வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (27/07/2018)

கடைசி தொடர்பு:14:55 (27/07/2018)

டெரகோட்டா டு டெக்காபேஜ் ஜுவல்ஸ்... ஆயிரங்களில் வருமானம் அள்ளும் ஜெயசித்ரா! #WomenEntrepreneur

எந்தப் பொருளையும் மொத்தமாக வாங்கினால் விலைக்குறைவுதான். எனினும், கிராஃப்ட் வொர்க்கில் ட்ரெண்ட் மாறிக்கொண்டே இருப்பதால், கிராஃப்ட் செய்வதற்கான பொருள்களை மொத்தமாக வாங்காமல் இருப்பது நல்லது.

டெரகோட்டா டு டெக்காபேஜ் ஜுவல்ஸ்...  ஆயிரங்களில் வருமானம் அள்ளும் ஜெயசித்ரா! #WomenEntrepreneur

நாம செய்யும் பிசினஸ் எதுவாக இருந்தாலும், தனித்துவமாகவும் ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரியும் செய்தால், குறைந்த முதலீட்டிலே நல்ல லாபத்தை ஈட்டலாம்" எனத் தன்னம்பிக்கையுடன் தொடங்குகிறார், ஜெயசித்ரா. ஜெயசித்ரா

பெங்களூரில் வசிக்கும் ஜெயசித்ரா, ``எனக்குச் சொந்த ஊர் திருச்சி. படிச்சது பி.சி.ஏ. கிராஃப்ட் மேலே ஆர்வம் அதிகம். காலேஜில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தோழிகளோடு சேர்ந்து சின்னச் சின்ன கைவேலைப்பாடுகள் நிறைந்த பொருளை செய்து, மற்றவர்களுக்குப் பரிசு அளிப்பேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு, டெரகோட்டா நகைகள் செய்யும் வகுப்பில் அப்பா சேர்த்துவிட்டார். அங்கே கற்ற அடிப்படை விஷயங்களை வைத்து நிறைய மாடல்களைப் புதுசு புதுசா உருவாக்கி, அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தேன். `உங்க கலெக்ஷன் யுனிக்கா இருக்கு'னு பாராட்டினாஙக். நிறைய  ஆர்டர்ஸ் வந்துச்சு. ரெபரன்ஸுக்காகப் பல மாடல்களை ஆன்லைனில் பார்ப்பேன். ஆனால், அதைச் செய்வதற்கு தேவையான பொருள்கள் எங்க ஊரில் கிடைக்காது. அல்லது, அதிக விலை இருக்கும். அதனால், கையில் இருக்கும் பொருள்களிலேயே வெரைட்டி காட்ட ஆரம்பிச்சேன்.

ஃபேஷன்

நாலு வருஷத்துக்கு முன்னாடி டெரகோட்டா நகைகள் பீக்கில் இருந்துச்சு. எனக்குத் தெரிஞ்சவங்க மூலமாகவும், ஆன்லைனிலும் டெரகோட்டா நகைகளை விற்க ஆரம்பிச்சேன். நிறையவே லாபம் கிடைச்சது. அப்புறம் சில்க் திரெட் ஜுவல்லரி ஃபேஷனானதும் டெரகோட்டா விற்பனை குறைஞ்சது. ட்ரெண்டுக்கு ஏற்ப அப்டேட் ஆகணும்னு புரிஞ்சுக்கிட்டேன். சில்க் திரெட், வேணி மேக்கிங், ஹோம் மேட் சோப் வகைகள், டெகோபாஜ் ஜுவல்லரிகள், கலாம் காரி நகைகள் என அந்தந்த ட்ரெண்டுகளை உடனடியாக் கற்று, பிசினஸை டெவலப் பண்ணினேன். பயிற்சி வகுப்புகளும் எடுக்க ஆரம்பிச்சேன். எந்த அலைச்சலும் ஸ்ட்ரெஸ்ஸும் இல்லாமலே மாசம் 40,000 வரை சம்பாதிச்சேன். என் நெருங்கிய தோழி மூலம் யூடியூப் சேனலில் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றி தெரிஞ்சுகிட்டேன். சேனல் ஆரம்பிக்கிறது தொடர்பான அத்தனை தகவலையும் ஆன்லைன் மூலமே கற்றேன். கிராஃப்ட்டுக்கான யூடியூப் சேனல் ஆரம்பிச்சேன். அதில், மொபைலில் எடுத்த கிராஃப்ட் தொடர்பான வீடியோக்களை அப்லோடு செய்தேன். யூடியூப் சேனலில் நாம் அப்லோடு செய்யும் வீடியோக்களுக்குப் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வருமானம் கிடைக்கும் என்பது நிறைய பெண்களுக்குத் தெரியறதில்லை. அதுபற்றி என் தோழிகளுக்கு விளக்கம் கொடுப்பேன். மணிக்கணக்கில் பயிற்சி வகுப்பு எடுக்கிறதில் கிடைக்கும் லாபத்தைவிட, வீடியோக்களுக்காகச் செலவிடும் சில மணி நேரம், நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஹார்டு வொர்க்கைவிட ஸ்மார்ட் வொர்க்குக்கு மதிப்பு அதிகம்தானே'' என எனர்ஜிடிக்காகப் புன்னகைக்கிறார் ஜெயசித்ரா.

ஜெயசித்ரா-  வேணி மேக்கிங்

ஜெயசித்ரா சொல்லும் பிசினஸ் டிப்ஸ்:

எந்தப் பொருளையும் மொத்தமாக வாங்கினால் விலை குறைவுதான். எனினும், கிராஃப்ட் வொர்க்கில் ட்ரெண்டு மாறிக்கொண்டே இருப்பதால், கிராஃப்ட் செய்வதற்கான பொருள்களை மொத்தமாக வாங்காமல் இருப்பது நல்லது.

மற்றவர்களின் பொருளோடு உங்கள் பொருளை ஒப்பிட்டுப் பார்க்காமல், பொருளின் நேர்த்திக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யுங்கள்.

ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி பிசினஸ்ஸை அப்டேட் செய்துகொண்டே இருப்பது அவசியம்.

கற்றுக்கொண்ட எந்தக் கலையிலும், உங்களுடைய தனித்துவத்துக்கு ஏற்ப மற்றவர்களிடமிருந்து வித்தியாசத்தையும், வெரைட்டிகாட்டுவதும் அவசியம்.

ஆன்லைனி பிசினஸ் செய்கிறீர்கள் எனில் உங்களுடைய எல்லா கலெக்‌ஷனையும் மொத்தமாக அப்லோடு செய்யாதீர்கள். இதனால் உங்கள் தனித்துவத்தை மற்றவர்கள் இமிடேட் செய்ய வாய்ப்பு உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்