Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையைக் களைவது எப்படி? #GoodParenting

சிறுவன்


பெரும்பாலான குழந்தைகளுக்கும் தாழ்வு மனப்பான்மை பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதனால் பெரிய நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டிய குழந்தைகளும், தாழ்வு மனப்பான்மை காரணங்களால் தன்னைத்தானே சுருக்கிக் கொள்கிறார்கள் எனக் கூறும் உளவியல் நிபுணர் முனைவர் நப்பின்னை, குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளிவர ஆலோசனைகளைக் கூறுகிறார். 
 
''நம் குழந்தைகள் மனதில் நாமே தாழ்வுமனப்பான்மை ஏற்பட முக்கிய காரணமாகிவிடுகிறோம். நிறத்தில் ஆரம்பித்து நப்பின்னைபடிப்பு வரை என்றாவது ஒரே ஒரு நாள் கூட, தன் குழந்தையை குறைகூறாத பெற்றோர்கள் இங்கு குறைவே. 

அதுநாள்வரை பிளஸ் மைனஸ் என்கிற விஷயத்துக்கே போயிருக்காத குழந்தைகள், தன்னுடைய பெற்றோரே தன்னை குத்தி காட்டும்போது மனம் உடைந்து போகிறார்கள். அதன் விளைவு, தன்னைவிட பலம் பொருந்திய நபர்களிடமும், இடங்களிலும் இருந்து ஒதுங்கியோ அல்லது பழகுவதிலும் அணுகுவதிலும் தயக்கத்துடனே இருப்பார்கள். இதுபோன்ற எண்ணத்தை ஒருபோதும் பெற்றோர்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்திவிடக்கூடாது.

என் பையன் சரியாவே படிக்க மாட்டீங்கிறான், எந்த ஒரு விஷயத்துலயும் பெர்ஃபார்ம் பண்ண மாட்டீங்கிறான் என்பதுதான் இன்றைக்கு பல பெற்றோர்களின் குற்றச்சாட்டும், புலம்பலும். இதற்குக் குழந்தைகளிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மைதான் பிரதான காரணமா இருக்கும். 'நீ ஏன் உன் அண்ணன்/ அக்கா/ தம்பி/ தங்கை மாதிரி இல்ல. அவங்களுக்குச் செய்வதைப் போலத்தானே உனக்கு செய்றேன்' என்று பல பெற்றோர்கள் சொல்வதே விநோதம்தான். ஒரே வயிற்றில் பிறந்தாலும் நாம் ஒரே மாதிரியான எண்ணத்துடனாகவா வளர்ந்தோம்? நமக்கு தனித்தனி எண்ணங்கள், குணங்கள் இருக்கின்றன அல்லவா? அதே போன்ற எண்ணமும் நம் பிள்ளைகளிடம் இருக்கதான் செய்யும். 

''நீ படிக்கலைனா உன்னை எல்லாம் ஷேமா பார்ப்பாங்க... ஷேம் ஷேம்னு சொல்லி சிரிப்பாங்க" என்பது போன்ற வார்த்தைகளை ஒருபோதும் குழந்தைகளிடம் உதிர்க்காதீர்கள். அவை படிப்படியாக குழந்தைகளின் மனதில் பதிந்து, அழுத்தத்தை உண்டாக்கி 'படிக்காவிட்டாலே/ படிப்பில் மார்க் குறைந்தாலே உலகம் தன்னை கண்டுசிரிக்க ஆரம்பித்துவிடும் என்று தன்னை நத்தை போன்று கூட்டுக்குள் ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள். 

தன்னம்பிக்கையை குழந்தைகளிடம் வளர்க்க, 'நீ நல்லா படி. தைரியமா கிளாஸ்ல பேசு. உனக்கு தெரிஞ்சதை தெரியும்னு சொல்லு.. தெரியாததை தைரியமா தெரியாதுனு சொல்லு. அதனால மத்தவங்க சிரிச்சாலும் கவலைப்படாத" என்று அவர்களை தைரியப்படுத்துங்கள் அப்போதுதான் வாய் திறந்து பேசுவார்கள். எதையும் தைரியமாக பேசத் தெரிந்தாலே குழந்தைகளின் உள்ளே இருக்கும் பயம் போய்விடும். பயம் அகன்றாலே தன்னம்பிக்கை பிறக்கும்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற நினைப்பு குழந்தைகளிடம் இருந்தால் அவற்றை பேசி பேசி கரைத்துவிடுங்கள். 'மத்தவங்களுக்காக நாம வெயிட் பண்ணக்கூடாதுடாம்மா. நமக்காக மத்தவங்க யோசிக்கவோ, வெயிட் பண்ணவோ, நம்மை நினைச்சுகிட்டோ இருக்க மாட்டாங்க. அதனால மத்தவங்க பத்தி கவலைப்படாத. படிப்புல விடாம கவனம் செலுத்து. உன்னால முடியுற வரைக்கும் படி. படிக்காம இருக்கக் கூடாது. ஆனா மார்க் வைச்சு அம்மாவோ/ அப்பாவோ உன்னை எடை போட மாட்டோம்.  

உன்னால படிக்க முடியலைனா சொல்லு அம்மாவோ/ அப்பாவோ ஹெல்ப பண்றோம்" என்று அவர்கள் உடையும்போதோ, தயங்கும்போதோ ஆறுதலாக நாலைந்து வார்தைகள், படிக்க கொஞ்சம் ஹெல்ப், திறமைகளை கண்டெடுக்க சிறிது முனைப்பு இவை போதும்... எளிதாக குழந்தையின் தன்னெம்பிக்கைய மீட்டெடுத்து விடலாம்.

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close