Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மாவின் அணைப்பைத் தரும் தொட்டிலில் இடுவது ஏன் பாதுகாப்பு தெரியுமா?

 

தொட்டில்

 

குழந்தையைத் தொட்டிலில் இடுவதை நாம் ஒரு வைபோகமாகவே கொண்டாடுகிறோம். குழந்தையைத் தொட்டிலில் உறங்கவைக்கும் பழக்கம் எப்படி வந்தது என்பது பற்றிச் சொல்கிறார், இயற்கையியலாளர் அழகேஸ்வரி.

தொட்டிலும் வயல் வேலையும்!

''நம் ஆதிப் பெண்கள் விவசாய நிலத்தில் உழைத்தபோது, பிரசவித்த பெண்கள் ஓரிரு நாட்களில் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கி விடுவார்கள். வீடும், விவசாய நிலமும் சேர்ந்தே இருக்கும். வரப்பில் இருக்கும் மரத்தில் தன் புடவையைத்  தொட்டிலாகக்  கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு, வயல் வேலைகளை கவனிப்பது வழக்கம். இடையில் குழந்தை பசியில் சிணுங்கினால் அங்கேயே பால் கொடுத்து விட்டு வேலையைத் தொடர்வார்கள். இப்படித்தான் இந்த தொட்டில் பழக்கம் துவங்கியது. 

பிறந்த குழந்தைக்கு தாயின் வாசனையும், கதகதப்புமே அடையாளம். தாயின் புடவையில் தொட்டில் கட்டும் போது தாய் தன்னோடு இருப்பது போன்ற உணர்வு அதற்குக் கிடைக்கும். வேப்ப மரத்தில் ஆடும் தொட்டிலில் இயற்கையான காற்றில் குழந்தை தூங்கும். தொட்டிலில் உறங்கும் போது பூமியில் இருந்து இரண்டு அடி உயரத்தில் தூங்கும் குழந்தைக்கு எளிதாக காற்று கிடைக்கும்.  தொட்டிலில் இட்டு ஆட்டும் போது குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் ஜீரணக் கோளாறுகள் சரியாகிவிடும் எனப் பாட்டிகள் சொல்வார்கள். 

குழந்தை நலுங்கக் கூடாது என்பதற்காக, வீட்டில் மான் கொம்பில் பாரம்பர்ய தொட்டிலைக் கட்டுவதும் வழக்கம். இதற்காகவே ஒவ்வொரு வீட்டிலும் அந்தக் காலத்தில் மான் கொம்பு வைத்திருந்தார்கள். தூங்கும் குழந்தையை காத்து, கருப்பு அண்டக் கூடாது என்பதற்காக தொட்டிலின் கீழே இரும்பு மற்றும் சீமாறு ஆகியவற்றை போட்டு வைப்பதும் வழக்கமாக இருந்தது. இன்றளவும் பல வீடுகளில் தாயின் புடவையே குழந்தைக்குத் தொட்டில். அது பாதுகாப்பான உறக்கத்தை குழந்தைக்கும் தரும்'' என்கிறார் அழகேஸ்வரி. 

 

தொட்டில்

அம்மாவின் புடவையில் வீட்டின் உத்திரத்தில் மான் கொம்பில் ஆடும் தொட்டிலில் நம் பட்டுச் செல்லங்கள் 'ஆராரோ ஆரிராரோ' இசையில் கண்ணுறங்கிய காலங்கள் அவ்வளவு அழகானவை. இன்றைய ஹைடெக் அம்மாக்கள் ஆயிரங்களைக் கொட்டி வாங்கும் தொட்டிலில் கம்பிகள், ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுற்றிலும் நெட் மற்றும் ஜிப் வைத்து தைக்கப்பட்டுள்ளது. கொசுத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்காக நவீன தொட்டிலில் போட்டு நெட்டெட் கவரை ஜிப் போட்டு  மூடி விடுகின்றனர். சுற்றிலும் குட்டிக் குட்டித் தலையணைகள்... இவ்வளவும் இருந்தாலும் பாதுகாப்பற்ற சூழலில் தனியாக உறங்குவது போன்ற உணர்வையே இந்த வகைத் தொட்டில்கள் குழந்தைகளுக்கு தருகின்றன. 

தாயின் கருவறை கதகதப்பு தரும் தொட்டில்!

