ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்யப் போகிறீர்களா.. இதை மறக்காம படிங்க..! #HairStraightening #BeautyTip

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் இரண்டு வருடத்துக்கு முன்புதான் அறிமுகமானது என்றாலும், இன்றைய டீன்ஏஜ் பெண்களின் ஃபேவரைட்டாக மாறியிருக்கிறது. அது, முகத்துக்கு நீட் லுக் கொடுப்பதால் பெண்களின் ஹிட் லிஸ்டில் இருக்கிறது. ''அலுவலகத்துக்கு அவசர அவசரமாகக் கிளம்பும் நேரத்தில், எளிமையாகத் தலைவாரிக்கொள்ள இந்த ஹேர்ஸ்டைல் வசதியாக இருப்பதால் பலரும் இதனை விரும்புகிறார்கள்'' என்கிறார்  அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. இந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் பற்றி பகிர்ந்துகொள்கிறார்.

ஹேர் ஸ்ட்ரெடய்ட்டனிங்

வகைகள்:

1. ஸ்டிரெய்ட்டனிங்

பர்ஃபெக்டான ஸ்ட்ரெய்ட்டனிங்காக இருக்காது. ஆனால், தலைமுடியை ஸ்ட்ரெய்ட்டனிங் லுக் கொண்டுவரும். இது முடியின் அளவைக் குறைக்காது.

2. ரீ - பாண்டிங்

ரொம்ப புரொபஷனல் லுக்காக இருக்கும். இதனை பெரும்பாலும் டீன்ஏஜ் பெண்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

3. ஸ்மூத்தனிங்

இதில் அடர்த்தி குறையாது. கர்லிங் ஹேர் இருப்பவர்களுக்கு ஃபர்பெக்ட் சாய்ஸ். கர்லிங் ஹேரில், முடியின் அளவு குறைவாக இருக்கும். இதன்மூலம் நீளமான தோற்றத்தைப் பெறமுடியும். குண்டான தோற்றம் உடையவர்களுக்கு இந்த ஹேர்ஸ்டைல் பக்காவாக செட் ஆகும். 

வசுந்தராஇவை மூன்றுமே கெமிக்கலினால் செய்யக்கூடியவை. அனுபவமுள்ளவர்களிடம் இந்த வகை ஸ்ட்ரெய்ட்டனிங்கை செய்துகொள்ளவது மிகவும் முக்கியம். ஏனெனில், இதனை தவறாக செய்தால், தலைமுடி எரிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.

முடியின் அமைப்பைப் பொறுத்து, இரண்டு விதமான கெமிக்கல் கிரீம் ட்ரீட்மென்ட்டைப் பயன்படுத்த வேண்டும். அவை, வெரி ரெஸிஸ்டன்ட் ஹேர் டு நார்மல் ( Very resistant hair to normal), நார்மல் டு சென்சிட்டிவ் ஹ( Normal to sensitive).

வெரி ரெஸிஸ்டன்ட் ஹேர் டு நார்மல் ( Very resistant hair to normal):

இது கர்லிங் ஹேர், வெர்ஜின் ஹேர் ( Virgin hair), இதுவரை எந்த கெமிக்கல் டிரீட்மென்ட்டும் செய்யாத முடிகளுக்கு இந்த வகை கிரீமைப் பயன்படுத்தி ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வார்கள். 

நார்மல் டு சென்சிட்டிவ் ( Normal to sensitive):

ஹென்னா, கலரிங், முன்பக்கம் இருக்கும் முடிக்கு மட்டும் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்திருப்பார்கள் இந்த மாதிரியான கெமிக்கலைப் பயன்படுத்தியவர்களுக்கு, இந்த வகை கிரீமைப் பயன்படுத்துவார்கள்.

யாருக்கு எந்த கிரீமைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிசோதித்து முடிவெடுப்பார்கள். அதன்பின்னரே, ஸ்ட்ரெட்டனிங் வேலையைத் தொடங்குவார்கள். 

ஹேர்

கொஞ்சம் தலைமுடிக்கு ஸ்ட்ரெய்ட்டனிங் போதும் என்பவர்களுக்கு, ஒருமுறை அயர்ன் செய்து கிரீம் அப்ளை செய்ய வேண்டும்.

பக்காவாக ஸ்ட்ரெய்ட்டனிங் வேண்டும் என விரும்புபவர்களுக்கு, இரண்டு அல்லது மூன்று முறை அயர்ன் செய்ய வேண்டும்.

இது இரண்டும் வேண்டாம், சாதாரணமாக இருந்தால் போதும் என்கிறவர்களுக்கு, அயர்ன் செய்யாமல் ஷாப்டனிங் மட்டும் செய்யலாம். இதனை ரிலாக்‌ஷிங் என்பார்கள்.

இவை நான்குமே கெமிக்கல் கலந்த டிரீட்மென்ட் என்பதால், மிகவும் எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் இருந்த அளவுக்குப் பிற்காலத்தில் தலைமுடி உறுதியாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. தரமான ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும். முடியை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். கன்டீஷனர், ஹேர் சீரம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இறுக்கமான பின்னல், இறுக்கமான ரப்பர் பேண்டு போன்றவற்ந்த் தவிர்க்க வேண்டும்.

கெரைட்டின் டிரீட்மென்ட்:

இப்போது புதியதாக அறிமுகமாகியுள்ளது, கெரைட்டின் டிரீட்மென்ட். இது ஷைனிங் மட்டும் கொடுக்கக் கூடியது. இது, முடியின் மேல் படியக்கூடிய ஒன்று. இந்த வகை டிரீட்மென்டில் கெமிக்கல் சேர்க்கப்பட மாட்டாது. மேலும், இது முடிக்குள்ளே ஊடுருவாது என்பதால், எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. இதில், 'கெரைட்டின்' என்கிற புரோட்டீன் இருப்பதால், ஷைனிங் டோன் கிடைக்கும். ஆனால், இது மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரையே இருக்கும். நார்மல் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்தவர்களும் இந்த வகை கெரைட்டின் டிரீட்மென்ட் செய்துகொள்ளலாம்.

 

பக்காவாக பராமரிக்க முடியும் என்பவர்களுக்கு இது பெர்ஃபெக்ட் சாய்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!