வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:32 (17/02/2017)

சும்மா காத்திருக்கும் போது என்ன செய்யலாம் கேர்ள்ஸ்?!

கேர்ள்ஸ், பெண்கள்

னிதர்களின் வாழ்வில் நாள்தோறும் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. அதனால் நேரத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பணத்தை மிச்சப்படுத்துவதற்காக கடை கடையாய் ஏறி பேரம் பேசிய காலங்கள் காணாமல் போய் விட்டது. சேர்த்து வைத்த பணம் எப்போது வேண்டுமானாலும் செல்லாமல் போகலாம். கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்தும்கூட வேலையை விரைந்து முடிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. பணத்தின் மதிப்பையும் ‘நேரம்’ முந்திவிட்டது என்றே சொல்லவேண்டும். செல்போன் பயன்பாடு அதிகரித்த பின் கண்ட இடத்திலும் காத்திருப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. வங்கி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரிய நபர்களைச் சந்திக்க செல்லும் இடங்கள், திருமண நிகழ்ச்சிக்காக செல்லும் இடங்கள் என பொதுவான இடங்களில் இவ்வளவு மதிப்பு மிக்க நேரம் வெறுமையில் ஆவியாகிக் கொண்டிருக்கும். அப்போது மனசுக்குள் கொப்பளிக்கும் ஒரு கோபம். இது போன்ற நெருக்கடியான தருணங்களில் என்ன செய்யலாம் கேர்ள்ஸ்?.

* பணியாளர்களுக்கு யாருக்காகவோ காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், தாங்கள் அடுத்தடுத்து முடிக்க வேண்டிய வேலைத் திட்டங்களை பட்டியலிட்டு எப்போதும் பையில் வைத்திருக்க வேண்டும். காத்திருக்கும் நேரத்தினால், அந்தப் பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செய்து, அதன்படி அன்றைய நாளைத் தொடரலாம்.

* புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது மற்றும் ஓய்வு என ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் காத்திருக்கும் நேரம் உதவும். அதற்கான முன் தயாரிப்புகள் கையில் இருக்க வேண்டும்.

* குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அருகில் உள்ள இடத்தில் முடிக்க வேண்டிய வேலைகள் இருப்பின் அவற்றை முடித்து விடலாம்.

* செல்போனில் பேசி முடிக்க வேண்டிய வேலைகளை காத்திருக்கும் நேரத்தில் முடித்து விடலாம்.

* அடுத்து நடத்த வேண்டிய மீட்டிங் மற்றும் தனது வேலைத் தொடர்பான ரிப்போர்ட் தயாரிப்பது போன்ற வேலைகளுக்கு மினி லேப் டாப் கையில் இருப்பின் காத்திருக்கும் நேரம் வேலை நேரத்தின் ஒரு பகுதியாய் மாறிவிடும்.

* பரபரப்பாக வேலைக்கு கிளம்பி ஓடிக் கொண்டிருப்பதால் கணவர், நண்பர், மகள், மகன் போன்ற உறவுகளுக்கு இடையிலான செல்லமான சாட்டிங், உறவினர்களை நலம் விசாரிப்பது போன்ற வேலைகளை இந்த நேரத்தில் செய்து விடலாம்.

* இந்த மாதம் நீங்கள் முடிக்க வேண்டிய பணிகள், நிதி திட்டமிடல், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டியது என கொடுக்கல் வாங்கலில் உள்ள பிணக்குகளைச் சரி செய்ய முடியும்.

* நீண்ட நாளாய் பல பிரச்னைகள் மனதுக்குள் வட்டமிட்டு வாட்டி எடுக்கலாம். அதன் சாதக, பாதகங்கள் குறித்துப் பட்டியலிட்டு மனதை ஆசுவாசப் படுத்தலாம். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வையும் எட்டலாம்.

* இப்போது கட்டணம் செலுத்துவது எல்லாம் டிஜிட்டலுக்கு மாறி விட்டதால் வீட்டுக்கு கட்ட வேண்டிய கரண்ட் பில்லில் இருந்து அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் செலுத்திட இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

* மூளைத் திறனை மேம்படுத்துவதற்கான விளையாட்டுகளை ஸ்மார்ட் போனில் வைத்திருந்தால் இந்த நேரத்தில் கடுப்பாகி காய்வதற்கு பதிலாக மூளையை ஷார்ப்பாக்கி கொள்ளலாம்.

* நீங்கள் காத்திருக்கும் சூழலில் உள்ள பாசிட்டிவான விஷயங்களை தேடிப் பிடித்து தெரிந்து கொள்ளலாம். நடக்கும் தொலைவில் முக்கிய இடங்கள் இருப்பிலன் ரிலாக்ஸ்டாக விசிட் அடித்து சுற்றிப் பார்க்கலாம்.

* காத்திருக்கும் நேரத்தையும் திட்டமிட்டு பயன்படுத்தினால் தித்திக்கும் அல்லவா?

- யாழ் ஶ்ரீதேவி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்