பாரம்பர்யமாக நாம் பயன்படுத்திய தொட்டில் அமைப்பு முறை, குழந்தையின் கருவறைக் காலத்தோடு தொடர்புடையது என்கிறார்  இயன்முறை மருத்துவர் ரம்யா. மேலும் அவர் கூறுகையில், ''பனிக்குட நீரில் நீந்திப் பழகிய அந்த செல்ல மீன்குட்டி அம்மா நடக்கும் போதும், உடல் அசைவின் போதும் ஊஞ்சலாட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும் கதகதப்பும் அதற்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும். தொட்டில் அசையும் போது, குழந்தை தன் தாயின் கருவறை அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்த உறக்கம்கொள்ளும். இடையில் தூக்கம் இடறினாலும் குழந்தை தொல்லையின்றி தூக்கத்தைத் தொடர பாரம்பர்ய தொட்டிலே சிறந்தது. 

பிரவசம் உடல் அளவிலும், மனதளவிலும் பெண்ணை புரட்டிப் போடும் ஒரு சம்பவம். பிரசவத்துக்குப் பின்னரும் வலியும், அயர்ச்சியும் உடலில் இருக்கும். பிறந்த குழந்தை பசியில் அழும் போதெல்லாம் பால் கொடுப்பதால் சரியான தூக்கம் இல்லாமல் தவிக்கும் தாயின் மனநிலை பித்துப் பிடித்தது போல் இருக்கும். ஒரு மணி நேரமாவது தொடர்ந்து தூங்க முடியாதா என்ற ஏக்கம் மனதை வாட்டும். பாரம்பர்யத் தொட்டிலில் தூங்கப்போடும் போது தாயின் அணைப்பை உணரும் குழந்தை நீண்ட நேரம் ஆழ்ந்து உறங்க வாய்ப்புள்ளது. அது தாய்க்கும் ஓய்வைத் தரும். 

தொட்டில் வகைகள்!

பழங்காலத்தில் குடும்ப வசதியை வெளிப்படுத்தும் விதமாக அம்மாவின் புடவை தொடங்கி தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மரத் தொட்டில்கள் வரை பயன்படுத்தப்பட்டன. இப்போது கடைகளில் பவுன்சிங் சேர், ராக்கி சேர், ஸ்பிரிங் தொட்டில், கேன்வாஸ் மற்றும் ஸ்டீலால் செய்யப்பட்ட பலவகை தொட்டில்கள் கிடைக்கின்றன. குழந்தை வளர வளர உணவு ஊட்டுவதற்கான சேர், பணியிடங்களுக்கு எடுத்துச் செல்ல, விமானப் பயணத்தில் எடுத்துச் செல்ல என தேவைக்கு ஏற்ப தொட்டிலின் வடிவம் மாறுபடுகிறது. பேபி கேரியர்களில் குழந்தையை தாயின் உடலோடு ஒட்டியபடி எடுத்துச் செல்லலாம். தாய் வாக்கிங் செல்ல இது போன்ற தொட்டில்கள் உதவும். 

ஹைடெக் தொட்டில்களில் குழந்தையின் சிறு அசைவைக் கூட பதிவு செய்யும் மானிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த மானிட்டரை நாம் இருக்கும் அறையில் வைத்து கண்காணிக்கலாம். குழந்தை அசைந்தால் பீப் சத்தம் கொடுக்கும். தொட்டில் மீது அல்லது குழந்தை மீது பூச்சிகள் அமர்ந்தால் சென்சார் சத்தம் கொடுக்கும். 

இத்தனை வகை தொட்டில்கள் இருந்தாலும் குழந்தைக்கு பாதுகாப்பானதையே தேர்வு செய்ய வேண்டும்'' என்கிறார் ரம்யா. ரம்யா

பாரம்பர்யத் தொட்டிலே பாதுகாப்பானது! குழந்தைகள் மீது அன்பு காட்டுவோம். அடிப்பது தீர்வல்ல... அன்பின் வழியில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி? #GoodParenting

பாக்ஸ் 
அமெரிக்காவில் 2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்டுக்கு 9,500 குழந்தைகள் தொட்டில் காயங்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 83%, குழந்தைகள் தொட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள். ஆண்டுக்கு 100 குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் அல்லது தவழும் பருவத்தில் பாதுகாப்பற்ற முறையில் தூங்குவதால் இறக்கின்றன என்ற அதிர்ச்சியையும் இந்தப் புள்ளி விவரம் தருகிறது. பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாட்டின் காரணமாக அமெரிக்காவில் 11 மில்லியன் தொட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது போன்ற ஆய்வுகள் நம் ஊரில் நடத்தப்படவில்லை. என்றாலும் குழந்தையை நவீன தொட்டிலில் இட்டு ஆட்டி தூங்க வைக்கும்போது கவனம் தேவை! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close