Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சினிமா மாதிரி எங்க காதலும் டிரெயின்லதான் ஆரம்பிச்சது!' - கலா மாஸ்டர் காதல் கதை

டான்ஸ் மாஸ்டர் கலா

''எப்ப டிரெயினைப் பார்த்தாலும் என் நினைவுகள் அப்படியே பிளாஷ்பேக்ல பயணிக்க ஆரம்பிச்சிடும். வீட்டுல எந்த விஷேசம் நடந்தாலும் கண்ணு முன்னாடி டிரெயின் வராம போகாது'' என்று ரசனையாக தன் காதல் திருமணத்தை நம்மிடம் விவரிக்கிறார் 'கிழி கிழி' டான்ஸ் மாஸ்டர் கலா.

"காதலும் பெரியவர்களோட ஆசியும் கலந்த அரேஞ்சுடு மேரேஜ் எங்களோடது. 2004வது வருஷம் மார்ச் மாசம்... ஒரு சூட்டிங்குக்காக நிறைய குரூப் டான்ஸர்களை அழைச்சுட்டு, ட்ரெயின்ல போகும் சூழல். அப்போ ஒரு காஸ்டியூம் பாக்ஸை வீட்டுலயே மிஸ் பண்ணி,அது எப்படியோ வந்து சேர்ந்தது. அவசரமா வேற ஒரு கம்பார்ட்மென்ட்ல ஏறி உட்கார்ந்தேன். அப்புறமா சகஜமாகி, பக்கத்துல இருந்தவங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.

அப்போ மகேஷ் (கணவர்) ஓரமா உட்கார்ந்து புக் படிச்சுட்டு என்னை பார்த்துட்டு இருந்திருக்கார். ஆனா நான் அவரைப் பார்க்கல. அதுக்கு பிறகு ஏப்ரல் 1-ம் தேதி ஒரு போன்கால் கால் வந்துச்சு. உங்கள ட்ரெயின்ல பார்த்தேன். நீங்க பேசுற விதம் எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்துச்சு. உங்கள பத்தி கேள்விப்பட்டிருக்கேன். எல்லார்கிட்டயும் பேசினது எனக்கு பிடிச்சுதுன்னு சொன்னாரு. இதுவும் யாரோ ஒரு ரசிகர் போலனு நினைச்சுகிட்டு பெருசா கண்டுக்கலை. அப்புறமா ரெண்டு மூணு டைம் போன்ல பேசினோம். அப்போதான் அவரும் நானும் கேரளாவுல கோட்டயத்துல இருக்கிறது தெரிஞ்சது.

மலையாள விஷூ பண்டிகையப்ப, மகேஷ் போன்ல வாழ்த்துச் சொல்லிட்டு, 'என்னோட ஃபேமிலி திருவனந்தபுரத்துல இருக்காங்க. உங்க வீட்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்க ஆசைப்படுறேன்னு சொன்னார். அப்போதான் அவரை நான் முதல் தடவையா நேர்ல பார்த்தேன். என்னை விட பயங்கர உயரமா இருந்தாரு.  அம்மாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு, எல்லோர்கிட்டேயும் ரொம்ப நாள் பழகினவர் மாதிரி ஜாலியா பேசினாரு. ஒருகட்டத்துல எங்க பேமிலி ஃப்ரெண்டாவே ஆகிட்டார்.

நாங்க ரெண்டு பேரும் அடிக்கடி போன்ல பேசுற சந்தர்ப்பம் கிடைச்சது. ஷூட்டிங்காக நான் வெளிநாடு போன டைம் எங்க அக்கா புவனேஸ்வரியை மகேஷ் சந்திச்சு பேசியிருக்காங்க. 'என்னடா வயசாகிட்டே போகுதே. எப்போடா கல்யாணம் பண்ணிக்கப்போறே'னு அக்கா கேட்டு இருக்காங்க. 'சரி உங்க தங்கச்சியை கொடுங்க. உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன்'னு அவரும் பட்டுனு சொல்லிட்டாராம். நான் படபடனு கோபப்படுற ஆள். எனக்கு டான்ஸ் தவிர்த்து வேற ஒன்னும் தெரியாது. நான் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட விஷயத்தை சொன்னாங்க. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். நீ அவர்டையும், அவரோட அப்பா அம்மாகிட்டயும் பேசிப்பாரு. பிடிச்சா ஓகே சொல்லுன்னு எங்க வீட்டுல சொன்னாங்க.

