Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இல்லத்தரசிகளுக்கு இப்படி ஒரு பிரச்னையா?

இல்லத்தரசிகளுக்கு

வ வீட்டுலதான இருக்கா... அவளுக்கு என்ன பிரச்னைகள் இருக்கப்போகுது என்பதுதான் இல்லத்தரசிகளை பற்றிய பொதுவான அபிப்ராயம். ஆனால் அவர்களும் மனுஷிகளே... வீட்டில் இருப்பதாலேயே அவர்களின் உணர்வுகளும், மனப்பிரச்னைகளுக்கும் மருந்திட வேண்டியது நாம்தான் என்கிறார் மருத்துவர் சசிக்குமார். இல்லத்தரசிகள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் தீர்வுகளை பட்டியலிடுகிறார்: சசிக்குமார்

’’ * வீட்டில் இருப்பதால் வேலைகளை விரைந்து முடிக்காமல் அதிக நேரம் உழைக்கின்றனர். ஓயாத உழைப்பு ஒரு வித சலிப்பினை ஏற்படுத்தும். 

* சரியான நேரத்துக்கு உண்பதில்லை. நேரம் கெட்ட நேரத்தில் உண்பதால் உடல் எடையும் அதிகரிக்கிறது. 

* வெறுமையின் பாதிப்பில் இருந்து விடுவித்துக் கொள்ள கணவன், குழந்தையிடம் அந்த எரிச்சலை வெளிப்படுத்துகின்றனர். 

* அதிகம் டிவி சீரியல் பார்ப்பதால் வீட்டில் உள்ளவர்களின் குணங்களை சீரியல் கேரக்டர்களோடு ஒப்பிட்டு எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்கின்றனர். இயல்புக்கு மாறான அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. 

* வெறுமையின் தாக்கத்தால் தனது தனித்திறன்களையும் மறந்து வீட்டில் உள்ள எல்லோருமே தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவமதிப்பதாகவும் உணர்கின்றனர். 

* வீட்டில் கணவனோ, குழந்தையோ விளையாட்டுக்காக அவர்களது குறைகளை வைத்து ஜோக் செய்தால் கூட ஷாக் ஆகும் மனநிலையே இவர்களிடம் இருக்கும். 

* வேலைக்கு செல்லும் பெண்கள் பலரையும் சந்திப்பதால் மற்றவர்களை எடை போட்டுப் பார்த்து புரிந்து கொள்கின்றனர். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இது போன்ற புரிதல் இருப்பதில்லை. 

* வீட்டில் தானே இருக்கிறோம் என்று தன்னை பராமரிப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் எடை கூடி, தான் அழகாய் இல்லையே என்ற மன உளைச்சலில் தள்ளப்படுகின்றனர். 

* வீட்டில் இருக்கும் மற்றவர் விருப்பங்களை தேடித் தேடி நிறைவேற்றுபவர்களுக்கு தனக்கு என்ன பிடிக்கும் என்றே தெரியவில்லை. சுய மதிப்பீடு செய்யக் கூட தெளிவில்லாமல் உள்ளனர். 

* வீட்டில் இருப்பதால் பகல் நேரத்தில் தூங்குவது மற்றும் இரவு நெடுநேரம் விழித்திருப்பதும் மன உளைச்சலின் தாக்கத்தை அதிகரிக்கிறது. 

* தான் செய்யும் சிறு தவறைக் கூட ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இவர்கள் இருப்பதில்லை. 

* 35 வயதுக்கு மேல் தான் இந்தப் பிரச்னையின் தாக்கம் மேலும் அதிகரிக்கிறது. 

இது போன்ற பிரச்னையில் இருந்து வெளியில் வர பெண்கள் என்ன செய்ய வேண்டும்? 

* வீட்டில் உள்ள வேலைகளை விரைந்து முடித்து தனக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும். 

* அம்மாவை எப்படி மதிக்க வேண்டும் என்று அப்பாக்களே குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

* இல்லத்தரசியாக இருந்தாலும் சின்னதாக கண்மை, தலைசீவி, ஐபுரோ பென்சில் போட்டுக் கொள்வது, ஒரு சின்ன லிப் கிளாஸ் போன்றவைகளை போட்டு கொண்டு வெளியிடங்களுக்கு திருத்தமாக செல்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும்.

* ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களை மட்டுமே பார்ப்பதால் அது உறவுகளுக்குள் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. 

* விருப்பமான பாடல், சினிமா, ஃப்ரெண்ட்ஸ் என்று நேரத்தை அவ்வப்போது பிரித்து ரிலாக்ஸ் செய்யலாம்.

* ஹவுஸ் வொய்ப் மனம் விட்டு பேசுவதற்கான சூழலை உருவாக்குவது கணவனின் அவசியமும் கூட.  

* கணவர்களும் அலுவலக டென்ஷனை மனைவியிடம் கொண்டு வந்து கொட்டாமல் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும். 

* வீட்டில் கிடைக்கும் நேரத்தில் பெண்கள் தங்களது தனித்திறனை மேம்படுத்திக் கொள்ளும் சிறிய பிசினஸ் ஐடியாக்களை செயல்படுத்தினால் சம்பாதிக்கவும் வழி ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல் காணாமல் போகும். 

* ஹவுஸ் வொய்ப் ஜாலியாகவும், பிஸியாகவும் இருக்கும்படி தனக்கான நாட்களை திட்டமிட வேண்டும். 

* உனக்காக நான் இருக்கிறேன் என்கிற நம்பிக்கையை எப்போதும் உங்கள் மனைவிக்கு உணர்த்தினாலே போதும்.

* வீட்டில் அனைவரும் சேர்ந்து இருக்கும் நேரங்களில் மனதை பகிர்ந்து கொள்வது. வெளியிடங்களுக்கு ஒன்றாக சென்று கொண்டாடுவதும் நல்ல மாற்றத்தை பெண்களிடம் தரும்’’ என்கிறார் மருத்துவர் சசிக்குமார். மகளிர் ஆரோக்கியத்தை காப்பாற்றிய மரபும் உணவும் பற்றி தெரிந்து கொள்வோமா? 
 

-யாழ் ஶ்ரீதேவி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close