Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொழு கொழு குழந்தையின் பெற்றோர் கவனிக்க #GoodParenting

குழந்தைகள்

குழந்தைகள் ஒல்லியாக இருப்பதை உடல் நலக் குறைபாடாக கருதுவதன் விளைவு... ஒல்லியாக இருக்கும் குழந்தைகளை இஷ்டத்துக்கு சாப்பிட அனுமதிப்பது...என தன் குழந்தையை குண்டாக்க அத்தனை பிரத்யேக முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள் பெற்றோர்கள். குழந்தைகள் குண்டாக இருப்பது பெற்றோர்களுக்கு வேண்டுமென்றால் சந்தோஷத்தைத் தரலாம். ஆனால் குழந்தைகளின் நலனுக்கு...

ஏன் இந்த குண்டு பிரச்னை?
பிறந்த குழந்தை முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் குடித்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குழந்தைகள் ஆறு மாதத்தை எட்டியதும் சத்துமாவு கஞ்சி, இட்லி, சாதம் என படிப்படியாக உணவை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.  
ஒரு வயதான குழந்தை 10 கிலோ எடை இருக்கலாம். 13 வயதில் 39 முதல் 42 கிலோ வரை உடல் எடை இருப்பது ஆரோக்கியமே என மருத்துவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு அதிகமாக கொழுப்பு நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதால், அவை செரிமானம் ஆகாமல் உடலின் பல இடங்களில் தேங்கி கொழுக் மொழுத் தோற்றத்தை தருகிறது. விளையாட்டு, உடற்பயிற்சி எதுவும் இல்லாத குழந்தைகளுக்கு அப்படிச் சேரும் கொழுப்பு மிக மோசமான விளைவுகளை தரும். 

கொழுக் மொழுக் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்?

குண்டாக இருக்கறோம் என்கிற எண்ணமே கொழுக் மொழுக் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்கிறது. உடல் எடை அதிகம் இருப்பதால்,  மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல் முடங்கிப் போகின்றனர். போதிய உடற்பயிற்சி இன்மையால் சுறுசுறுப்பு இன்றி மந்தமாக காணப்படுவார்கள். படிப்பில் கவனக்குறைவு ஏற்படும். தாழ்வு மனப்பான்மையால் எந்தப் போட்டிகளுக்கும் போகாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். தனக்குள் இருக்கும் தனி திறன்களை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் யோசிப்பதில்லை.

வீடு, சுற்றம், பள்ளி எல்லா இடத்திலும் ‘நீ குண்டா இருக்க’ என்ற வார்த்தை எரிகல்லாய் மாறி அவர்களை வதைக்கிறது. மனசு முழுக்க நெகட்டிவ் எண்ணங்களால் நிரப்பப்பட்டு எதிர்காலமே இருண்டு போன மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர். மற்ற குழந்தைகளைப் போல் அழகாக ஆடை உடுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற எண்ணம் மனதில் வெறுப்பை உருவாக்கும். இது போன்ற காரணங்களால் இவர்களது நட்பு வட்டம் சுருங்கும். இத்தோடு மன அழுத்தம், அதிக கொழுப்பு, சிறு வயது சர்க்கரை நோய், படிப்பில் நாட்டம் இன்மை என இவர்கள் வாழ்க்கையே பிரச்னையாக மாறிப் போகிறது. 

குண்டு பாப்பாக்களின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் எடையைக் கூட்டி விட்டு, குறைப்பது அவ்வளவு எளிதில்லை. குழந்தையில் இருந்தே உடல் எடையை ஏற்றாத உணவுத் திட்டத்துக்கு பழக்கப்படுத்தலாம். உணவின் போது அரிசி உணவோடு பல வித தானிய உணவுகளை பழக்கப்படுத்தவும். காய்கறியின் அளவு அதிகம் இருக்கட்டும். கீரை வகைகளையும் ஸ்நாக்ஸ் வடிவத்தில் மாற்றிக் கொடுத்து பழக்கப்படுத்தலாம். பாக்கெட் உணவுகள், துரித உணவுகள் பக்கம் திரும்பியும் பார்க்க வேண்டாம். அவற்றை ஏன் சாப்பிடக் கூடாது, சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதையும் சொல்லி வளர்க்கலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து யுடியூப் வீடியோக்கள் வழியாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். ஸ்லிம்மாக இருப்பவர்கள் டயட், லைப் ஸ்டைல் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் தெளிவுபடுத்தலாம். இதற்கான ரோல்மாடலாகவும் பெற்றோர் மாற வேண்டும். வீட்டின் உணவுத் திட்டத்தையே குழந்தைகளுக்கானதாக மாற்றி விடலாம். ஆரோக்கியத்தை அள்ளித்தரும் உணவுகளை பிடிக்கும் சுவையில் தருவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தலாம். மனதளவில் மாற்றம் ஏற்பட்டு விட்டால் போதும். மற்ற எல்லாம் எளிதாகி விடும். குழந்தைகளை வருத்தாத எளிய உடற்பயிற்சிகளை அறிமுகம் செய்யலாம். அது டான்ஸ், விளையாட்டு, யோகா அல்லது எதுவாகவும் இருக்கலாம். அவர்கள் விரும்பும் வகையில் உடல் உழைப்பை செலுத்தவும் வாய்ப்பளிக்கலாம். 

 

- யாழ் ஸ்ரீதேவி 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close