Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது... ஏன்?

மேக்கப்


ப்ப்ப்பா... இவ்ளோ மேக்கப்பா?!’ என யாராவது உங்களைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்துபோய் கேட்டால், அதை வெறும் கேலியாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நம் சருமத்துக்கான எச்சரிக்கையாகவும் அதை கவனிக்கத் தொடங்குவது நல்லது. முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அழகு சாதனப் பொருட்கள் வாங்க நிறைய செலவு செய்யும் நாம், அவற்றை சரியான அளவில் சரியான முறைப்படி பயன்படுத்துகிறோமா என்பதுதான் இங்கே கேள்வி. தேவைக்கும் அதிகமாக காஸ்மெடிக் அயிட்டங்களை அப்ளை செய்யும்போது, அவை என்ன மாதிரியான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பேசுகிறார், சரும சிறப்பு மருத்துவர் டாக்டர் ஆர்த்தி.

* ''முகத்தைக் கழுவியதும் சிலர் உடனேயே மேக்அப் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அவ்வாறு செய்வதால் நேரம் ஆக, ஆக சருமம் வறட்சி அடைந்துவிடும். அதனால் மேக்அப் போடுவதற்கு முன்பாக சன் ஸ்கீரீன் லோஷன் போடுவது நல்லது.

* எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என சருமத்தின் தன்மையைப் பொறுத்து அதற்கேற்ற அழகுச் சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால்  முகத்தில் கரும்புள்ளிகள், வெண் திட்டுகள் வரக்கூடும்.

* முகப்பரு, சரும அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை செய்யும் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. இல்லாவிட்டால் பருக்கள் முகம் முழுதுவதும் பரவலாம்.

* மேக்அப் எவ்வளவு நேரம் முகத்தில் இருக்கலாம் என்பது பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களின் தரத்தைப் பொறுத்து அமையும். பொதுவாக, முகத்தில் நீண்ட நேரம் மேக்அப்பை  தக்கவைத்துக்கொள்ள வேண்டாம். சருமத் துவாரங்கள் அதனால் தொடர்ந்து அடைபட நேர்வதால், சருமம் தன் இயல்பையும் பொலிவையும் இழந்துவிடும்.

* கண்களின் மேல் பகுதியில், இமைகளின் மீது செயற்கை இமைகளைப் பொறுத்துபவர்கள் அதை ரிமூவ் செய்யும்போது கண்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் கவனமாக எடுக்க வேண்டும். செயற்கை இமைகளில் இருக்கும் பசை சருமத்துக்கு அலர்ஜியை உண்டாக்கலாம். கவனம்!

* சருமத்துக்கு பொருந்தாத நிறங்களை முகப்பூச்சாக தேர்வு செய்ய வேண்டாம். அது பார்ப்பதற்கு உங்கள் முகத்தை உடலில் இருந்து தனித்து காட்டுவதுடன், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

* * மேக்அப் செய்துகொள்ள கொடுக்கும் கவனத்தை, அதை ரிமூவ் செய்யவும் கொடுக்க வேண்டும். தரமான மேக்அப்  சாதனங்களாக வாங்குவதுபோலவே, தரமான மேக்அப் ரிமூவிங் சாதனங்களையும் வாங்கவும். தேங்காய் எண்ணெய், க்ளென்ஸிங் மில்க் என சற்று பிரயத்தனப்பட்டு ஒவ்வொரு முறையும் மேக்அப்பை ரிமூவ் செய்ய வேண்டியது அவசியம். சொல்லப்போனால், மேக்அப் போட்டுக்கொள்வதைவிட, அதை மறக்காமல், சோம்பேறித்தனப்படாமல், முறையாக, முழுமையாக அகற்றுவதில்தன் இருக்கிறது சருமத்தின் ஆரோக்கியமும் பொலிவும்.''

ஆக, தற்காலிகமாக முகத்தில் தங்கும் மேக்அப்பிற்காக நிரந்தரமாக சருமத்தை வீணடிக்க வேண்டாம்தானே?!

-  பொன்.விமலா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement