Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு எனர்ஜி டானிக் இதுவே!

 

பெண்களுக்கு  டிப்ஸ்

காலையில் ஃப்ரெஷாக அலுவலகம் கிளம்பும் பெண்கள், மதியம் கொஞ்சம் டல்லாகி, மாலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டிய தேவைக்கு ஆளாகிவிடுவார்கள். ஒருவேளை காலை நேர பரபரப்பில் மூட் அவுட் ஆகிவிட்டால், அந்த நாள் மொத்தமும் வேஸ்ட். பெரும்பாலான வேலை நாட்களில், முதல் பாதி நாளில் உங்களது முழு எனர்ஜியையும் பயன்படுத்தியே லட்சியத்தை எட்ட வேண்டும். கொஞ்சம் ஸ்மார்ட்டாக திட்டமிட்டால் போதும்... அந்தக் கொஞ்ச நேரத்தில் அத்தனையையும் பாசிட்டிவாக மாற்றி விடலாம். 

 

இலக்கை எட்டிவிட்டால் உற்சாகம்தானே?! பகல் 12 மணியை எட்டும் முன்னர் 12 விஷயங்களை செய்துவிட ரெடியா? அதற்கு நீங்கள் காலையில் கண்விழித்த நொடியில் இருந்தே உங்களைத் தயார் செய்துகொண்டால்... ஆல் இஸ் வெல். அதற்கு இதோ இதையெல்லாம் ஃபாலோ செய்யுங்கள்! 

* காலை வழக்கமாக எழும் நேரத்துக்கு 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்துவிடலாம். இந்தக் கூடுதல் நேரம், நேற்று மறந்து போன வேலைகளை விரைந்து முடிக்க உதவும். 

* விழித்த உடன் இன்னும் கொஞ்ச நேரம் புரளலாமே என்ற எண்ணம் வரும். அதையும் உதறி எழுந்து விடுங்கள். ஐந்து நிமிடம் குட்டித் தூக்கம் போடுவதாகத் துவங்கி அரை மணி நேரம் கூட காணாமல் போய்விடும். 

* எழுந்த உடன் நாம் விழிப்பதே செல்ல போனின் ஸ்மார்ட் திரையில் தானே? நேற்று வந்து குவிந்த அத்தனை தகவல்களும் இன்பாக்ஸில் பத்திரமாக இருக்கத்தானே போகிறது? திறந்து பார்த்தால் உங்களது நேரத்தை தின்றுவிடும். போன் முகத்தில் விழிப்பது வேணாமே. 

* காலை உணவை அணில் போல ஓடிக் கொண்டே கொறிப்பதா? ம்ஹூம்... அமர்ந்து ரசித்து ருசித்து சாப்பிட சில நிமிடங்கள் ஒதுக்கவும். சாப்பிட்ட உணவு செரிக்க இதுவே சிறந்த வழி. இல்லையெனில் அவசரமாய் வயிற்றில் அள்ளிக் கொட்டுவது அஜீரணப் பிரச்னையாக கொல்லத் துவங்கும். 

* வீட்டில் உள்ள எல்லோரது தேவைகளும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றும் நீங்கள் உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். பிடித்த புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, பிடித்ததை சமைப்பது இப்படி எதுவும் இருக்கலாம். காலை நேரத்தில் மனம் ஜில்லாகும்.  

* ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான யோகா, தியானம், நடைப்பயிற்சி என்று எதிலாவது உங்களை ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். மனதுக்கும் உடலுக்கும் இது ஃபுல் எனர்ஜி தரும். தூக்கமும், சோர்வும் மலையேறும். 

* என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுப் பட்டியலிடலாம். அன்றைய தேவைகளின் அடிப்படையில் செயல்திட்டம் இருக்கட்டும். மிக முக்கியமான விஷயங்களை தவறாமல் முடிக்கலாம். நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ள இது போல் திட்டமிட்டு வேலை செய்யலாம்.  

* முக்கியத்துவம் வாய்ந்த வேலையை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் முடித்து விடலாம். மற்ற வேலைகளை அடுத்தடுத்து விரைந்து முடிக்க பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். 

* ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே விதமான வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் சில விஷயங்களை பிடித்த மாதிரி மாற்றிக் கொண்டு சோர்வு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். 

* வேலையின் இடையில் சின்னச் சின்ன பிரேக்குகள் எடுப்பதற்காக குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அடுத்தடுத்து முடிக்க வேண்டிய வேலைகளுக்கான ஃபாலோ அப் செய்வதன் மூலம், வழக்கமான வேலையில் இருந்து ரிலாக்ஸ் ஆக முடிவதுடன் காத்திருக்கும் வேலைகளும் சீக்கிரமே முடிந்து விடும். 

* மதிய உணவு இடைவேளைக்கு முன்னர் இன்று முடிக்க நினைத்த வேலைகளில் எது மிச்சம் உள்ளது என்று பார்க்கலாம். அந்த வேலைகளை உணவு முடித்த பின் நேரத்தை வீணடிக்காமல் செய்து முடிக்கலாம். 
 
* மதிய உணவை ரசித்து சாப்பிடவும். இன்னும் சில வேலைகள் மிச்சம் இருந்தாலும் முடிக்கத் தான் மாலை வரை நேரம் இருக்கிறதே? மனதில் நெருக்கடியை ஏற்றிக் கொள்ளாமல் முடித்து விடலாம். ரிலாக்ஸாக வீடு திரும்பலாம். பெண்கள் மனதில் குப்பையை சேர்க்க வேணாமே

- யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close