Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு இதெல்லாம் முக்கியம்! #GoodParenting

குழந்தைகள் பாதுகாப்புக்கு

குழந்தைகள் பாதுகாப்பு குறித்துப் பேசிக் கொண்டிருப்போம். ஆனால் அவர்களின் பாதுகாப்பற்ற சூழலுக்கான காரணங்கள் குறித்து யோசித்திருக்கிறோமா?

இதுவரையிலான குழந்தைகள் கடத்தல் சம்பவங்களின் அடிப்படையில், கடத்தல் எப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்துப் பார்த்தால், அதிர்ச்சியான தகவல்களே இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

''குழந்தைக் கடத்தலுக்கு முக்கிய காரணம்... பெற்றோர்கள்தான். முன்பின் தெரியாதவர்களைவிட குழந்தைக்கு நன்கு பரிட்சயப்பட்டவர்களாலேயே குழந்தைகள் அதிகளவில் கடத்தப்படுகிறார்கள்’’ என்கிறார் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து நெறிமுறைப்படுத்தப்பட்ட செயல்திட்டம் உருவாக்கி இருக்கும் ஃபிஸிக்ஸ் நிறுவனத்தின் திட்ட குழு தலைவர் பாரதி. குறைந்த பட்சமாக நாம் குழந்தைகள் மீது எடுத்துக் கொள்ளும் அக்கறையே அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்னும் அவர் சில ஆலோசனைகளையும் நமக்கு வழங்குகிறார்.

 

குழந்தை

''டிரைவர் முன்பாக வீட்டின் பணம் மற்றும் நகை இருப்பு பற்றி பேசுவதோடு மட்டுமில்லாமல்  பணியாட்கள் முன்பாக பணத்தை எண்ணுவது, அவர்களை வங்கி சம்பந்தமான வேலைகளுக்கு அனுப்புவது, பெருமைக்காக சொத்து விவரங்களைப் பொதுவெளிகளில் பேசுவது... இவையெல்லாம் அவர்களுக்கு பணத்தின் மேல் ஆசையைத் தூண்டும் செயல்கள். இது மட்டுமல்லாமல், பள்ளி, டியூஷன் என குழந்தை எங்கு, எப்போது செல்கிறது என்பதில் இருந்து, அதன் விருப்பு, வெறுப்புகள் வரை பொதுவெளியில் பகிரும்போது, அவை குழந்தைக் கடத்தல்களுக்கு காரணமாகின்றன.அதனால், தங்கம், வெள்ளி, உள்ளிட்ட உயர்ந்த மதிப்புள்ள ஆபரணங்களைக் குழந்தைகளுக்கு அணிவித்து பள்ளிக்கு அனுப்புவது கூடவே கூடாது.

ரத்த வகை, அலர்ஜி மருந்துகள் உள்ளிட்ட குழந்தைகளின் மருத்துவத் தகவல்களை அறிந்துவைத்திருப்பது அவசர நேரத்தில் உதவும்.  குழந்தைகளின் தினசரி செயல்பாடுகளிலும், பழக்கவழக்கங்களிலும் திடீர் மாற்றம் எதுவும் தென்படுகிறதா என்பதை பள்ளியும் பெற்றோரும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அப்படி இருந்தால், இருதரப்பும் உடனடியாக அதைப் பற்றி தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டும்.  புதிய நபர்கள், மூன்றாம் நபர்களிடம் எந்தளவுக்கு தூரம் காக்க வேண்டும் என்பதை குழந்தைகளிடம் தொடர்ந்து அறிவுறுத்தவும். குழந்தைகளின் தேவைக்கு அதிகமான பணத்தை பாக்கெட் மணியாக பள்ளிக்குக் கொடுத்தனுப்ப வேண்டாம். குழந்தைகளுக்கு வீட்டு முகவரி, குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்களை எவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித்தர முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் சொல்லித் தரவும்.

திடீரென இயற்கை சீற்றத்தாலோ அல்லது வன்முறையின் காரணமாகவோ பள்ளிக்கு அனுப்பப்பட்ட குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி பெற்றோர்களுக்கு மெசேஜ் அனுப்புகிறது கல்வி நிறுவனங்கள். வேலைக்குச் சென்ற பெற்றோர்கள் பதட்டம் அடைகிறார்கள். வீட்டில் இருக்கும் பெற்றோரே என்றாலும் டிராபிக்கை கடந்து குழந்தைகளை அழைத்து வருவதற்குள் படாதபாடு படுகிறார்கள். சில பள்ளிகள் தாங்கள் நியமித்திருக்கும் பள்ளி வாகனங்கள் மூலம் குழந்தைகளைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தாலும் பெரும்பாலான பள்ளிகள் அப்படி செய்வதில்லை. குழந்தைகள் நலனில் பெற்றவர்களுக்கு தேவைப்படும் அதே அக்கறை பள்ளி நிர்வாகத்திற்கும் அவசியம் தேவை.

இயற்கை சீற்றம், தவிர்க்க முடியாத அசம்பாவிதங்கள் நடக்கும் சூழல்களில் பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிப்பதுடன், அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை குழந்தைகளைப் பயமுறுத்தாமல், பதட்டம் ஏற்படுத்தாமல் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கி அவர்களைப் பாதுகாப்பாகவும், கவனத்துடனும் அணுகுவது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும். இவற்றை பின்பற்றினாலே குழந்தை கடத்தலை நாம் ஒழிக்கமுடியும்’’ என்றார்.


- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close