Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேட் வேர்ட்ஸ் இல்ல கேர்ள்ஸ்... கோட் வேர்ட்ஸ்!

 

" அட இந்த பசங்க முன்னாடி எதையாவது வெளிப்படையா சொல்ல முடியுதா..? என்ன சொன்னாலும் உடனே கமென்ட் அடிச்சிடுறாங்க. பேட் பாய்ஸ்... "அப்படின்னு ஃபீலிங்கான  பெண்கள் எல்லாம்  லெமூரியா கண்டத்துலேயே வழக்கொழிந்து போயாச்சு . ஆனால், இந்த நியூ ஜென்ரேஷன்ஸோ கவுன்ட் பண்ண முடியாத அளவுக்கு  கன்னாபின்னா கோட் வேர்ட்ஸை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.

அவற்றில் சில இங்கே....

சீன் கான்ட்ரா: வடிவேலுவின் 'ஹய்யய்யோ..." டயலாக்கின் ஆங்கில வெர்ஷன் தான் 'சீன் கான்ட்ரா' - அவ்வ்வ்...

ஜெலுசியலிசம்:  'அவ எப்படி அந்த பையன கரெக்ட் பண்ணா, இவளுக்கு மட்டும் இந்த மாடல் டிரஸ் எங்க கிடைக்குது?'னு உங்களை பார்த்து வயிறு எரியும் பெண்களிடம் சொல்லுங்கள்.... 'ஜெலுசியலிசம்'. 

ஆம்பள அனுஷ்கா: கன்னம் ரெண்டும் பன்  மாதிரியே இருக்கும் அழகான பசங்க எல்லாரும் ஆம்பள அனுஷ்கா பதவிக்கு நூறு பர்சென்ட் தகுதியானவங்க. - ச்சோ ஸ்வீட்...

ஏஓ (AO) : இதயம் பலவீனமானவங்க, பதினெட்டு வயசுக்கு கீழ உள்ளவங்க இந்த வார்த்தைகளை கேட்காதீங்க. -   18+ அடல்ட்ஸ் ஒன்லி

பால்வாடிஸ்: எதுக்கெடுத்தாலும் 'மிஸ் இவன் என்னை கிள்றான், இவ என் ஜடைய புடிச்சி இழுக்குறா'னு கப்பித்தனமா கம்ப்ளைன்ட் பண்ற எல்லோரும் பால்வாடிஸ்தான்...

பிச்சு பிச்சு:  ஏதாவது தப்பு பண்ணிட்டாலோ இல்ல கோவமா பேசிட்டாலோ, அதுக்கு செல்லமா திட்றதுதான் இந்த பிச்சு பிச்சு. பிச்சு பிச்சுக்கு வரும் உடனடி ரிப்ளை 'மன்னிச்சூ'. 

ஓகே (ok): நங்குனு தலையில் கொட்டு வெச்சுட்டு, 'சாரிடி விளையாட்டுக்கு கொட்டுனேன்'னு சொல்ற சில்லி தனத்துக்கு பெயர்தான் இந்த ஓகே. - ஒன்லி கிட்டிங் (only kidding ).

சிலீப்பர் செல்ஸ்: எதிர்காலத்த பத்தி கனவு காண க்ளாஸில் தூங்கிட்டு இருக்குற நம்ம பொண்ணுங்கள "ஹே சிலீப்பர் செல்ஸ்... எந்திரிங்கடினு" புரொபசர்ஸ் சொன்னா கோவம் வருமா வராதா சொல்லூங்க மக்களே சொல்லுங்க...

ஜூவல்லரி விளம்பரம்:  'அட்டகாசம்' அஜித், 'மாரி' தனுஷ் என நகைகளை அள்ளி போட்டிருக்கும் பாய்ஸ், கேர்ள்ஸ்களுக்கு பெயர் 'ஜூவல்லரி விளம்பரம்'.- செமத்தியான சேதாரம் உண்டு.

ஃபேக் ஐடி:  நம்ம கூடவே இருந்துகிட்டு நமக்கே தெரியாம நம்மளை 'சீட்' ( cheat) பண்ற கேர்ள்ஸ் அண்ட் பாய்ஸுக்குத்தான் ஃபேக் ஐடினு நேம். - துரோகிகளா

ப்ளூ டிக்:  வாட்ஸ் அப்லேயே குடியிருக்கும் குடிமக்கள் எல்லோருமே ப்ளூடிக் தான். உங்க ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு ப்ளூடிக் இருக்கான்.

கூகுள்: "அப்புறம் மச்சான்... அடுத்தவாரம் எங்கியாச்சும்... "- இப்படி கேள்வி கேட்கறதுக்கு முன்னாடியே, "ஆமாண்டா போலாம். பாண்டிச்சேரி ஓ.கே வா?" என்கிற ரீதியில் நம்மை பேச விடாமல், அவர்களே அனைத்தையும் பேசிமுடித்துவிடும் கேரக்டர்கள். - அன் இன்ஸ்டால் பண்ணிடுங்கோ

சீன் மாமா: ஒண்ணுமே இல்லனாலும், சும்மானாச்சுக்கும் பீட்டர் விட்டே வெறுப்பேத்துற பசங்கதான் 'சீன் மாமா'. - சீன்மா

செல்லக்குட்டி:  எதுவாக இருந்தாலும் ஸ்மூத்தாக தீர்த்து வைக்கும் மேலதிகாரி. - 5000 இன்க்ரீமெட்

பிட்டு பர்பி: - 'ஏதாவது ஓட்டிப் பார்ப்போம் செட்டாச்சுனா ஹிட்டுதான்'னு நினைக்கிறவங்கதான் இந்த பிட்டு பர்பி. - வந்தா மல

ஆதிவாசி: -குரூப்லயே சேராமல் ஏலியன் போல் தனி ஒருவனா வாழ்ந்துட்டு இருக்க எல்லோருமே ஆதிவாசிதான்...- இருட்டுலேயே வாழ்றவய்ங்க...

டவுசர் பாண்டி:  பீச், சினிமா, பார்க்னு  எல்லா இடத்துக்கும் முட்டிக்கு மேல குட்டி டவுசர் போட்டுட்டு திரியற பசங்களுக்கு பெயர் பாண்டி, டவுசர் பாண்டி. - ஹி...ஹி...

கோயபல்ஸ் குமார்:  வாயத் திறந்தா கூச்சமே இல்லாம எல்லா இடத்துலயும் தயங்காம பொய் பொய்யா சொல்றவங்கதான் இவய்ங்க. - காசா பணமா ?அள்ளி போடுவோம்...

மேகி நூடுல்ஸ்: இரண்டு நிமிஷத்துல வேலைய முடிச்சுக் கொடுனு கண்டிஷன் போடுறவங்களுக்கு இந்த பேர் சரியா இருக்கும். -கடுப்புகளை கிளப்பிகிட்டு

பிரதாப் போத்தன்: பெல் பாட்டம் பேன்ட், பட்டர் ப்ளை காலர் ஷர்ட்  என 1980 களின் ஸ்டைலில் ட்ரெஸ் போடுறவங்களுக்கு இந்த பெயர் பக்காவாக பொருந்தும்.

டோங்கிரி மண்டை/கப்பி கேக் மண்டை:  வித்தியாசமா ஹேர்ஸ்டைல், ஹேர் கட்டோட இருக்கும் அதிசயப் பிறவிகளுக்கு இந்தப் பேர வைச்சு அழைச்சாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்....

 

-வே.கிருஷ்ணவேணி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close