மாதவிடாய் நாட்களில் யாரெல்லாம் உடற்பயிற்சி செய்யக்கூடாது!

கர்ப்பம் தரிப்பதற்கான முயற்சியில் இருப்பவர்கள் அமர்ந்து செய்யும் ஆசனங்களை மட்டுமே செய்வது நல்லது. மாதவிடாயின் பொழுது உடற்பயிற்சி செய்வது ஒவ்வொரு உடல் அமைப்புக்கும் மாறுபடும். சிலருக்கு எதாவது ஒரு கனமான பொருளைத் தூக்கும் பொழுதுகூட உதிரப்போக்கு அதிகமாகலாம். இவர்கள் அந்த நாட்களில் அப்டமல் (வயிறு சார்ந்த) உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. 

குறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை  பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற்சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. இப்படிப்பட்டவர்கள் இந்நாட்களில்  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!