Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருங்காலம் பற்றிய பயத்திலிருந்து வெளியேற பெண்கள் என்ன செய்யலாம்?

பெண்கள்

 

நித்யா அத்தனை சுறுசுறுப்பானவள். எடுத்த காரித்தை முடிக்காமல் அடுத்த வேலை பார்க்கமாட்டாள். கணவன் சினேகன் ஒரு சுதந்திரப் பறவை. அதே சமயம், நித்யா தன்னை சாராமல் சுதந்திர மனுஷியாக வரவேண்டும் என்று எண்ணினான். சினேகன் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிற ஆள். நித்யா எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிற பெண். இந்த முரண்பாடு இருவருக்குள்ளும் சின்னச் சின்ன பிரச்னைகளாக வெடிக்கும். ஆனாலும் ஒரு போதும் சினேகன் தனது கொள்கையில் இருந்து விலகி நித்யாவிடம் சரண்டர் ஆனது இல்லை. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நித்யாவுக்குள் அந்த பயம் மிகப்பெரிய மன அழுத்தமாக பதியத் துவங்கியது. பெண்கள் பயத்தில் இருந்து வெளியில் வருவது சுலபமில்லை.

இருவருக்கும் இடையில் ஒருவித இடைவெளியை உருவாக்கியது. அவளது பயம் மேலும் அதிகம் ஆனது. அந்த பயத்தில் இருந்து எப்படி வெளியில் வருவது என்று நித்யா தத்தளித்துக் கொண்டிருந்தாள். வீடு, வேலை, உறவு என எல்லா இடத்திலும் வெடித்தது. நித்யா யாருடனும் முழுமையாக ஒட்ட முடியாமல் தனிமையை விரும்பினாள். வேலையிடத்திலும் புதிய இலக்குகள் எதையும் எட்ட முடியாமல் திணறினாள். 

இது போன்ற பிரச்னை 90 சதவீதம் பெண்களைப் படுத்தி எடுக்கிறது. வருங்காலத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள் பெண்கள். பின்னாடி நடக்கப் போகும் பிரச்னைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்காகவும் செயல்படுவது பெண்களின் இயல்பான குணமே. அதற்காக நித்யா போல தன்னை வருத்திக் கொள்ளத் தேவையில்லை. வருங்காலம் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு அதிகரிக்கும் நிலையில் அதிலிருந்து வெளியில் வர பெண்கள் என்ன செய்யலாம்.


 

* நீங்கள் நினைப்பது போலவே எல்லா விஷயங்களும் நடந்து விடாது. எதிர்பாராத பிரச்னைகள் உருவாகும்போது அதை எதிர்கொள்ள தயாராகுங்கள். காலமும், சூழலும் எப்போதும் மாற வாய்ப்புள்ளதால் பாசிட்டிவ் எண்ணங்களுடன் சிக்கலான சூழலை கடக்கலாம். 

* நஷ்டம், பயம், கோபம், சோகம் என அதீத உணர்வுகள் உங்களை ஆட்கொள்ளும் போது, உங்கள் செயல்கள் கட்டுப்பாட்டை இழப்பது போல தோன்றலாம். அதிலிருந்து வெளியில் வந்து உங்களது அன்றாடப் பணிகளை கவனிப்பதற்கான மனநிலை தேவை. 

* அழுத்தமான மனநிலையில் இருந்து வெளியில் வர நீங்களே முயற்சிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலும் இது போல நான் செயல்பட மாட்டேன் என உதறி அதிலிருந்து வெளியில் வர வேண்டும். எனது வேலைகளை சரியாக முடித்துவிடுவேன் என டார்கெட் வைத்து செயல்பட துவங்குங்கள். 

* நாம் எட்ட வேண்டிய உயரம் எது என்ற விஷயம் பலருக்கும் தெரிந்திருக்கும். பெரிய விஷயங்களுக்காக முயற்சிக்காமல் சின்னச் சின்ன பிரச்னைகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் சாதிப்பதற்கு பதிலாக சமாளிப்பது மட்டுமே வேலையாகிவிடுகிறது. பெரிய இலக்குகளை வைத்துக் கொண்டு அதற்கான முயற்சிகளில் இறங்கும் போது நம்மை சுற்றியிருக்கும் சின்னப் பிரச்னைகள் காணாமல் போகும்.

* உங்கள் மனதில் புழுதி கிளப்பி புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் பயம் மட்டுமே நீங்கள் இல்லை. ஆம் உங்களுக்குள் இதைத் தாண்டி பல திறன்கள் இருக்கின்றன. நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஸ்பெஷல் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். சிறுவயதில் நீங்கள் இறங்கியடித்து வாங்கிக் குவித்த விருதுகளை திரும்பிப் பார்க்கலாம். உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் பாசிட்டிவ் மான்களை எல்லாம் தப்படி எழுப்புங்கள். மனம் உற்சாகமாய் துள்ளிக் குவிப்பதை உணரலாம். நீங்கள் எவ்ளோ ஸ்பெஷலான ஆள் என்பது புத்தியில் உறைக்கும். 

* உங்களைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனித்தால் புரியும். உங்களின் மிக நெருங்கிய நபர்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் கடக்கும் விதம் உங்களையும் யோசிக்க வைக்கும். அவர்களுக்கும் உதவ முயற்சி செய்யுங்கள். உங்களை எடைபோட்டுப் பார்த்து எனர்ஜி ஏற்றிக் கொள்ளலாம். உங்களது பயம் இப்போது பறந்தோடியிருக்கும். 

* உங்கள் மீது உண்மையில் அக்கரை உள்ளவர்களோடு நேரம் செலவளிக்கலாம். நம்பிக்கை உள்ளவர்களிடம் நீங்கள் பேச நினைப்பவற்றை பகிர்ந்து கொள்ளலாம். மனம் லேசாவதுடன் அடுத்த பறத்தலுக்கும் ரெடியாகும். உங்களுக்குள் இருக்கும் 5 குணங்களை மேம்படுத்தும் கோலங்கள்!


-யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement