Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெண்கள் தங்களை தற்காத்துகொள்ள உதவும் சிம்பிளான சில கருவிகள்...

ல்லா பொண்ணுகளும் பாக்கறதுக்கு சாஃப்ட்டா, சமந்தா மாதிரி இருக்காங்கதான். ஆனா உங்களுக்கு ஒரு பிரச்னை அப்படின்னா,  நீங்க இறுதிச்சுற்று ரித்திகா சிங்கா மாறிதான் ஆகணும். அந்த அளவுக்கு பன்ச் சண்டை இல்லாட்டியும் சில பேசிக் வெப்பன்ஸ் நம்ம கூட இருந்தே ஆகணும். அப்படி கட்டாயம் இருக்க வேண்டிய 5 வெப்பன்ஸ் இதோ...

1. பெப்பர் ஸ்ப்ரே :

பெண்களின் பாதுகாப்புக்கான தெறி ஆயுதம்! ’முகமூடி’ படத்தில் பூஜா ஹெக்டே,  ஜீவாவின் முகத்தில் மூட்டைப்பூச்சி மருந்து மாதிரி அடிப்பாங்களே அதேதான். இதை ரொம்ப ஜாக்கிரதையா கையாணும்  கேர்ள்ஸ். பெப்பர் ஸ்ப்ரே அடித்தால்சுற்றி 15 அடி விட்டத்துக்கு யாரும் இருக்கமுடியாது . இதை உபயோகப்படுத்தும்போது உங்கள் மூக்கை துணி அல்லது கைக்குட்டை வைத்து இறுக்கமாக மூடிக்கொள்ளவும் . இல்லை என்றால் நம் எதிரியுடன் சேர்ந்து நாமும் மயங்கிவிடுவோம். பாதுகாப்பா கையாண்டா இந்த பெப்பர் ஸ்ப்ரே,  ஜேம்ஸ் பாண்ட் பட துப்பாகி மாதிரி உங்கள சேஃப்பா எஸ்கேப் ஆக வைக்கும். இல்லேனா இப்படிதான்


 

2. லிப்ஸ்டிக் ஸ்டன் கன் :

உதட்டுச் சாயக் கருவி போல இருக்கும் இந்த லிப்ஸ்டிக் ஸ்டன் கன் துப்பாக்கி, சிறியதாக இருந்தாலும் பலம் வாய்ந்தது. நம்மைத் தாக்க வருபவரின் கை, கால்களைத் தற்காலிகமாக வலுவிழக்கச் செய்யும் திறம் இந்தத் லிப்ஸ்டிக் ஸ்டன் கனுக்கு உண்டு.

3. கூர்மையான கீ செயின்  :

வாகனம் ஓட்டும் பெண்களே , இப்போ இருக்கிற சூழலில் மினியன் பொம்மை இருக்கிற கீ செயினை வாங்குவதை விட சிறிய அளவிலான கூர்மையான முனை உடைய கீ செயினை வாங்குவது புத்திசாலித்தனம். இன்ஸ்டண்ட் பாதுகாப்புக்கு இந்த கீ போதும்.

4. கூர்மையான பென்சில்\ பேனா :

இருப்பதிலேயே ரொம்ப சிம்பிளான விஷயம் பென்சில் / பேனா. கைல எதுவுமே கிடைக்காதப்ப பென்சில்/ பேனாவ எடுத்து ஷார்ப்பான பகுதியினால் தாக்குங்க. பென்சில் வைத்திருந்தால் ஷார்ப்பனரையும் உடன் எடுத்து செல்லவும். அழி ரப்பர் வெச்சு அழித்தாலும் காயம் மறையாது. அவ்வ்வ்...


5. மிளகாய் பொடி :

இது காலத்தால் அழியாத செமத்தியான டெக்னிக். பாதுகாப்பிற்கு சில்லி உண்மையாலுமே கில்லி. யாராவது தொல்லை கொடுத்தா,  அவுங்க முகத்துல சில்லி ஃப்ரை ட்ரை பண்ணுங்க.மேட்டர் ஓவர்...

அவசரத்துல இதெல்லாம் கைல சிக்குமா? உடனடியா அட்டாக் பண்ண முடியுமான்னு கேக்குறீங்களா கேர்ள்ஸ்...? அதுக்கும் பதில் இருக்கு. கொஞ்சம் சமயோஜிதமா யோசிச்சு கைல கொஞ்சம் நகம் வளர்த்து வெச்சுக்கோங்க போதும். ஆனால், எல்லாவற்றையும் விட தொந்தரவு கொடுப்பவர்களிடம் மட்டும் இந்த ஆயுதங்களை கையாளவும். ரிகர்சல் பார்க்குறேன் என யாரையும் டரியல் ஆக்க வேண்டாம்...

6. டார்ச் லைட் : உங்க ஹேன்ட்பேக்ல எப்போதும் ஒரு டார்ச் லைட்டை வைச்சுகோங்க , உங்கள தாக்க வர்றவங்க முன்னாடி டார்ச் லைட்ட அவங்க கண்ணை பார்த்து அடிங்க , கண்ணு கூசி கொஞ்ச நேரம் அவங்கள டைவர்ட் பண்ணலாம் .. டேக் கேர் கேர்ள்ஸ் !

 

- நிவேதா சேகர் , லோ.சியாம் சுந்தர்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close