Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டிலேயே ஹேர் ஸ்பா... பலன்கள் பல! #HairCareTips

ஹேர் ஸ்பா

 

லைமுடி உதிர்வதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் பொலிவையும் இழந்துவிடுகிறோம். விளைவு, பார்லருக்கும் வீட்டுக்குமாக பறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டிலேயே ஹேர் ஸ்பா செய்ய முடியும் என்பதை கேட்கவே இனிக்கும்தானே. அது நிச்சயம் சாத்தியம் என்பதை டிப்ஸ்களாக தருகிறார் சேலம் ‘சியாமிஸ்’ பார்லர் உரிமையாளர் புஷ்பநாகலட்சுமி.

* முடி உதிர ஆரம்பிக்கும் போதே பார்லருக்கு வந்து முடியின் தன்மையை ஆராய்ந்து கொள்வது நல்லது. வறண்ட கூந்தல் இருந்தாலோ பொடுகு இருந்தாலோ முடி உதிர்வு ஏற்படலாம். அதனால் ஆரம்ப நிலையிலேயே ஸ்பா எடுத்துக் கொள்வது முக்கியம்.

* முன்பு தலைமுடியைப் பராமரிக்க ஆயில் மசாஜ் செய்யப்பட்டது. தற்போது பெரும்பாலும் மசாஜுக்கு மாற்றாக ஸ்பா செய்யப்பட்டு வருகிறது. ஸ்பா செய்வதும் மசாஜ் போலதான். எண்ணெய்க்குப் பதிலாக கிரீம்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தலைமுடியின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.

* மசாஜுக்குப் பிறகு தலைமுடியை ஹாட் டவலால் சுற்றி, பிறகு, வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை சுத்தம் செய்வார்கள். இதனால் ஸ்கால்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதுடன் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு பலம் கிடைக்கிறது.

* ஸ்பா செய்வதால் தலைமுடி மின்னுவதுடன், பொடுகு தொல்லையும் நீங்கும். இளநரை ஏற்படும் வாய்ப்பும் குறையும். இதனால் முடி உதிர்வு குறையும்.

* ஸ்பா செய்யும் போது மசாஜ் செய்யப்படுவதால் மன அழுத்தம் குறையும். நன்கு தூக்கம் வரும்.வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.

Hair Spa

 

வீட்டிலேயே  ஸ்பா செய்து கொள்வது எப்படி?!

* மிளகு, பூண்டு இரண்டையும் தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்கவிட்டு ஆற வைத்து தடவி வர பொடுகு நீங்கும்.

* தேங்காய்ப்பால் அரை கப் அளவுடன், 3 முழு நெல்லிக்காய், 10 சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து அரை மணி நேரம் தடவி ஊற வைத்துக் ஷாம்பூ போடாமல் குளித்தால் முடி பளபளப்பாகும்.

* முடிக்கு தேவையான அளவு சோற்றுக் கற்றாழையுடன், வெந்தயந்தை ஊறவைத்து அரைத்து 15 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால், கூந்தல் பளப்பாவதுடன் உதிர்வதும் குறையும்.

மேற்கண்ட முறைகளில் எதைச் செய்தாலும் நன்கு மசாஜ் செய்வது முடியின் வேர்க்கால்கள் வரை பரவி முடி வளர உதவும்.

-பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close