Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொலுசு டூ தாவணி... புகழ் பாடும் 15 தமிழ் சினிமா பாடல்கள்!

பாடல்கள் என்றால் அதில் வர்ணனைகள் இல்லாமலா? பெண்களை வர்ணிக்கும் பாடல்கள் எப்போதும் தனி அழகுதான். அதிலும் பெண்கள் அணியும் ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் வைத்தே அவர்களுக்கான பாடல்களைப் படைத்திருக்கிறார்கள் தமிழ்த்திரைப்பட  பாடலாசிரியர்கள். அந்த வகையில் ஹிட் அடித்த பாடல்களின் தொகுப்பு இங்கே!

வெள்ளி கொலுசு மணி..: கவுதமியின் துள்ளலான ஓட்டத்துக்கு நடுவில் பளிச்சிடும் கொலுசுக்கும் பாடலில் வரும் அருவிக்கும் அத்தனைப் பொருத்தம். பார்க்கப் பார்க்க அத்தனை பரவசம். பாடலின் வரிகளுக்கு ராமராஜனின் உதடு அசைவுகள்தான் இங்கே ஹைலைட். கேட்டுப் பார்த்து ரசிக்க!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு!: கொடி பறக்குது திரைப்பட பாடல் இது. ரஜினிகாந்த் அமலா இருவரின் டூயட்டில், பாடல் முடியும் வரை கலர் கலர் சேலைகள் அந்தரத்தில் பறந்து கொண்டிருக்கும். கலர் அள்ளும் சேலைப் பாட்டு!

காதோரம் லோலாக்கு: பிரபு, சுகன்யாவை தோளில் தூக்கிக் கொண்டு நடக்க... சுகன்யாவின் காதில் தொங்கும் லோலாக்கு ( ஜிமிக்கி) க்ளோசப்பில் ஆட்டம் போடும் பாருங்க. செம!. ‘சின்ன மாப்பிள்ளை’ படத்தில் வரும் இந்த பாடலைப் பார்த்து சுகன்யா அணிந்திருந்த இரண்டு அடுக்கு லோலாக்கு போலவே நகைக்கடைகளில் தங்களுக்காக ஆர்டர் கொடுத்தார்கள் பெண்கள் என்பது தனிக்கதை.

வளையோசை கலகலவென..!: கமலஹாசன்-அமலா காம்பினேஷனில் இது வளையல் ஓசையின் பாடல் மட்டும் அல்ல. காற்றின் பாடல். காதலின் பாடல். பாடலின் ஆரம்பத்தில் காற்றோடு கலந்து கேட்கும் வளையல் சத்தமும் காற்றுக்கு அசையும் சேலையின் ஓசையும் இந்த பாடலின் ஹைலைட். அப்புறம்  கமலின் தாடியும் அப்போது ஃபேமஸ்!

பொட்டு வச்ச ஒரு வட்ட நிலா..: கையில் இருக்கும் பொருளை வைத்தே தாளம் போட்டு, கதாநாயகியின் பொட்டு வைத்து வடிவமைக்கப்பட்ட பாட்டு.மேடையில் பாடும் போதே மனக்கண்ணில் விரியும் திரையில் மூழ்கித் திளைக்கும் காதல் வரிகள் கிளாஸிக். கல்லூரிக் காதல்களில் இதயம் முரளிக்கு எப்பவும் தனி இடம் உண்டு.

தாவணிப் போட்ட தீபாவளி..: தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு இந்த இரண்டும் தான் உடனே ஞாபகத்துக்கு வரும். சரி.. அதென்ன தாவணி போட்ட தீபாவளி என்கிறீர்களா? நாயகியாக வரும் மீரா ஜாஸ்மின் சேட்டை, அழகு என இரண்டுமாய் கலந்து கட்டி பெர்ஃபார்மன்ஸில் பிண்ணி எடுத்திருப்பார். ஒரு திருநாளே தாவணியில் வருகிறதென கற்பனை செய்து பாருங்களேன்..சூப்பர்ல!

முத்துமணி மாலை: எப்பவோ அறுந்து விழுந்த முத்து மணிகளையெல்லாம் கோத்து, முதல் இரவின் முதல் ஸ்பரிசத்தில் கழுத்தில் அணிவிக்கும் போது சிரிக்கும் பல்வரிசையும் முத்துமணி மாலையும் ஒன்றுகொன்று இயல்பாய் உவமையாகிப் போவதுதான் இந்த பாடலின் வித்தை. எத்தனை அணிகலன்கள் அணிந்தாலும் முத்துமாலை எப்பவும் ஸ்பெஷல் தான்.

மூக்குத்திப் பூ மேல: சரிதா- பாக்யராஜின் கலக்கல் கானம் இது. சரிதா போட்டிருக்கும் மூக்குத்தியும் இயல்பாய் நகரும் பாடலின் வரிகளும் எவர் க்ரீன் கிளாசிக். ‘’மூக்குத்திப் பூ மேல காத்து உட்கார்ந்து பேசுதம்மா... அது உட்கார்ந்து பேசயிலே தேனு உள்ளூற ஊறுதம்மா...’’

ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா..: ஒட்டியாணம் செய்து தருகிறேன். பதிலுக்கு நான் ஒட்டிக் கொள்ள உன்னிடத்தில் இடம் தருகிறாயா என நாயகன் கேட்கிறான். அட ..எதுக்கு ஒட்டியாணமெல்லாம்? உன்னோட ரெண்டு கைகள் இருக்கே போதாதா? என்கிறாள் நாயகி. பரிசாய் தருவதென்றால் அது நகைதானா என்ன? காதல் போதுமே என்கிறது ‘அருள்’ படத்தின் இந்த கொடுக்கல் வாங்கலாய் தொடுக்கப்பட்டிருக்கும் பாடல்.

சிவப்பு லோலாக்கு குலுங்குது..குலுங்குது!: லோலாக்கு, புல்லாக்கு என ராஜஸ்தான் ஆபரணங்களால் கண்ணை கவரும் அற்புத பாடல். ஒட்டகப் பல்லாக்கின் மீது நாயகன் பாடும் பாடலில் ஆபரணங்கள் மட்டுமல்ல ஒரு மாநிலத்தின் கலாச்சாரமே ஒரு சுற்று வந்து போகும். ஒன்ஸ் மோர் கேட்க வைத்த தல பாடல்!

என்னடி முனியம்மா உன் கண்ணுல மை!: ‘’கண்டாங்கி பொடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு... இடுப்புல சொருகுற என் கண்ணம்மா.. அது கொசுவம் அல்ல என் மனசு பொன்னம்மா’’ - பக்கா கிராமிய வரிகளுக்கு ஈடுகொடுக்கும் இசை, வயக்காட்டு லொகேஷன் என அசத்தும் பசுமைப் பாடல். கண் மையில் ஆரம்பித்து கொசுவம், கருகமணி என ஒரு கிராமத்துப் பெண்ணை கண்முன் நிறுத்தும் இந்த பாடல் எப்பவுமே டாப் தான்.!

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா..: கறுப்பு வெள்ளை கலக்கல் இது. ‘’என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்.. ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்துவிட்டாலும்.. மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும்..நான்  மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்’’ஆடையை தாண்டிய ஆன்மாவுக்கான வரிகள் கொண்ட பாடல்!

 

- பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close