பெண்கள் மூச்சுப் பயிற்சி, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

ஆண்களை விட அதிக அளவில் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் பெண்கள் ஆவர். குடும்பம், வேலை என எப்பொழுதும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் அவர்கள், பல நேரங்களில் தங்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்தை தவிர்க்க பிரணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா பெரிதும் பயன்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் நோய்களையும் தடுத்து நிறுத்த முடியும் என்கின்றனர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். 

பொதுவாக அதிகாலை நேரத்தில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்வதன் வாயிலாக நுரையீரல் பிரச்னைகள் நீங்கும். இதயத்துடிப்பு சீராக இருக்கும். கர்ப்பப்பை சுத்தமான காற்றைப் பெறும். தினமும் யோகா பயிற்சி செய்வதால் அன்று நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். முதுமையை போக்கி எப்போதும் மனம் மற்றும் உடலை இளமையாக வைத்திருக்க முடியும். தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுக்கிறது. சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!