Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தத்தெடுப்பதை இரண்டாவது தேர்வாக எண்ணாதீர்கள்!

குழந்தைப்பேறு தள்ளிப்போகும் பொழுதும், நீண்ட நாட்கள் இதற்கான காத்திருப்புக்குப் பிறகு, குழந்தையை தத்தெடுக்கலாம் என்கிற முடிவுக்கு வருகின்றனர் சில பெற்றோர்கள். ஆனால், இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில் இருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்களுடைய சொந்த ரத்த பந்தத்தையே விரும்புகிறார்கள். அதனால், பெரும்பாலானோர் தத்தெடுக்கும் முடிவை கைவிடுகின்றனர். 

தத்தெடுத்திருக்கும் பெற்றோர்கள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், தத்தெடுப்பதற்கு ஆதரவு அளித்து வருவோர் என பலதரப்பட்டோர் சமீபத்தில் புனேவில் நடைபெற்ற தத்தெடுத்தல் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

'Ours by choice' நூலின் ஆசிரியரான நீலிமா மேத்தா இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தத்தெடுப்பதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசினார். ''தத்தெடுத்தல் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று. அதாவது திருமணத்தைப் போன்றது. அதேபோலத்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை தத்தெடுத்தல் என்பது இரண்டாவது தேர்வு இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நான் என் குழந்தையை இரண்டாவது தேர்வாக நினைத்து தத்தெடுக்கவில்லை. மேலும், நான் அவளை என் குடும்பத்தில் முக்கியமான ஒருத்தியாகத்தான் தற்போது வரை பார்த்து வருகிறேன். இருப்பினும், ஆரம்பத்தில் என்னுடைய குடும்பத்தினர் அவளை ஏற்றுக் கொள்வது சிரமமாகத்தான் இருந்தது. ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது அவளை நாங்கள் தத்தெடுத்து. அவள் இப்போது எங்கள் வாழ்க்கையில் முக்கியமான அங்கமாக இணைந்து விட்டாள். இதுபோல தத்தெடுக்கும் முயற்சியில் இருக்கும் நண்பர்களை நான் சந்திக்கும் பொழுது எப்படி அணுக வேண்டும் என்பதையும் சொல்லித் தருகிறேன் என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close