பெண்கள் மெனோபாஸ் காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு வகைகள்!

 

ஒவ்வொரு பெண்களும் தங்கள் வாழ்க்கையில்  சந்திக்கக் கூடிய ஒன்று மெனோபாஸ். பொதுவாக 50 முதல் 55 வயதில் ஏற்படும் மெனோபாஸ் தற்போது 40 முதல் 45 வயதிலேயே பல பெண்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. அந்த காலகட்டத்தில் உடலியல் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஹார்மோன் மாற்றம் காரணமாக தேவையில்லாத எரிச்சல், மன உளைச்சல், படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் போக்கில் சீரற்றத் தன்மை என பல பிரச்னைகள் ஏற்படும். இந்த நேரத்தில் உணவின் மீது ஈடுபாடு இல்லாமல் இருக்கும். இவை அனைத்துமே ஹார்மோன் மாற்றத்தினால் ஏற்படக் கூடியவையே. 

ஹார்மோனை சீராக வைத்திருக்கக் கூடிய உணவுகளை இந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. பச்சை காய்கறிகள், பழங்கள், பால், சோயா, கீரை, நெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். வெந்தயம் உடல் சூட்டைத் தணிக்கும் என்பதால் இரவு நேரத்தில் தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் சூட்டை தணிக்கும். அதிக அளவு எண்ணெய் பொருட்களை சேர்ப்பதை தவிர்ப்பது மற்றும் சர்க்கரை மற்றும் குளிபானங்களை ஒதுக்கி வைப்பது மெனோபாஸ் காலத்தில் உடலை சீராக வைத்திருக்க உதவும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!