Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனதில் குப்பையைச் சேர்க்க வேண்டாமே!

மனதில் குப்பையை சேர்க்க வேண்டாமே

 

யாருக்குதான் பறப்பது பிடிக்காது?! அப்படியே ஜிவ்வெனப் பறந்து வானம் தாண்டிப் போய் விட முடிந்தால்... கற்பனை செய்து பார்க்கவே ஜாலியாக இருக்கிறதே! அப்படியொரு வாய்ப்பு ஒவ்வொருவர் கையிலும் காத்திருக்கிறது. சந்தேகமாக இருக்கிறதா? மனதின் ஆழம் போய் தேடிப் பாருங்கள் கிடைக்கும். ஆம் உங்கள் மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொண்டால், எந்தச் சூழலிலும் அப்படிப் பறக்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மனதில் குப்பையைச் சேர்க்க வேண்டாமே! 

கவிதா செம பிஸியான லேடி. ரொம்பவும் லொட லொட. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடும் அருவி. அவளை 'ஹேப்பி பேர்ட்' என்றே அழைக்கலாம். ஆனால் உள்ளுக்குள் விஷயம் வேறு. பின்னால் நடக்கப் போவதையெல்லாம் டஜன் டஜனாக கற்பனை செய்து மண்டைக்குள் மிகப்பெரிய குப்பை மலையை ஏற்றி வைத்திருந்தாள். பழகும் யாருக்கும் தெரியாது அவளுக்குள் இப்படியொரு அழுத்தம் ஒளிந்துள்ளது என்று. தான் நினைப்பது போலவே எல்லாம் நடந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவளது உணர்வுகளை மேலும் அழுத்தியது. 

மகிழ்ச்சி பொங்க கைகளை விரிக்கும் பெண்

தொடர் மன அழுத்தம், அதை வெளியில் பகிர்ந்து கொள்ளாத சிரமம் என தனக்குள்ளாகவே பிரச்னைகளை வைத்துக் கொண்டதால் கவிதாவின் தூக்கம், சாப்பாடு எல்லாமே மாறிப்போனது. கொறித்தபடி சாப்பிட்டு இளைக்கத் துவங்கினாள். போதிய தூக்கம் இன்மையால் அலுவலகத்தில் தூங்கி வழிந்தாள். காய்ச்சல், சளி என அடுத்தடுத்து பிரச்னைகள் படுத்தியெடுக்க மருத்துவரை அணுகினாள். மருந்தோடு அவளது மனதுக்கும் மருத்துவம் அளிக்கப்பட்டது. 

மனதில் குப்பைகளை அதிகம் சேர்க்க வேண்டாம் என்ற மருத்துவர் சசிகுமார் மேலும் கூறுகையில், ''ஹார்மோன்களின் செயல்பாட்டினால் மூளையில் மருத்துவர் சசிக்குமார்சுரக்கும் ரசாயன மாற்றம் மனநிலை மற்றும் நோய்க்கான சூழலை உடலில் ஏற்படுத்துகிறது. பெண்கள் பெரும்பாலும் விஷயங்களை உணர்வு ரீதியாகப் பார்க்கின்றனர். தொடர்ந்து பலரிடம் அந்தப் பிரச்னை பற்றிப் பேசப் பேச ஒவ்வொருவரது கருத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ளும்போது, மிகச்சிறிய பிரச்னைகூட பூதம் போலதான் வளர்ந்து நிற்கும். தனக்கு நேரும் பிரச்னை பற்றி தொடர்ந்து பலரிடம் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். 

எந்தப் பிரச்னையும் வெளியில் இருப்பவர்களால் மட்டும் வருவதில்லை. ஏதோ ஒரு வகையில் நாமும் அதற்கான காரணமாக இருக்கிறோம். ஒரு விஷயம் நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அது மிகச் சரியானது என்று கூறிவிட முடியாது. நாம் அதிகளவில் பற்று வைக்கும் விஷயங்களால் தான் எந்தப் பிரச்னையும் உருவாகிறது. இந்தப் பற்றை படிப்படியாக குறைத்துக் கொள்வதன் வழியாக அதற்குத் தீர்வு காணலாம். மனதில் அழுத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை முதலில் வெளியேற்ற வேண்டும். உங்களுக்கு நம்பிக்கை தரும்படி, எந்த விஷயத்தையும் பாசிட்டிவாகக் கையாள்பவர்களிடம் உங்கள் பிரச்னையைப் பகிர்ந்துகொண்டு, அதன் தாக்கத்தை குறைத்துக் கொள்ளலாம்.  

ஒரு சில பிரச்னைகளை யாரிடமும் வெளியில் சொல்ல முடியாது. அப்போது அந்தப் பிரச்னை முழுவதையும் குறிப்புகளாக ஒரு தாளில் எழுதவும். பிரச்னை எதனால் வருகிறது, என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறோம், இதில் நமது தவறு என்ன, நம்மிடம் எந்த விஷயத்தை மாற்றிக்கொண்டால் இந்தப் பிர்சனையில் இருந்து வெளியில் வர முடியும் என்பதை நீங்களே நீதிபதியாக இருந்து மனம் திறந்து எழுதலாம். அதை யாரும் பார்க்கப் போவதில்லை. எழுதிய விஷயத்தை சில முறை திரும்பப் படித்துப் பாருங்கள். பரிதவித்த மனம் ஒரு வழியாக சமாதானம் ஆகியிருக்கும். அடுத்து என்ன செய்யலாம் என்ற தெளிவும் மனதில் உருவாகியிருக்கும். இப்போது யாருக்கும் தெரியாமல் அந்த காகிதத்தைக் கிழித்துப் போடுங்கள். மனதில் சேர்க்கப்பட்ட குப்பை இப்போது உங்கள் வீட்டு டஸ்ட் பின்னில். 

நோய்க்கான சூழலை மனமே உடலில் ஏற்படுத்துகிறது. சின்னச் சின்ன விஷயங்களை பெரிதாக்கி தொடர்ந்து மனதில் போட்டு அழுத்துவதால் சிந்தனையை பாதித்து நம்மை வழக்கம் போல் செயல்பட விடாமல் தடுக்கிறது. உடல் நலனையும் பாதிக்கிறது. மனதுக்கு நல்ல விஷயம், கெட்ட விஷயம் என்பதெல்லாம் தெரியாதே. அதீத உணர்வுகளால் அது பாதிக்கப்படுகிறது. அதிகமாக சந்தோஷத்தை கொண்டாடுவது, மிகுந்த சோகத்தில் ஆள்வது இரண்டுமே மனதில் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே எந்த உணர்வையும் இயல்பாக எடுத்துக் கொள்ளலாம். 

ஒரு செயலைச் செய்யும்போது அதில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு பக்கங்களும் இருக்கும். பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொள்வது போல நெகட்டிவானவை நடக்கும் பொழுது அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவசியம்.  முன்பே மனம் தயாராகிவிடும்போது எந்தப் பிரச்னையும் பெரிதாகத் தோன்றாது. எதையும் பேலன்ஸ்டாக ஃபீல் பண்ணும்போது மனம் லேசாகவே இருக்கும். எப்போது நினைத்தாலும் பறக்கலாம், மிதக்கலாம். மனதில் சேரும் குப்பைகளை அகற்றுங்கள், வாழ்வை ஜாலியாகக் கொண்டாடுங்கள்'' என்கிறார் டாக்டர் சசிக்குமார். ஒரு வாரத்தில் கருப்பழகு இப்படி யோசித்ததுண்டா.

-யாழ் ஸ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close