பெண்களை அதிகம் அச்சுறுத்தும் இரண்டு நோய்கள்.. அதற்கான தீர்வுகள்!

அன்றைய காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே பயந்தார்கள். ஆனால், இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய நிலை மாறியிருக்கிறது. இணையம் என்கிற உலகம் நம் கண் முன் அகன்று விரிந்து கிடைக்கிறது. இப்படி இருக்கும்பொழுது இன்னும் வேதனை தரும் விஷயமாக இருப்பது, பெண்கள் பலரும் தங்களுடைய அந்தரங்க பிரச்னைகளுக்கான தீர்வை அறிந்து கொள்ளுவதற்கு முயலாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

தன்னுடைய அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் பெண்களின் சதவீதம் என்பது வெறும் 10% தான். மீதமிருக்கும் 90% பெண்கள் தங்களுடைய அந்தரங்கமான விஷயங்களை நண்பர்கள் முதற்கொண்டு மருத்துவர்கள் வரை யாரிடமும் வெளிப்படையாக சொல்வதில்லை' என இதுகுறித்து விரிவாகப் பேசுகிறார், சென்னை, திருவல்லிக்கேணி , அரசு கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின், மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் நிபுணர் மற்றும் சிறுநீரியியல் சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் ஶ்ரீகலா, 

 

கர்ப்பப்பை வாய் புற்று, எப்படி கண்டறியலாம்?

''ஹியோமன் பாபிலோமா வைரஸ்தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமாக இருக்கிறது. கேன்சர் என யூகிக்கும் பொழுதே மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். மருத்துவரிடம் போனால், 'ஆப்ரேஷன் செய்ய வேண்டியிருக்கும், மருத்துவரிடம் எப்படி சொல்வது என்கிற தயக்கத்தில் யாரிடமும் தனது உடல் சார்ந்த பிரச்னைகளை சொல்வதில்லை. மேலும், சிறுநீரக கசிவு, வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பு ஏற்படுதல், மார்பகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருத்தல் என பலதரப்பட்ட அந்தரங்க விஷயங்களை பெண்கள் பகிர்ந்துகொள்வதில்லை என்கிறது  ஒரு புள்ளிவிவரம். மார்டனாக இருக்ககூடியப் பெண்கள் கூட சில நேரங்களில் இந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதில்லை. இதனால், ஆரோக்கியம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு, அந்த பிரச்னை பூதாகரமாக ஆகிறது என்பதை நீண்ட நாட்கள் கழித்தே தெரிந்துகொள்கிறார்கள். இதிலிருந்து பெண்கள் மாற வேண்டியது அவசியம்.


மார்பக புற்று, அறிவது எப்படி?

குழந்தை பிறந்த பிறகோ, அல்லது அதற்கு முன்போ மார்பகத்தில் கட்டிப்போன்று தென்பட்டால் அதைப்பார்த்து அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்கும் என தீர்மானம் செய்து கொள்கிறார்கள். இது கேன்சர் அல்ல. penign tumours எனப்படும் கேன்சர் அல்லாதக்கட்டிகள் தான் மார்பகத்தில் பெரும்பாலும் பெண்களுக்கு அச்சத்தை தரும். malignant - எனப்படுவது கேன்சர் கட்டியாகும். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரிவித்து, மருத்துவரை அணுகுவதுதான் 'வரும் முன் காப்போம்' என்பது போல சிறந்தது''. 

கர்ப்பப்பை வாய் புற்று நோய்கான அறிகுறிகள்:

* துர்நாற்றத்துடன் அதிகமாக வெள்ளைப்படுதல்- (பலருக்கு நார்மலாகவே வெள்ளைப்படும். இதை இதனுடன் சேர்க்க வேண்டாம்)

* பொதுவாக மாதவிடாயானது 5 நாட்களுக்குள்ளாக இருக்க வேண்டும். அதையும் தாண்டி நீண்ட நாட்கள் அல்லது மாதவிடாய் நின்று மீண்டும் அதே மாதத்தில் இரத்தப்போக்கு திடீரென ஏற்படுதல்.

* உடல் உறவு கொள்ளும்போது பொதுவாக இரத்தக் கசிவு ஏற்படக் கூடாது. முதன் முதலில் உறவு கொள்ளும்போது இரத்தக்கசிவு இருக்கலாம். திருமணம் ஆனப்பிறகு குறிப்பிட்ட வயதுக்குமேல் உடலுறவின் பொழுது இரத்த கசிவு ஏற்பட்டால் மருத்துவரிடம் உடனடியாக அணுக வேண்டியது அவசியம்.

* பலருடன் தொடர்பில் (உடலுறவில்) இருக்கும்போது கண்டிப்பாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும். செக்‌ஷூவலி டிரான்ட்சிட்டன்சியினால் அதிகமாக இந்நோயானது வருகிறது. 30 - 50 வயசு வரை உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகளை பார்க்கிறோம்'' என்றார்.

- வே.கிருஷ்ணவேணி


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!