அப்படிதான் குடும்பமா எங்க வீட்டுக்கு வந்தார் மகேஷ். என்னை பார்த்ததும் மகேஷோட அம்மா  'இனி இந்த பொண்ணு என்னோட மகள் மாதிரி. அவ கண்ணுல இருந்து ஒருசொட்டுத் தண்ணி வந்தா நான் தாங்கிக்க மாட்டேன். இனி உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்'னு அவங்க பையனைப் பார்த்து சொன்னாங்க. அந்த மாதிரி ஒரு மாமனார், மாமியார் கிடைக்கிறது பெரிய குடுப்பினை. அது எனக்கு கிடைக்குதேன்னு பெரிய சந்தோஷம். உடனே நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன். அதுக்குப் பிறகாதான், அவர் என்னை ஒன் சைடா லவ் பண்ணிட்டு இருந்தது எனக்கு தெரியவந்துச்சு. அப்புறமா அப்போதுல இருந்து இப்போ வரைக்கும் நாங்க ரெண்டு பேருமே லவ் பண்ணிட்டு இருக்கிறோம்.

டான்ஸ் மாஸ்டர் கலா

ஏழு பொண்ணுங்களயும் கரை சேர்த்த எங்க அம்மா பட்ட கஷ்டம் ரொம்பவே பெருசு. நான் எப்போமே என்னைத் தவிர, என் குடும்பம், தங்கச்சி, அக்காவைப் பத்தியேதான் நினைப்பேன். மத்தவங்களைப் பத்தியே பேசிட்டு இருப்பேன். என்னோட அந்த குணம்தான் அவருக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. மூணு மாச காதலுக்குப் பிறகு, குருவாயூர்ல எங்க கல்யாணம் நடந்துச்சு. கல்யாணத்துக்குப் பிறகு செலக்டிவாதான் படங்கள்ல வொர்க் பண்ணினேன். நிறைய நேரத்தை குடும்பத்துக்குன்னு செலவிட்டேன்'' என மகிழ்ச்சிப் பொங்க கூறும் கலா மாஸ்டர், திருமணத்துக்குப் பிறகான காதலையும் சொன்னார்.

''எங்க காதல்னாலே அது கோயில்தான். நிறைய கோயிலுக்கு போவோம். அடிக்கடி வெளிநாட்டுக்குப் போவோம். நிறைய கிஃப்ட் கொடுத்து சந்தோஷப்படுவோம். ஒவ்வொரு வாலன்டைன்ஸ் டே அன்னிக்கும் கட்டாயமா ஒருத்தருக்கு ஒருத்தர் கிஃப்ட் கொடுத்து வாழ்த்துச் சொல்லிக்குவோம். குறிப்பா போன வருஷ வாலன்டைன்ஸ் டேக்கு கேரளாவுக்குப் போய் எனக்காக நடன விநாயகரை வாங்கிட்டு வந்து மகேஷ் கிஃப்ட் பண்ணினாரு. அது என்னால மறக்கவே முடியாது. அவருக்கு ஃபார்சுனர் கார் பிரசன்ட் பண்ணினேன். அது அவருக்கும் மறக்க முடியாத கிஃப்ட். அந்த கார்ல முதல் தடவையா ஜோடியாக குருவாயூர் கோயிலுக்குப் போனது மறக்க முடியாத ஒரு பயணம்.

எங்களுக்குள்ள எதாச்சும் சண்டைன்னா, ரெண்டு பேரும் அரை நாள் பேசாம அமைதியா இருப்போம். அந்த அமைதிதான் எங்க கோபத்தை சமாதானப்படுத்தும். ஒரு வேலையில கமிட் ஆகிட்டா அதுல சாப்பாடு தண்ணீ ர் இல்லாம உழைச்சு கொடுப்பேன். ஏன் இவளோ வருத்திக்கிறனு என் மேல மகேஷ் கோபப்படுவார். எங்களைப் பொறுத்தவரை அவருக்கு நான், எங்க குழந்தை வித்யூத் ரெண்டு பேரும்தான் உயிர். இப்படி அன்பான கணவர், குழந்தையோட வாழ்க்கை சூப்பரா போயிட்டு இருக்கு.

ரெண்டு நாளைக்கு முன்னாடி மலையாள 'ஒப்பம்' படத்துக்காக எனக்கு வனிதா மேகஸினோட பெஸ்ட் கோரியோகிராஃபர் அவார்டு கிடைச்சு இருக்கு. எனக்கு அந்த விருது கிடைச்சதை, தன்னோட எல்லா ஃப்ரெண்ட்ஸ்க்கும் சொல்லி சந்தோஷப்பட்டார், மகேஷ். அந்த அளவுக்கு என்னோட வெற்றியை தூக்கி வெச்சுக் கொண்டாடுற ஒரு கணவர் கிடைச்சது புண்ணியம். நேத்து மகேஷ் சர்ப்ரைஸா தங்கத்துல காசு மாலை பிரசன்ட் பண்ணி அசத்திட்டார்" என கண்களில் காதல் பொங்க பேசுகிறார் கலா மாஸ்டர்.

தொடரட்டும் உங்கள் காதல்

- கு.ஆனந்தராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close