Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒயின் ஃபேஷியலுக்கும் ஹன்சிகா ஸ்கின் கலருக்கும் என்ன சம்மந்தம்?!

Hansika

ருமம் புதுப்பொலிவுடனும் பளபளப்புடனும் இருக்க பார்லர்களில் ஃபேஷியல் சர்வீஸ் செய்யப்படுகிறது. ஃபேஷியல்களில் பல வகைகள் உண்டு. வறண்ட சருமம், எண்ணெய் சருமம் என சரும வகைகளுக்கு ஏற்ப யாருக்கு என்ன மாதிரியான ஃபேஷியல்கள் பொருந்தும் என்பதை சரி பார்த்துக் கொண்டு ஃபேஷியல் செய்து கொள்வது அவசியம். அந்த வகையில் ஒயின் ஃபேஷியல் யாரெல்லாம் செய்து கொள்ளலாம் என்பது குறித்துப் பேசுகிறார் ‘ஸ்டைல் ஸ்டூடியோ’ உரிமையாளர் ராதா.

''முகம் நல்ல பிரைட்னெஸ் மற்றும் பளப்பளப்புடனும் இருக்க இந்த ஒயின் ஃபேஷியலை பயன்படுத்தலாம். இதை ஃபேர் ஸ்கின் கொண்டவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஃபேர் ஸ்கின் (Fair Skin ), வீட்டி ஸ்கின்,  (Wheaty Skin), டார்க் ஸ்கின்(Dark Skin) என சருமத்தின் நிறத்தை வகைப்படுத்துவோம். இதில் டார்க் ஸ்கின் உள்ளவர்கள் இந்த ஃபேஷியலை பயன்படுத்தவேண்டாம். வீட்டி ஸ்கின் என்று சொல்லக் கூடிய மாநிறம் கொண்டவர்கள் பயன்படுத்தும் போது ஃபேர்னெஸ் கிடைக்காது. ஆனால் முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். ஃபேர் ஸ்கின் கொண்டவர்கள் பயன்படுத்தும் போது நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

முகப்பொலிவு, புத்துணர்ச்சி, ஃபேர்னெஸ் ஆகிய பலன்களுடன் ஸ்கின் டைட்டினிங் கிடைக்கும். அதாவது முகத்தில் உள்ள தசைகள் தொய்வடைந்து இல்லாமல் இறுக்கமாகும். இதனால் முகவடிவமும் அழகுடன் தெரியும்.

இந்த ஒயின் ஃபேஷியல் கிரீமுடன் நல்ல தரமான ஒயினை சிறிதளவு கலந்து ஃபேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் புதுப்பொலிவாகும்.

இந்த ஃபேஷியலை பார்லர்களில் 45 நிமிடங்கள் செய்வார்கள். பார்லரின் தரத்துக்கு ஏற்றப்படி 800 ரூபாயில் இருந்து இதன் சர்வீஸ் சார்ஜ் அமையும். முகப்பரு உள்ளவர்களும் இதை செய்து கொள்ள பயப்படத் தேவையில்லை. இந்த ஃபேஷியல் செய்யும் போது தவறாமல் ஹேர் வாஷ் செய்து கொள்வது கட்டாயம். இல்லாவிட்டால் தலைமுடியில் உள்ள பொடுகு மீண்டும் முகத்தில் பட்டு முகம் பொலிவை இழக்கக் கூடும்.

இந்த ஃபேஷியல் நல்ல பலனை கொடுக்க வேண்டும் என்றால் ஹன்சிகா போல  ஃபேர்னெஸ் கொண்டவர்கள் பயன்படுத்துவதே சரியாக இருக்கும். அதனால் உங்கள் நிறத்தையும் சரும வகையையும் தெரிந்து கொண்டு ஃபேஷியல் செய்து கொண்டால் ஆல்வேய்ஸ் பியூட்டி கேரண்டி!

- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement