் தெரியாமலே பயன்படுத்துகிறார்கள். இது, உதடுகளை நிச்சயம் கருமையடையச் செய்யும். உதடுகளை அழகாக்குவதற்கே லிப் பிரைமர், லிப் ஸ்க்ரப்பர், லிப் பாம், லிப்ஸ்டிக், லிப் லைனர், லிப் க்ரையான்ஸ், லிப் பாம் என நிறைய உள்ளன.

லிப் பிரைமர்

லிப் ஸ்க்ரப்பர்:

லிப் ஸ்க்ரப்பர், நம் உதட்டின் இறந்த செல்களை நீக்கி, புது செல்கள் தோன்ற உதவும். மாதுளை, ஆரஞ்சு என நிறைய ஃப்ளேவர்களில் இது கிடைக்கும். வாரம் ஒருமுறை லிப் ஸ்க்ரப்பர் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உதடுகள் ரோஜா இதழ் போன்று மிருதுவாக இருக்கும். கடைகளில் சென்று வாங்க முடியாது என்பவர்கள், 10 சொட்டு மாதுளைச்சாறுடன் சிறிது பொடித்த சர்க்கரை சேர்த்து, ஒன்றாகக் கலந்து உதடுகளில் அப்ளை செய்யவும். 10 நிமிடத்துக்குப் பிறகு லேசாக மஜாஜ் செய்து, ஒரு காட்டன் துணியால் துடைத்து எடுக்கலாம்.

லிப் பிரைமர்:

சிலருக்கு உதடுகள் வரி வரியாகச் சுருக்கங்களுடன் காணப்படும். அவர்கள், லிப் பிரைமரை உதடுகளில் அப்ளை செய்து, அதன்பின்னர் உதடுகளுக்கான அலங்காரத்தை ஆரம்பித்தால், வசீகரிக்கும் உதட்டினைப் பெறலாம்.

லிப் லைனர்:

மேல் உதடு, கீழ் உதடு என இரண்டு உதடுகளும் எல்லோருக்கும் சமமாக இருப்பதில்லை. இத்தகையவர்கள், லிப் லைனர் மூலம் உதட்டினைச் சமமாக வரைந்துகொண்டு, அதன்பின்னர் லிப்ஸ்டிக், லிப் பாம் போன்றவற்றைப் பயன்படுத்தினால், நீட் லுக் பெறலாம்.

லிப்ஸ்டிக்:

உதடுகள்

பெரும்பாலான பெண்கள், லிப்ஸ்டிக் தேர்வில் கவனக்குறைவுடனே செயல்படுகிறார்கள். லிப்ஸ்டிக் என்பது, நம் உதடுகளை எடுப்பாகக் காட்டுவதற்கே. எனவே, சரும நிறத்தை மனதில்கொண்டு தேர்வுசெய்ய வேண்டும். அதைவிட முக்கியமாக, நாம் அணியும் ஆடையின் நிறத்தையும் மனதில்கொள்ள வேண்டும். பிங்க், லைட் ப்ளூ, பர்பிள் போன்ற கூல் கலர் ஆடைகள் அணியும்போது, அதற்கேற்ப கூல் கலர் லிப்ஸ்டிக்  பயன்படுத்த வேண்டும். பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வார்ம் கலர் ஆடைகள் அணியும்போது, அதற்கேற்றவாறு தேர்வுசெய்வது அவசியம். லிக்விட் லிப்ஸ்டிக் இப்போதை ஃபேஷன். இது உங்கள் உதடுகளுக்கு மேட் பினிஸ் லுக் கொடுப்பதுடன், நீண்ட நேரம் ஃப்ரெஷாக காட்டும்.

லிப் பாம்:

லிப்ஸ்டிக் போட்டுக்கொண்ட பிறகு, உதடுகளைப் பளபளப்புடன் காண்பிக்க, லிம் பாம் பயன்படுத்தலாம். லிப் பாமிலும் ரோஸ், ஸ்ட்ராபெர்ரி என நிறைய ஃப்ளேவர்கள் உள்ளன. அதில் உங்களுக்கு விருப்பமான ஃப்ளேவர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும்.

அழகான உதடுகளுக்கு:

உதடுகள்

சிலருக்கு உதடுகள் வறண்டு தோல் உரிந்து காணப்படும். அவர்கள், தேன் அல்லது வெண்ணைய்யை உதடுகளில் அப்ளை செய்தால் மிருதுவாகும்.

கருமையான உதடுகள் உள்ளவர்கள், ரோஜா இதழ்களை வேகவைத்து, அத்துடன் சர்க்கரைப்பாகு அல்லது தேன் சேர்த்து, உதட்டில் அப்ளை செய்யவும். அரை மணி நேரம் கழித்து, காட்டன் துணியால் துடைத்து எடுக்க, இதழ்கள் கருமை நீங்கி வசீகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!