Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சல்வார், வெஸ்டர்ன், புடவை... ஆடைகளுக்கேற்ற ஆபரணங்கள் எவை!

ல்வார், மாடர்ன் உடைகள், புடவை என எந்தெந்த ஆடைக்கு என்ன மாதிரியான ஆபரணங்கள் அணிவது, இப்போது என்ன ட்ரெண்ட் உள்ளிட்ட பெண்களின் குழப்பங்களுக்கு ஆலோசனைகள் தருகிறார், ஃபேஷன் ஸ்டைலிஸ்ட், டிஸைனர் அருள்மொழி.

ஆபரணங்கள்

சல்வாருக்கு !
காதுகளில் பெரிய அளவில் கம்மல்கள் அணிவதுதான் இப்போ ட்ரெண்ட். அதனால் சல்வாருக்கு மேட்சிங்காக பெரிய வளையங்களை காதில் அணியலாம். கைகளில் பிரேஸ்லெட் போதும். கழுத்தில் எதுவும் அணியத் தேவையில்லை. கழுத்தில் அணிவதாக இருந்தால் கழுத்து, காது இரண்டிலும் பெரிய சைஸில் அணியாமல் தவிர்க்கவும்.

modern dress

மாடர்ன் உடைகளுக்கு!

ஜீன்ஸ், டாப்ஸ், டி-ஷர்ட் உள்ளிட்ட எந்த மாடர்ன் உடையாக இருந்தாலும் காதுகளில் பெரிய கம்மல் வேண்டாம். கழுத்துக்கு லாங் செயின்கள் நல்ல லுக் கொடுக்கும். அதே நேரத்தில் உயரம் குறைவாக இருப்பவர்கள் லாங் செயினைத் தவிர்க்கவும். அலுவலகம் செல்லும் பெண்கள் கழுத்தில் மெலிதாக மினுங்கும் செயின் அணியலாம். கழுத்து, காது இரண்டிலும் சின்ன சைஸ் ஆபரணங்கள் போதும். மாடர்ன் உடைகளுக்கு ஏற்ற ஆன்டிக் கலெக்‌ஷன் ஆபரணங்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அவை புதிய லுக் கொடுக்கும்.

saree

புடவைக்கு!
புடவைக்கு பெரிய ஜிமிக்கிதான் இப்போது ட்ரெண்ட். வெயிட்லெஸ் ஜிமிக்கிகள் மார்கெட்டில் கிடைக்கின்றன. அவற்றை புடவையின் நிறம், டிசைனுக்கு மேட்சிங்காக அணிந்து கொள்ளலாம். புடவை என்றாலே கழுத்துக்கு கிராண்ட் நகைகள் என்று தேவையில்லை. கழுத்துப் பகுதி பெரிதாக இருப்பவர்கள் மெல்லிய செயின் அணியலாம். மற்றவர்கள் எதுவும் அணியாமலும் இருக்கலாம். அதுதான் இப்போது ஃபேஷன். அதேபோல அளவுக்கு அதிகமாக வளையல்களை அடுக்காமல், சிறிய ஒற்றை வளையல், அல்லது மெல்லிய பிரேஸ்லெட் அழகாக இருக்கும். தினசரி புடவைகளுக்கு கல் வைத்த ஆபரணங்கள் வேண்டாம். பார்ட்டிகளுக்கு செல்லும்போது அணிந்து கொள்ளலாம்.

ஆக, ஆடைக்கேற்ற ஆபரணங்களை தேர்வு செய்யும் முன் அவற்றை நம் மனக்கண்ணில் அணிந்து கொண்டு நம்மை நாமே ரசித்துப் பார்ப்பது சரியான வகையில் ஆபரணங்களை தேர்வு செய்ய உதவும்.

-பொன்.விமலா

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close